• May 14 2026

தெதுரு ஓயா சம்பவம் - பலி எண்ணிக்கை ஐந்தாக அதிகரிப்பு

Chithra / Nov 5th 2025, 8:36 pm
image

 

தெதுரு ஓயா சம்பவத்தில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஐந்தாக அதிகரித்துள்ளது.

முன்னதாக, தெதுருஓயாவில் நீராடச் சென்று ஐவர் காணாமல் போயிருந்தனர்.

அவர்களில் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

காணாமல் போயிருந்த ஏனைய நால்வரையும் தேடும் பணி மும்முரமாக நடைபெற்றது.

அதன்போது குறித்த நால்வரும் உடலங்களாக மீட்கப்பட்டனர்.

இதேவேளை உயிருடன் ஏலவே மீட்கப்பட்டவரும் தற்போது உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

10 பேர் கொண்ட குழுவொன்று கிரிபத்கொடையில் இருந்து சிலாபத்திற்கு இன்று (5) சுற்றுலா சென்ற நிலையில் இச் சம்பவம் பதிவாகியுள்ளது. 


தெதுரு ஓயா சம்பவம் - பலி எண்ணிக்கை ஐந்தாக அதிகரிப்பு  தெதுரு ஓயா சம்பவத்தில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஐந்தாக அதிகரித்துள்ளது.முன்னதாக, தெதுருஓயாவில் நீராடச் சென்று ஐவர் காணாமல் போயிருந்தனர்.அவர்களில் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.காணாமல் போயிருந்த ஏனைய நால்வரையும் தேடும் பணி மும்முரமாக நடைபெற்றது.அதன்போது குறித்த நால்வரும் உடலங்களாக மீட்கப்பட்டனர்.இதேவேளை உயிருடன் ஏலவே மீட்கப்பட்டவரும் தற்போது உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.10 பேர் கொண்ட குழுவொன்று கிரிபத்கொடையில் இருந்து சிலாபத்திற்கு இன்று (5) சுற்றுலா சென்ற நிலையில் இச் சம்பவம் பதிவாகியுள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement