• Feb 14 2026

தபால் சேவையை நவீனமயமாக்க புதிய வாகனங்கள் சேவையில்!

Chithra / Feb 13th 2026, 4:27 pm
image

 

இலங்கை தபால் சேவையை நவீனமயமாக்கும் ஒரு பகுதியாக, 590 மில்லியன் ரூபாவிற்கும் அதிக பெறுமதியுள்ள 10 பாரவூர்திகள் மற்றும் 20 க்ரூ கெப் வாகனங்கள் நேற்று (12) தபால் போக்குவரத்து வலையமைப்பில் இணைக்கப்பட்டன.

இந்த முழுமையான திட்டத்திற்காக அரசாங்கம் மொத்தம் 849 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளது.

தபால் தலைமையகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி நளிந்த ஜயதிஸ்ஸ மற்றும் பிரதி அமைச்சர் கௌஷல்யா ஆரியரத்ன ஆகியோர் கலந்துகொண்டனர்.

நாடளாவிய ரீதியில் தபால் பொருட்கள், பணம் செலுத்திப் பெற்றுக்கொள்ளும் சேவை மற்றும் SL Post Courier சேவைகளை விரைவுபடுத்த புதிய வாகனங்கள் பயன்படுத்தப்படும்.

தபால் ஊழியர்களுக்கான துவிச்சக்கரவண்டி தாங்கிகள், அலுவலகத் திறனை அதிகரிக்க கணினிகள், மடிக்கணினிகள் மற்றும் டெப்லெட்கள் வழங்கப்பட்டன.

தபால் நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க புதிய 'செயற்பாட்டுக் கட்டுப்பாட்டு மற்றும் பதிலளிப்புப் பிரிவு' திறந்து வைக்கப்பட்டது.

தபால் தலைமையகம், மத்திய தபால் பரிவர்த்தனை நிலையம் மற்றும் மட்டக்களப்பு தபால் நிலையம் ஆகியவற்றில் சூரிய சக்தித் தகடுகள் பொருத்தப்படவுள்ளன.

கடந்த ஆண்டு இரண்டு பாரிய சவால்கள் ஏற்பட்ட போதிலும், தபால் திணைக்களம் 13,450 மில்லியன் ரூபாவை வருமானமாகப் ஈட்டியுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

மேலும், சேவையை வலுப்படுத்த 2,800 பணியாளர்கள் புதிதாக இணைக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தபால் சேவையை மென்மேலும் நவீனப்படுத்தி அதன் எதிர்காலத்தைப் பாதுகாப்பதில் அரசாங்கம் உறுதியாக இருப்பதாகவும், பொதுமக்கள் இச்சேவைகளை அதிகளவில் பயன்படுத்துமாறும் அமைச்சர் இதன்போது கேட்டுக்கொண்டார்.

தபால் சேவையை நவீனமயமாக்க புதிய வாகனங்கள் சேவையில்  இலங்கை தபால் சேவையை நவீனமயமாக்கும் ஒரு பகுதியாக, 590 மில்லியன் ரூபாவிற்கும் அதிக பெறுமதியுள்ள 10 பாரவூர்திகள் மற்றும் 20 க்ரூ கெப் வாகனங்கள் நேற்று (12) தபால் போக்குவரத்து வலையமைப்பில் இணைக்கப்பட்டன.இந்த முழுமையான திட்டத்திற்காக அரசாங்கம் மொத்தம் 849 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளது.தபால் தலைமையகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி நளிந்த ஜயதிஸ்ஸ மற்றும் பிரதி அமைச்சர் கௌஷல்யா ஆரியரத்ன ஆகியோர் கலந்துகொண்டனர்.நாடளாவிய ரீதியில் தபால் பொருட்கள், பணம் செலுத்திப் பெற்றுக்கொள்ளும் சேவை மற்றும் SL Post Courier சேவைகளை விரைவுபடுத்த புதிய வாகனங்கள் பயன்படுத்தப்படும்.தபால் ஊழியர்களுக்கான துவிச்சக்கரவண்டி தாங்கிகள், அலுவலகத் திறனை அதிகரிக்க கணினிகள், மடிக்கணினிகள் மற்றும் டெப்லெட்கள் வழங்கப்பட்டன.தபால் நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க புதிய 'செயற்பாட்டுக் கட்டுப்பாட்டு மற்றும் பதிலளிப்புப் பிரிவு' திறந்து வைக்கப்பட்டது.தபால் தலைமையகம், மத்திய தபால் பரிவர்த்தனை நிலையம் மற்றும் மட்டக்களப்பு தபால் நிலையம் ஆகியவற்றில் சூரிய சக்தித் தகடுகள் பொருத்தப்படவுள்ளன.கடந்த ஆண்டு இரண்டு பாரிய சவால்கள் ஏற்பட்ட போதிலும், தபால் திணைக்களம் 13,450 மில்லியன் ரூபாவை வருமானமாகப் ஈட்டியுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.மேலும், சேவையை வலுப்படுத்த 2,800 பணியாளர்கள் புதிதாக இணைக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.தபால் சேவையை மென்மேலும் நவீனப்படுத்தி அதன் எதிர்காலத்தைப் பாதுகாப்பதில் அரசாங்கம் உறுதியாக இருப்பதாகவும், பொதுமக்கள் இச்சேவைகளை அதிகளவில் பயன்படுத்துமாறும் அமைச்சர் இதன்போது கேட்டுக்கொண்டார்.

Advertisement

Advertisement

Advertisement