• Aug 13 2026

தலையிலும் நெஞ்சிலும் துப்பாக்கிச் சூடு! குருவிட்ட கைதிகளின் மரணம் தொடர்பில் அதிர்ச்சி தகவல்

Chithra / Aug 12th 2026, 11:25 am
image


குருவிட்ட சிறைச்சாலையில் கடந்த வெள்ளிக்கிழமை ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலையின்போது உயிரிழந்த இரு கைதிகளும் துப்பாக்கிச் சூட்டினால் ஏற்பட்ட பலத்த காயங்களினாலேயே உயிரிழந்துள்ளதாக பிரேத பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.


இரத்தினபுரி போதனா மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையின்போதே இந்த விடயம் தெரியவந்துள்ளது.


இதன்படி, உயிரிழந்த ஒரு கைதி தலையிலும், மற்றைய கைதி நெஞ்சுப் பகுதியிலும் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியிருந்ததாக பிரேத பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


கடந்த வெள்ளிக்கிழமை குருவிட்ட சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலையின்போது இரு கைதிகள் உயிரிழந்ததுடன், மேலும் 12 பேர் காயமடைந்தனர்.


சிறைச்சாலைக்குள் ஏற்பட்ட நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்காக கண்ணீர்ப்புகை பிரயோகம் மற்றும் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக நீதி அமைச்சர் ஹர்ஷண நாநாயக்கார முன்னதாக தெரிவித்திருந்தார்.


நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்காக பொலிஸாருக்கு மேலதிகமாக விசேட அதிரடிப்படை, கலவரத் தடுப்புப் பிரிவு மற்றும் இராணுவத்தினரும் குருவிட்ட சிறைச்சாலைக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.


இதேவேளை, நாட்டின் மேலும் சில சிறைச்சாலைகளிலும் அண்மைக்காலத்தில் பதற்றமான சூழ்நிலைகள் ஏற்பட்டுள்ளன. நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலையின்போது 10 சிறைச்சாலை அதிகாரிகளும் 17 கைதிகளும் உயிரிழந்திருந்தனர்.


அத்துடன், மஹர மற்றும் புதிய மெகசின் சிறைச்சாலைகளில் ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலைகளின்போது தலா இரு கைதிகள் உயிரிழந்திருந்தனர்.


இந்த நிலையில், குருவிட்ட சிறைச்சாலையில் உயிரிழந்த இரு கைதிகளும் துப்பாக்கிச் சூட்டினால் ஏற்பட்ட காயங்களாலேயே உயிரிழந்துள்ளதாக பிரேத பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளமை, சம்பவம் தொடர்பான விசாரணைகளில் முக்கிய தகவலாக அமைந்துள்ளது.

தலையிலும் நெஞ்சிலும் துப்பாக்கிச் சூடு குருவிட்ட கைதிகளின் மரணம் தொடர்பில் அதிர்ச்சி தகவல் குருவிட்ட சிறைச்சாலையில் கடந்த வெள்ளிக்கிழமை ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலையின்போது உயிரிழந்த இரு கைதிகளும் துப்பாக்கிச் சூட்டினால் ஏற்பட்ட பலத்த காயங்களினாலேயே உயிரிழந்துள்ளதாக பிரேத பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.இரத்தினபுரி போதனா மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையின்போதே இந்த விடயம் தெரியவந்துள்ளது.இதன்படி, உயிரிழந்த ஒரு கைதி தலையிலும், மற்றைய கைதி நெஞ்சுப் பகுதியிலும் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியிருந்ததாக பிரேத பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.கடந்த வெள்ளிக்கிழமை குருவிட்ட சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலையின்போது இரு கைதிகள் உயிரிழந்ததுடன், மேலும் 12 பேர் காயமடைந்தனர்.சிறைச்சாலைக்குள் ஏற்பட்ட நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்காக கண்ணீர்ப்புகை பிரயோகம் மற்றும் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக நீதி அமைச்சர் ஹர்ஷண நாநாயக்கார முன்னதாக தெரிவித்திருந்தார்.நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்காக பொலிஸாருக்கு மேலதிகமாக விசேட அதிரடிப்படை, கலவரத் தடுப்புப் பிரிவு மற்றும் இராணுவத்தினரும் குருவிட்ட சிறைச்சாலைக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.இதேவேளை, நாட்டின் மேலும் சில சிறைச்சாலைகளிலும் அண்மைக்காலத்தில் பதற்றமான சூழ்நிலைகள் ஏற்பட்டுள்ளன. நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலையின்போது 10 சிறைச்சாலை அதிகாரிகளும் 17 கைதிகளும் உயிரிழந்திருந்தனர்.அத்துடன், மஹர மற்றும் புதிய மெகசின் சிறைச்சாலைகளில் ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலைகளின்போது தலா இரு கைதிகள் உயிரிழந்திருந்தனர்.இந்த நிலையில், குருவிட்ட சிறைச்சாலையில் உயிரிழந்த இரு கைதிகளும் துப்பாக்கிச் சூட்டினால் ஏற்பட்ட காயங்களாலேயே உயிரிழந்துள்ளதாக பிரேத பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளமை, சம்பவம் தொடர்பான விசாரணைகளில் முக்கிய தகவலாக அமைந்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement