• Feb 14 2026

நடைபாதையில் பயணிக்க முற்பட்ட நபர்; வழிவிடாது தடுத்த மூதாட்டி!

shanuja / Feb 13th 2026, 5:31 pm
image

நடைபாதையில் மோட்டார்சைக்கிளில் பயணிக்க முற்பட்ட நபரை மூதாட்டி ஒருவர் வழிவிடாது மறித்து நிற்கும் காணொளி தற்போது வைரலாகி வருகின்றது. 


இந்தச் சம்பவம் கேரளாவின் கோழிக்கோட்டில் உள்ள பிரபல சாலையில் பதிவாகியுள்ளது.  


குறித்த பகுதியிலுள்ள சாலையில் பயணிக்காமல் அதன் அருகிலிருந்த நடைபாதையூடாக நபர் ஒருவர் மோட்டார்சைக்கிளில் பயணிக்க முற்பட்டார். 


அப்போது அங்கு நின்ற மூதாட்டி ஒருவர் அந்த நபரை  வழி மறித்து, அவரைக் கடந்து செல்ல மறுத்தார். 


எனினும் குறித்த நபர் மூதாட்டியை விலத்திக்கொண்டு  முன்னால்  செல்ல முற்பட்டார். ஆனாலும் மூதாட்டி விடாப்பிடியாக அவரை வழிமறித்தார். 


அத்துடன் மூதாட்டி  தன் தொலைபேசியை எடுத்து, குறித்த நபரின் மோட்டா்சைக்கிளின் நம்பர் பிளேட்டை புகைப்படம் எடுத்தார். 


சிறிது நேரமாக முயற்சித்தும் அவரால் மூதாட்டியைக் கடந்து செல்ல முடியாமல் இறுதியாக சாலைக்குத் திரும்பிப் பயணித்தார். 


குறித்த சம்பவம் காணொளியாக வெளிவந்து மூதாட்டியின் துணிவையும் சமூக சேவையையும் எடுத்துக்காட்டும் விதமாக வைரலாகியுள்ளது.

நடைபாதையில் பயணிக்க முற்பட்ட நபர்; வழிவிடாது தடுத்த மூதாட்டி நடைபாதையில் மோட்டார்சைக்கிளில் பயணிக்க முற்பட்ட நபரை மூதாட்டி ஒருவர் வழிவிடாது மறித்து நிற்கும் காணொளி தற்போது வைரலாகி வருகின்றது. இந்தச் சம்பவம் கேரளாவின் கோழிக்கோட்டில் உள்ள பிரபல சாலையில் பதிவாகியுள்ளது.  குறித்த பகுதியிலுள்ள சாலையில் பயணிக்காமல் அதன் அருகிலிருந்த நடைபாதையூடாக நபர் ஒருவர் மோட்டார்சைக்கிளில் பயணிக்க முற்பட்டார். அப்போது அங்கு நின்ற மூதாட்டி ஒருவர் அந்த நபரை  வழி மறித்து, அவரைக் கடந்து செல்ல மறுத்தார். எனினும் குறித்த நபர் மூதாட்டியை விலத்திக்கொண்டு  முன்னால்  செல்ல முற்பட்டார். ஆனாலும் மூதாட்டி விடாப்பிடியாக அவரை வழிமறித்தார். அத்துடன் மூதாட்டி  தன் தொலைபேசியை எடுத்து, குறித்த நபரின் மோட்டா்சைக்கிளின் நம்பர் பிளேட்டை புகைப்படம் எடுத்தார். சிறிது நேரமாக முயற்சித்தும் அவரால் மூதாட்டியைக் கடந்து செல்ல முடியாமல் இறுதியாக சாலைக்குத் திரும்பிப் பயணித்தார். குறித்த சம்பவம் காணொளியாக வெளிவந்து மூதாட்டியின் துணிவையும் சமூக சேவையையும் எடுத்துக்காட்டும் விதமாக வைரலாகியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement