அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானை நம்ப முடியாது எனக் கடுமையாக விமர்சித்ததுடன், முக்கிய கடல்வழிப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தி மீது அமெரிக்காவுக்கு முழுமையான கட்டுப்பாடு இருப்பதாக தெரிவித்துள்ளார்.
“நான் ஈரானை நம்பவில்லை. அவர்களை நம்பும் கடைசி நபர் நான்தான். அவர்கள் என்னிடம் தொடர்ந்து பொய் சொல்லி வருகிறார்கள்” என்று டிரம்ப் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
மேலும், “ஹார்முஸ் ஜலசந்தி மீது தற்போது எங்களுக்கு முழுமையான கட்டுப்பாடு உள்ளது. அவர்களுக்கு கட்டுப்பாடு இல்லை. நாங்கள் அதைக் கட்டுப்படுத்துகிறோம்” என்று அவர் கூறியுள்ளார்.
ஈரான் தரப்பில் இருந்து மீண்டும் ஏதேனும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டால், அதற்கு கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என்றும் டிரம்ப் எச்சரித்துள்ளார்.
உலகின் முக்கியமான எரிசக்தி கடல்வழிகளில் ஒன்றான ஹார்முஸ் ஜலசந்தியைச் சுற்றி பதற்றம் நீடித்து வரும் நிலையில், டிரம்பின் இந்த புதிய கருத்து அமெரிக்கா–ஈரான் மோதலை மேலும் தீவிரப்படுத்துமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது
ஹார்முஸ் எங்களின் கட்டுப்பாட்டில்-டிரம்பின் கடும் எச்சரிக்கை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானை நம்ப முடியாது எனக் கடுமையாக விமர்சித்ததுடன், முக்கிய கடல்வழிப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தி மீது அமெரிக்காவுக்கு முழுமையான கட்டுப்பாடு இருப்பதாக தெரிவித்துள்ளார்.“நான் ஈரானை நம்பவில்லை. அவர்களை நம்பும் கடைசி நபர் நான்தான். அவர்கள் என்னிடம் தொடர்ந்து பொய் சொல்லி வருகிறார்கள்” என்று டிரம்ப் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.மேலும், “ஹார்முஸ் ஜலசந்தி மீது தற்போது எங்களுக்கு முழுமையான கட்டுப்பாடு உள்ளது. அவர்களுக்கு கட்டுப்பாடு இல்லை. நாங்கள் அதைக் கட்டுப்படுத்துகிறோம்” என்று அவர் கூறியுள்ளார்.ஈரான் தரப்பில் இருந்து மீண்டும் ஏதேனும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டால், அதற்கு கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என்றும் டிரம்ப் எச்சரித்துள்ளார்.உலகின் முக்கியமான எரிசக்தி கடல்வழிகளில் ஒன்றான ஹார்முஸ் ஜலசந்தியைச் சுற்றி பதற்றம் நீடித்து வரும் நிலையில், டிரம்பின் இந்த புதிய கருத்து அமெரிக்கா–ஈரான் மோதலை மேலும் தீவிரப்படுத்துமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது