• Feb 14 2026

எகிப்து கல்லறை சுவர்களில் தமிழ் எழுத்துகள்-கண்டு பிடிக்கப்பட்ட சுவாரஸ்யங்கள்!

dileesiya / Feb 13th 2026, 2:41 pm
image

எகிப்தின் புகழ்பெற்ற மன்னர்களின் பள்ளத்தாக்கு (Valley of the Kings) பகுதியில் உள்ள கல்லறைகளில் தமிழ்-பிராமி எழுத்துகள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது உலக வரலாற்று ஆய்வாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. 


மொத்தம் ஆறு கல்லறைகளில் சுமார் 30 இந்திய மொழி எழுத்துப் பொறிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன.


அதில் பெரும்பாலானவை தமிழ்-பிராமி எழுத்துகளாக இருப்பது குறிப்பிடத்தக்கது.


இந்த கண்டுபிடிப்புகளை லோசான் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர் இங்கோ ஸ்டராச்சும், பிரெஞ்சு தூர கிழக்கு ஆய்வு நிறுவனத்தின் பேராசிரியர் சார்லட் ஸ்மித்தும் வெளியிட்டுள்ளனர்.


2024ஆம் ஆண்டு துவக்கத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் போது, முன்பு அடையாளம் காணப்படாத பல எழுத்துகள் இந்தியாவைச் சேர்ந்தவை என்பதும் உறுதி செய்யப்பட்டது.


1888–89 மற்றும் 1913–14 காலகட்டங்களில் ஜூல் பெய்லி என்ற ஆய்வாளர் இந்த கல்லறைகளை ஆய்வு செய்து ஆயிரக்கணக்கான கிறுக்கல்களை பதிவு செய்திருந்தாலும், இந்திய எழுத்துகளை அவர் அடையாளம் காண முடியவில்லை. 


தற்போது நடந்த ஆய்வில் மட்டுமே அவை தமிழ், சமஸ்கிருதம், பிராகிருதம் மற்றும் காந்தாரி மொழிகளுக்குச் சேர்ந்தவை என்று கண்டறியப்பட்டுள்ளது.


இந்த எழுத்துகள் ரோமானியர்களின் காலத்தில் இந்தியர்கள் எகிப்திற்குச் சென்றதை உறுதிப்படுத்துகின்றன.


கல்லறைகள் சுவர்களில் பெயர்களை எழுதிச் சென்றவர்கள் அந்நேரத்தில் சுற்றுலாப் பயணிகள் அல்லது வர்த்தகர்களாக இருந்திருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.


மொத்தம் 1, 2, 6, 8, 9 மற்றும் 14ஆம் எண் கல்லறைகளில் இந்த எழுத்துகள் காணப்பட்டுள்ளன. 


இதில் முதலாவது கல்லறையில் மட்டுமே அதிக அளவில் தமிழ் எழுத்துகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.


அனைத்து ஆய்வுகளிலும் அதிகமாக கவனத்தை ஈர்த்த பெயர் “சிகை கொற்றன்”.


இந்த பெயர் பல கல்லறைகளில் மீண்டும் மீண்டும் எழுதப்பட்டிருந்தது.


“சிகைக் கொற்றன் வந்தான், பார்த்தான்” என்ற வாசகம் பல இடங்களில் காணப்படுகிறது.


சில கல்லறை வாசல்களில் எதிரெதிராக அவரது பெயர் எழுதப்பட்டுள்ளது.


இது அவர் “நான் இங்கு வந்தேன்” என்று சுவடுச்செய்ய விரும்பியவர் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.


‘சிகை’ என்பது சமஸ்கிருதச் சொல் (கிரீடம் அல்லது குடுமி குறிக்கும்), ‘கொற்றன்’ என்பது தமிழ் மரபுச் சொல்லாகும். 


இதனால், வட இந்திய மற்றும் தமிழ் கலப்பு அடையாளம் கொண்ட ஒருவராக அவர் இருந்திருக்கலாம் என்பர் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.


ஆய்வாளர்களின் கருத்துப்படி, அந்த காலகட்டத்தில் எகிப்திற்கு வந்த இந்தியர்கள் பெரும்பாலும் வர்த்தகர்களாக இருந்திருக்கலாம். 


ஆனால் “கொற்றன்” என்ற பெயர் ஒரு போர் வீரரை குறிக்கும் வாய்ப்பு உள்ளதால், அவர் வர்த்தகக் குழுவுடன் பாதுகாப்பு வீரராக வந்திருக்கலாம், அல்லது

அரசின் பிரதிநிதி / காவலர் ஆக இருந்திருக்கலாம்.


இதே கல்லறைகளில் கிரேக்க மொழியில் “வந்தேன், பார்த்தேன்” போன்ற கிறுக்கல்களும் காணப்படுவதால், சிகை கொற்றன் அவற்றை பார்த்து அதே போல் தன் பெயரைப் பதிவு செய்திருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.


சிகை கொற்றனைத் தவிர கோபன், சாத்தன்,கீரன் போன்ற பெயர்களும் எழுத்துப் பொறிப்புகளில் காணப்பட்டுள்ளன. 


இவை தமிழக மற்றும் தென்னிந்திய கல்வெட்டுகளிலும் காணப்படும் பெயர்களாக இருப்பது குறிப்பிடத்தக்கது.


இந்த கண்டுபிடிப்பு, ரோமானிய காலத்தில் இந்தியா-எகிப்து வர்த்தக மற்றும் கலாச்சார தொடர்புகள் எவ்வளவு விரிவாக இருந்தன என்பதை வெளிக்கொணர்கிறது.


குறிப்பாக, தமிழர்கள் அந்த வர்த்தக பாதைகளில் செயல்பட்டதற்கான நேரடி சான்றாக இதை ஆய்வாளர்கள் பார்க்கின்றனர்.


இந்த கண்டுபிடிப்பு இன்னும் ஒரு முக்கிய கேள்வியை முன்வைக்கிறது .


எகிப்தின் மன்னர்களின் கல்லறைகளில் தமது பெயரை எழுதிவிட்டு சென்ற சிகை கொற்றன் யார்? — வர்த்தகர், படைவீரர், இல்லையெனில் ஒரு சாகசப் பயணி?


வரலாற்று ஆய்வுகள் தொடரும் நிலையில், இந்த தமிழ்-பிராமி எழுத்துகள் உலக வரலாற்றில் தமிழர்களின் இருப்பை புதிய கோணத்தில் வெளிச்சமிட்டுக் காட்டுகின்றன.

எகிப்து கல்லறை சுவர்களில் தமிழ் எழுத்துகள்-கண்டு பிடிக்கப்பட்ட சுவாரஸ்யங்கள் எகிப்தின் புகழ்பெற்ற மன்னர்களின் பள்ளத்தாக்கு (Valley of the Kings) பகுதியில் உள்ள கல்லறைகளில் தமிழ்-பிராமி எழுத்துகள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது உலக வரலாற்று ஆய்வாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. மொத்தம் ஆறு கல்லறைகளில் சுமார் 30 இந்திய மொழி எழுத்துப் பொறிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன.அதில் பெரும்பாலானவை தமிழ்-பிராமி எழுத்துகளாக இருப்பது குறிப்பிடத்தக்கது.இந்த கண்டுபிடிப்புகளை லோசான் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர் இங்கோ ஸ்டராச்சும், பிரெஞ்சு தூர கிழக்கு ஆய்வு நிறுவனத்தின் பேராசிரியர் சார்லட் ஸ்மித்தும் வெளியிட்டுள்ளனர்.2024ஆம் ஆண்டு துவக்கத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் போது, முன்பு அடையாளம் காணப்படாத பல எழுத்துகள் இந்தியாவைச் சேர்ந்தவை என்பதும் உறுதி செய்யப்பட்டது.1888–89 மற்றும் 1913–14 காலகட்டங்களில் ஜூல் பெய்லி என்ற ஆய்வாளர் இந்த கல்லறைகளை ஆய்வு செய்து ஆயிரக்கணக்கான கிறுக்கல்களை பதிவு செய்திருந்தாலும், இந்திய எழுத்துகளை அவர் அடையாளம் காண முடியவில்லை. தற்போது நடந்த ஆய்வில் மட்டுமே அவை தமிழ், சமஸ்கிருதம், பிராகிருதம் மற்றும் காந்தாரி மொழிகளுக்குச் சேர்ந்தவை என்று கண்டறியப்பட்டுள்ளது.இந்த எழுத்துகள் ரோமானியர்களின் காலத்தில் இந்தியர்கள் எகிப்திற்குச் சென்றதை உறுதிப்படுத்துகின்றன.கல்லறைகள் சுவர்களில் பெயர்களை எழுதிச் சென்றவர்கள் அந்நேரத்தில் சுற்றுலாப் பயணிகள் அல்லது வர்த்தகர்களாக இருந்திருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.மொத்தம் 1, 2, 6, 8, 9 மற்றும் 14ஆம் எண் கல்லறைகளில் இந்த எழுத்துகள் காணப்பட்டுள்ளன. இதில் முதலாவது கல்லறையில் மட்டுமே அதிக அளவில் தமிழ் எழுத்துகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.அனைத்து ஆய்வுகளிலும் அதிகமாக கவனத்தை ஈர்த்த பெயர் “சிகை கொற்றன்”.இந்த பெயர் பல கல்லறைகளில் மீண்டும் மீண்டும் எழுதப்பட்டிருந்தது.“சிகைக் கொற்றன் வந்தான், பார்த்தான்” என்ற வாசகம் பல இடங்களில் காணப்படுகிறது.சில கல்லறை வாசல்களில் எதிரெதிராக அவரது பெயர் எழுதப்பட்டுள்ளது.இது அவர் “நான் இங்கு வந்தேன்” என்று சுவடுச்செய்ய விரும்பியவர் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.‘சிகை’ என்பது சமஸ்கிருதச் சொல் (கிரீடம் அல்லது குடுமி குறிக்கும்), ‘கொற்றன்’ என்பது தமிழ் மரபுச் சொல்லாகும். இதனால், வட இந்திய மற்றும் தமிழ் கலப்பு அடையாளம் கொண்ட ஒருவராக அவர் இருந்திருக்கலாம் என்பர் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.ஆய்வாளர்களின் கருத்துப்படி, அந்த காலகட்டத்தில் எகிப்திற்கு வந்த இந்தியர்கள் பெரும்பாலும் வர்த்தகர்களாக இருந்திருக்கலாம். ஆனால் “கொற்றன்” என்ற பெயர் ஒரு போர் வீரரை குறிக்கும் வாய்ப்பு உள்ளதால், அவர் வர்த்தகக் குழுவுடன் பாதுகாப்பு வீரராக வந்திருக்கலாம், அல்லதுஅரசின் பிரதிநிதி / காவலர் ஆக இருந்திருக்கலாம்.இதே கல்லறைகளில் கிரேக்க மொழியில் “வந்தேன், பார்த்தேன்” போன்ற கிறுக்கல்களும் காணப்படுவதால், சிகை கொற்றன் அவற்றை பார்த்து அதே போல் தன் பெயரைப் பதிவு செய்திருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.சிகை கொற்றனைத் தவிர கோபன், சாத்தன்,கீரன் போன்ற பெயர்களும் எழுத்துப் பொறிப்புகளில் காணப்பட்டுள்ளன. இவை தமிழக மற்றும் தென்னிந்திய கல்வெட்டுகளிலும் காணப்படும் பெயர்களாக இருப்பது குறிப்பிடத்தக்கது.இந்த கண்டுபிடிப்பு, ரோமானிய காலத்தில் இந்தியா-எகிப்து வர்த்தக மற்றும் கலாச்சார தொடர்புகள் எவ்வளவு விரிவாக இருந்தன என்பதை வெளிக்கொணர்கிறது.குறிப்பாக, தமிழர்கள் அந்த வர்த்தக பாதைகளில் செயல்பட்டதற்கான நேரடி சான்றாக இதை ஆய்வாளர்கள் பார்க்கின்றனர்.இந்த கண்டுபிடிப்பு இன்னும் ஒரு முக்கிய கேள்வியை முன்வைக்கிறது .எகிப்தின் மன்னர்களின் கல்லறைகளில் தமது பெயரை எழுதிவிட்டு சென்ற சிகை கொற்றன் யார் — வர்த்தகர், படைவீரர், இல்லையெனில் ஒரு சாகசப் பயணிவரலாற்று ஆய்வுகள் தொடரும் நிலையில், இந்த தமிழ்-பிராமி எழுத்துகள் உலக வரலாற்றில் தமிழர்களின் இருப்பை புதிய கோணத்தில் வெளிச்சமிட்டுக் காட்டுகின்றன.

Advertisement

Advertisement

Advertisement