• Apr 14 2026

கனடாவில் தீயில் சிக்கி உயிரிழந்த தமிழ் யுவதி

Chithra / Feb 14th 2026, 7:59 am
image

கனடா, ஒன்ராறியோவில் உள்ள Loyalist Township பகுதியில் லக்‌ஷா எனும் இளம் பெண் தன் வீட்டில் ஏற்பட்ட தீயில் சிக்கி பரிதாபமாக  உயிரிழந்துள்ளார்.


இந்த சம்பவம் கடந்த ஜனவரி 29ஆம் திகதி இடம்பெற்றுள்ளது. 


பிரமிளாவின் மகள் லக்‌ஷா தனது அம்மாவுக்கு மொபைல் மூலம் அழைப்பு அனுப்பி, “அம்மா, நம் வீட்டில் தீப்பற்றி எரிகிறது, கதவையும் தீ சூழ்ந்துள்ளதால்,  வெளியே வர முடியவில்லை.  என்னைக் காப்பாற்றுங்கள்” என பயமுடன் கதறி உள்ளார்.


பிரமிளா, மொபைலில் மகளின் பயங்கர அழைப்பைக் கேட்டதும், உடனே காரில் வீட்டிற்கு சென்று, தீ சூழ்ந்த வீட்டை காணும் போது, மகள் உயிரிழந்து கிடந்ததை மட்டுமே கண்டுள்ளார்.


பிரமிளாவின் மகனான கயா கூறியதாவது, “அவளின் கடைசி வார்த்தைகளை நினைத்து நாங்கள் இன்னும் கண்ணீர் வடிக்கின்றோம்” என்கிறார்.


வீட்டில் தீ எப்படி பற்றியது, சம்பவத்திற்கு காரணம் என்ன என்பதற்கான தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.


குடும்பத்தினர் இளம்பெண்ணை இழந்த துயரத்தில், அவரது கடைசி வார்த்தைகளை நினைத்து தினமும் கண்ணீர் வடித்து வருகிறார்கள்.


இச் சம்பவம் தொடர்பில் அந்நாட்டு பொலிசார்  விசாரணை நடத்தி வருகின்றனர். 


கனடாவில் தீயில் சிக்கி உயிரிழந்த தமிழ் யுவதி கனடா, ஒன்ராறியோவில் உள்ள Loyalist Township பகுதியில் லக்‌ஷா எனும் இளம் பெண் தன் வீட்டில் ஏற்பட்ட தீயில் சிக்கி பரிதாபமாக  உயிரிழந்துள்ளார்.இந்த சம்பவம் கடந்த ஜனவரி 29ஆம் திகதி இடம்பெற்றுள்ளது. பிரமிளாவின் மகள் லக்‌ஷா தனது அம்மாவுக்கு மொபைல் மூலம் அழைப்பு அனுப்பி, “அம்மா, நம் வீட்டில் தீப்பற்றி எரிகிறது, கதவையும் தீ சூழ்ந்துள்ளதால்,  வெளியே வர முடியவில்லை.  என்னைக் காப்பாற்றுங்கள்” என பயமுடன் கதறி உள்ளார்.பிரமிளா, மொபைலில் மகளின் பயங்கர அழைப்பைக் கேட்டதும், உடனே காரில் வீட்டிற்கு சென்று, தீ சூழ்ந்த வீட்டை காணும் போது, மகள் உயிரிழந்து கிடந்ததை மட்டுமே கண்டுள்ளார்.பிரமிளாவின் மகனான கயா கூறியதாவது, “அவளின் கடைசி வார்த்தைகளை நினைத்து நாங்கள் இன்னும் கண்ணீர் வடிக்கின்றோம்” என்கிறார்.வீட்டில் தீ எப்படி பற்றியது, சம்பவத்திற்கு காரணம் என்ன என்பதற்கான தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.குடும்பத்தினர் இளம்பெண்ணை இழந்த துயரத்தில், அவரது கடைசி வார்த்தைகளை நினைத்து தினமும் கண்ணீர் வடித்து வருகிறார்கள்.இச் சம்பவம் தொடர்பில் அந்நாட்டு பொலிசார்  விசாரணை நடத்தி வருகின்றனர். 

Advertisement

Advertisement

Advertisement