இந்தியாவின் பீஹாரில் உள்ள பாடசாலை ஒன்றில் கர்ப்பப்பை மற்றும் வாய்ப் புற்றுநோய் தடுப்பூசி ஏற்றப்பட்ட 20க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பீஹாரின் பங்கா மாவட்டத்தின், அமர்பூரில் உள்ள பாடசாலையில் கல்வி கற்கும் மாணவிகள் இவ்வாறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த பாடசாலை மாணவர்களுக்கு கர்ப்பப்பை மற்றும் வாய்ப் புற்றுநோயைத் தடுக்க அரசு ஹெச்.பி.வி. எனப்படும் மனித பாப்பிலோமா வைரஸ் தடுப்பூசியைப் பரிந்துரைத்தது.
அதன்படி மாணவிகளுக்கு தடுப்பூசி போடப்பட்டது. தடுப்பூசி போடப்பட்ட சில மணி நேரத்தில், 20 க்கும் மேற்பட்ட மாணவியருக்கு வயிற்று வலி, தலைச்சுற்றல் மற்றும் சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டது.
இதனால் அதிர்ச்சி அடைந்த பாடசாலை நிர்வாகம், பாதிக்கப்பட்ட மாணவிகளை உடனே மருத்துவமனையில் அனுமதித்தனர். சிகிச்சை மேற்கொண்ட வைத்தியர்கள், மாணவர்கள் அனைவரும் நலமுடன் உள்ளதாகத் தெரிவித்தனர்.
இதற்கிடையே, மாணவர்களின் பெற்றோர் பாடசாலை வளாகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபோன்ற தடுப்பூசி போடும் போது, உடல்நலக்குறைபாடுகள் ஏற்படக்கூடுமென்றும், இதனால் பெரிய பாதிப்புகள் ஏற்படாது எனவும் வைத்தியர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து, மாணவியரின் பெற்றோர் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.
கர்ப்பப்பை தடுப்பூசி ஏற்றிய மாணவிகள் மருத்துவமனையில்; பாடசாலையை முற்றுகையிட்டு பெற்றோர் போராட்டம் இந்தியாவின் பீஹாரில் உள்ள பாடசாலை ஒன்றில் கர்ப்பப்பை மற்றும் வாய்ப் புற்றுநோய் தடுப்பூசி ஏற்றப்பட்ட 20க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பீஹாரின் பங்கா மாவட்டத்தின், அமர்பூரில் உள்ள பாடசாலையில் கல்வி கற்கும் மாணவிகள் இவ்வாறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த பாடசாலை மாணவர்களுக்கு கர்ப்பப்பை மற்றும் வாய்ப் புற்றுநோயைத் தடுக்க அரசு ஹெச்.பி.வி. எனப்படும் மனித பாப்பிலோமா வைரஸ் தடுப்பூசியைப் பரிந்துரைத்தது. அதன்படி மாணவிகளுக்கு தடுப்பூசி போடப்பட்டது. தடுப்பூசி போடப்பட்ட சில மணி நேரத்தில், 20 க்கும் மேற்பட்ட மாணவியருக்கு வயிற்று வலி, தலைச்சுற்றல் மற்றும் சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த பாடசாலை நிர்வாகம், பாதிக்கப்பட்ட மாணவிகளை உடனே மருத்துவமனையில் அனுமதித்தனர். சிகிச்சை மேற்கொண்ட வைத்தியர்கள், மாணவர்கள் அனைவரும் நலமுடன் உள்ளதாகத் தெரிவித்தனர். இதற்கிடையே, மாணவர்களின் பெற்றோர் பாடசாலை வளாகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபோன்ற தடுப்பூசி போடும் போது, உடல்நலக்குறைபாடுகள் ஏற்படக்கூடுமென்றும், இதனால் பெரிய பாதிப்புகள் ஏற்படாது எனவும் வைத்தியர்கள் தெரிவித்தனர். இதையடுத்து, மாணவியரின் பெற்றோர் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.