• Aug 12 2026

ஆனைக்கோட்டை தொல்லியல் அகழ்வாய்வுப் பொருட்கள் நாளையும் நாளை மறுதினமும் காட்சிப்படுத்தப்படும்!

dorin / Aug 12th 2026, 12:47 pm
image

யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டைப் பகுதியில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட தொல்லியல் அகழாவாய்வின்போது கண்டுபிடிக்கப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க தொல்பொருட்கள் நாளை (13.08.2026) வியாழக்கிழமை மற்றும் நாளை மறுதினம் (14.08.2026) வெள்ளிக்கிழமை ஆகிய இருதினங்கள் தொல்லியல் ஆய்வுத்தளத்தில் பொதுமக்களின் பார்வைக்காக காட்சிப்படுத்தப்படவுள்ளன.

இக் கண்காட்சியில் நமது முன்னோர் பயன்படுத்திய அரிதான பொருட்கள், பண்டைய பண்பாட்டு எச்சங்கள் மற்றும் வரலாற்றுச் சான்றுகள் பலவும் இடம்பெறவுள்ளன.

இக் கண்காட்சியில் ஈழத்தின் பண்டைய வரலாற்றினையும் ஆனைக்கோட்டைப் பிரதேசத்தின் தொன்மைச் சிறப்பையும் சான்றுகளுடன் மக்கள் நேரில் கண்டு உணர்ந்துகொள்ள முடியும்.

பாடசாலை மாணவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் வரலாற்று ஆய்வாளர்கள் தமது வரலாற்று மற்றும் தொல்லியல் அறிவை மேம்படுத்திக்கொள்ள இதுவொரு சிறந்தவாய்ப்பாகும்.

எனவே மாணவர்கள், ஆய்வாளர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் குறிப்பிட்ட இரு தினங்களிலும் வருகை தந்து இக் கண்காட்சியைப் பார்வையிட்டு நமது பண்டைய வரலாற்று சிறப்புகளை அறிந்துகொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர் .


ஆனைக்கோட்டை தொல்லியல் அகழ்வாய்வுப் பொருட்கள் நாளையும் நாளை மறுதினமும் காட்சிப்படுத்தப்படும் யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டைப் பகுதியில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட தொல்லியல் அகழாவாய்வின்போது கண்டுபிடிக்கப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க தொல்பொருட்கள் நாளை (13.08.2026) வியாழக்கிழமை மற்றும் நாளை மறுதினம் (14.08.2026) வெள்ளிக்கிழமை ஆகிய இருதினங்கள் தொல்லியல் ஆய்வுத்தளத்தில் பொதுமக்களின் பார்வைக்காக காட்சிப்படுத்தப்படவுள்ளன.இக் கண்காட்சியில் நமது முன்னோர் பயன்படுத்திய அரிதான பொருட்கள், பண்டைய பண்பாட்டு எச்சங்கள் மற்றும் வரலாற்றுச் சான்றுகள் பலவும் இடம்பெறவுள்ளன.இக் கண்காட்சியில் ஈழத்தின் பண்டைய வரலாற்றினையும் ஆனைக்கோட்டைப் பிரதேசத்தின் தொன்மைச் சிறப்பையும் சான்றுகளுடன் மக்கள் நேரில் கண்டு உணர்ந்துகொள்ள முடியும்.பாடசாலை மாணவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் வரலாற்று ஆய்வாளர்கள் தமது வரலாற்று மற்றும் தொல்லியல் அறிவை மேம்படுத்திக்கொள்ள இதுவொரு சிறந்தவாய்ப்பாகும்.எனவே மாணவர்கள், ஆய்வாளர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் குறிப்பிட்ட இரு தினங்களிலும் வருகை தந்து இக் கண்காட்சியைப் பார்வையிட்டு நமது பண்டைய வரலாற்று சிறப்புகளை அறிந்துகொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர் .

Advertisement

Advertisement

Advertisement