• Aug 06 2025

தேசபந்து விவகாரத்தைப்போன்று தமிழ் இனஅழிப்பு விவகாரத்திலும் அக்கறை செலுத்துக - ரவிகரன் எம்.பி!

shanuja / Aug 6th 2025, 1:53 pm
image


பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் விவகாரத்தில் விசாரணைகளை மேற்கொண்டதைப்போல தமிழ் இனவழிப்பு, மனிதப் புதைகுழிகள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உள்ளிட்ட விவகாரங்களிலும் அதே அவரசரத்தையும், அதே வெளிப்படைத்தன்மையினையும், அதேநேர்மையினையும் உடனடி நீதியையும் ஏற்படுத்துமாறு வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார்.


பாராளுமன்றில்  இன்று (05) உரையாற்றும்போதே நாடாளுமன்ற உறுப்பினர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,


அரசியல் பல ஈடுபாடும் மக்கள் மயப்பட்ட அழுத்தமும் இருக்கும் போது விசாரணைகளை தொடங்கி உரியவர்களை பொறுப்புக்கூற வைக்கும் இலங்கை அரசின் திறனை அண்மைய விசாரணை அறிக்கை, அதாவது திரு. ரி.எம். டபிள்யூ தேசபந்து தென்னக்கோன் அவர்களை IGP பதவியில் இருந்து அகற்றுமாறு கோரும் குற்றச்சாட்டுகளுக்கான காரணங்கள் தொடர்பில் புலனாய்வு மற்றும் விசாரணை செய்து அறிக்கையிடுவதற்காக நியமிக்கப்பட்ட விசாரணைக்குழுவின் அண்மைய இறுதி அறிக்கை பிரதிபலிக்கிறது.


இந்த நாட்டில் சிலருக்கே நீதியும் பாதுகாப்பும் உரிமைகளும் நிலைநிறுத்தப்படுவதோடு மற்றவர்களுக்கு நிரந்தரமான நியாயக்கேடும் அநீதியும் வழங்கப்படுவது வேதனையான உண்மை. இந்த விசாரணையும் அதையே சுட்டிக்காட்டுகிறது.


அதிகார முறைகேடுகளுக்கு எதிரான இப்படியான விரைவான விசாரணைகள், தமிழர்களுக்கு எதிரான இலங்கை அரசின் வன்முறைகள் சார்ந்து இந்த நாட்டிலே நடைபெறுவதில்லை. 


நூற்றுக்கும் அதிகமான எலும்புக்கூடுகளுக்குள் உறைந்துள்ள படுகொலைகள், இறுதிப்போரில் நம்பி உங்களிடம் ஒப்படைத்த எங்களின் உறவுகளுக்கான தேடல்கள், இறுதிப்போரிலே நிகழ்ந்தேறிய இனப்படுகொலைகள் உள்ளிட்ட ஈழத்தமிழ் மக்களுக்கு உங்கள் அரசுகள் ஏற்படுத்திய வன்முறைகளுக்கும் அதிகார முறைகேடுகளுக்கும் அதிகார வல்லாளுகைகளுக்கும் எப்போது விசாரணைகளை மேற்கொள்ளப்படவுள்ளது? எப்போது நீதி கிடைக்கவுள்ளது?


IGP தென்னக்கோன் அவர்களின் விசாரணையில் நடந்ததைப்போல எங்களுக்கும் தமிழர்களுக்கும் அதே அவசரத்தையும் அதே வெளிப்படைத்தன்மையையும் அதே நேர்மையையும் உடனடி நீதியையும் ஏற்படுத்துங்கள்.


விசாரணைகளின் போது பிரதிப்பொலிஸ்மா அதிபர், குணந்தாவடு நிசாந்த த சொய்சா அவர்கள் பொலிஸ் சார்ஜன்ட் உப்புல் கொல்லப்பட்டமையை வெலிகம பொலிஸ் மூலம் குற்றவியல் விசாரணை நடாத்தப்பட்டமை தவறு என கூறியுள்ளமையும் வெளிப்படைத்தன்மையின் பொருட்டு வேறு ஒருவரை நியமித்து விசாரிப்பதே ஏற்புடையது என்றும் வாக்குமூலம் அளித்துள்ளார். அதாவது அவர்கள் அணியினரே அவர்களை விசாரிப்பது பொருத்தமற்றது என கூறியுள்ளார்.


இது தான் முறைமை. குற்றஞ்சாட்டப்பட்டவரே குற்றத்தை விசாரிப்பதை எவ்வகையில் ஏற்றுக்கொள்வது? தொடர்ந்து வரும் அரசுகள் எங்கள் மீது இனப்படுகொலைகளையும் கட்டமைக்கப்பட்ட இன அழிப்பையும் கைக்கொள்ளும் போது எங்கள் மீது நீங்கள் மேற்கொள்ளும் இம்முறைகேடுகளை நீங்களே விசாரிப்பது முறையன்று. அது ஒருபோதும் எங்களுக்கான நீதியைத்தராது. செம்மணி புதைகுழி உள்ளிட்ட படுகொலைகளுக்கு நீங்கள் கொள்ளும் மௌனமே இதற்கு சான்று.


உங்களைச் சாராத, சர்வதேச தலையீடு கொண்ட சுதந்திரமான ஒரு விசாரணையை நாங்கள் கோருகிறோம். தமிழர்கள் மீதான வன்முறைகள் மறைக்கப்படுவதையோ நீதிக்கான காலங் கடத்தப்படுவதையோ எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ள இயலாது. உண்மை வெளிவரவேண்டும். நீதி வழங்கப்படவேண்டும். -என்றார்.

தேசபந்து விவகாரத்தைப்போன்று தமிழ் இனஅழிப்பு விவகாரத்திலும் அக்கறை செலுத்துக - ரவிகரன் எம்.பி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் விவகாரத்தில் விசாரணைகளை மேற்கொண்டதைப்போல தமிழ் இனவழிப்பு, மனிதப் புதைகுழிகள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உள்ளிட்ட விவகாரங்களிலும் அதே அவரசரத்தையும், அதே வெளிப்படைத்தன்மையினையும், அதேநேர்மையினையும் உடனடி நீதியையும் ஏற்படுத்துமாறு வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார்.பாராளுமன்றில்  இன்று (05) உரையாற்றும்போதே நாடாளுமன்ற உறுப்பினர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,அரசியல் பல ஈடுபாடும் மக்கள் மயப்பட்ட அழுத்தமும் இருக்கும் போது விசாரணைகளை தொடங்கி உரியவர்களை பொறுப்புக்கூற வைக்கும் இலங்கை அரசின் திறனை அண்மைய விசாரணை அறிக்கை, அதாவது திரு. ரி.எம். டபிள்யூ தேசபந்து தென்னக்கோன் அவர்களை IGP பதவியில் இருந்து அகற்றுமாறு கோரும் குற்றச்சாட்டுகளுக்கான காரணங்கள் தொடர்பில் புலனாய்வு மற்றும் விசாரணை செய்து அறிக்கையிடுவதற்காக நியமிக்கப்பட்ட விசாரணைக்குழுவின் அண்மைய இறுதி அறிக்கை பிரதிபலிக்கிறது.இந்த நாட்டில் சிலருக்கே நீதியும் பாதுகாப்பும் உரிமைகளும் நிலைநிறுத்தப்படுவதோடு மற்றவர்களுக்கு நிரந்தரமான நியாயக்கேடும் அநீதியும் வழங்கப்படுவது வேதனையான உண்மை. இந்த விசாரணையும் அதையே சுட்டிக்காட்டுகிறது.அதிகார முறைகேடுகளுக்கு எதிரான இப்படியான விரைவான விசாரணைகள், தமிழர்களுக்கு எதிரான இலங்கை அரசின் வன்முறைகள் சார்ந்து இந்த நாட்டிலே நடைபெறுவதில்லை. நூற்றுக்கும் அதிகமான எலும்புக்கூடுகளுக்குள் உறைந்துள்ள படுகொலைகள், இறுதிப்போரில் நம்பி உங்களிடம் ஒப்படைத்த எங்களின் உறவுகளுக்கான தேடல்கள், இறுதிப்போரிலே நிகழ்ந்தேறிய இனப்படுகொலைகள் உள்ளிட்ட ஈழத்தமிழ் மக்களுக்கு உங்கள் அரசுகள் ஏற்படுத்திய வன்முறைகளுக்கும் அதிகார முறைகேடுகளுக்கும் அதிகார வல்லாளுகைகளுக்கும் எப்போது விசாரணைகளை மேற்கொள்ளப்படவுள்ளது எப்போது நீதி கிடைக்கவுள்ளதுIGP தென்னக்கோன் அவர்களின் விசாரணையில் நடந்ததைப்போல எங்களுக்கும் தமிழர்களுக்கும் அதே அவசரத்தையும் அதே வெளிப்படைத்தன்மையையும் அதே நேர்மையையும் உடனடி நீதியையும் ஏற்படுத்துங்கள்.விசாரணைகளின் போது பிரதிப்பொலிஸ்மா அதிபர், குணந்தாவடு நிசாந்த த சொய்சா அவர்கள் பொலிஸ் சார்ஜன்ட் உப்புல் கொல்லப்பட்டமையை வெலிகம பொலிஸ் மூலம் குற்றவியல் விசாரணை நடாத்தப்பட்டமை தவறு என கூறியுள்ளமையும் வெளிப்படைத்தன்மையின் பொருட்டு வேறு ஒருவரை நியமித்து விசாரிப்பதே ஏற்புடையது என்றும் வாக்குமூலம் அளித்துள்ளார். அதாவது அவர்கள் அணியினரே அவர்களை விசாரிப்பது பொருத்தமற்றது என கூறியுள்ளார்.இது தான் முறைமை. குற்றஞ்சாட்டப்பட்டவரே குற்றத்தை விசாரிப்பதை எவ்வகையில் ஏற்றுக்கொள்வது தொடர்ந்து வரும் அரசுகள் எங்கள் மீது இனப்படுகொலைகளையும் கட்டமைக்கப்பட்ட இன அழிப்பையும் கைக்கொள்ளும் போது எங்கள் மீது நீங்கள் மேற்கொள்ளும் இம்முறைகேடுகளை நீங்களே விசாரிப்பது முறையன்று. அது ஒருபோதும் எங்களுக்கான நீதியைத்தராது. செம்மணி புதைகுழி உள்ளிட்ட படுகொலைகளுக்கு நீங்கள் கொள்ளும் மௌனமே இதற்கு சான்று.உங்களைச் சாராத, சர்வதேச தலையீடு கொண்ட சுதந்திரமான ஒரு விசாரணையை நாங்கள் கோருகிறோம். தமிழர்கள் மீதான வன்முறைகள் மறைக்கப்படுவதையோ நீதிக்கான காலங் கடத்தப்படுவதையோ எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ள இயலாது. உண்மை வெளிவரவேண்டும். நீதி வழங்கப்படவேண்டும். -என்றார்.

Advertisement

Advertisement

Advertisement