• Jul 15 2025

வினைத்திறனான அரச சேவையை உருவாக்க ஐக்கிய நாடுகள் சபையின் அபிவிருத்தித் திட்டம் ஆதரவு

Chithra / Jul 14th 2025, 10:44 am
image


வினைத்திறனான அரச சேவையை உருவாக்குவதற்காக அரசாங்கத்தால் செயல்படுத்தப்படும் திட்டத்திற்கு ஆதரவளிப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் அபிவிருத்தித் திட்டத்தின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி அசுசா குபோடா (Azusa Kubota) தெரிவித்தார்.

ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று காலை ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திகா சனத் குமாநாயக்கவை சந்தித்தபோது  அசுசா குபோடா இவ்வாறு தெரிவித்தார்.

அனைத்து அரச நிறுவனங்களிலும் பயனுள்ள அரச சேவைகளை வழங்குவதற்காக உள் விவகார அலகுகளை நிறுவுவதற்கான அரசாங்கத்தின் முன்னெடுப்புக்கள் மேலும் மேம்படுத்துவது மற்றும் பணியாளர் பயிற்சிக்காக ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தித் திட்டத்திலிருந்து கூடுதல் ஆதரவைப் பெறுவது குறித்து இதன்போது ஆராயப்பட்டது.

அரச அதிகாரிகளின் நெறிமுறை நடத்தையை மேம்படுத்துவதன் மூலம் அரசு நிறுவனங்களுக்குள் ஒருமைப்பாட்டின் கலாச்சாரத்தை வளர்ப்பதற்கான திட்டங்களை அறிமுகப்படுத்துவது குறித்து ஆராயப்பட்டது. அந்த திட்டங்களுக்கு ஆதரவை வழங்கத் தயாராக இருப்பதாக அசுசா குபோடா உறுதியளித்தார்.


வினைத்திறனான அரச சேவையை உருவாக்க ஐக்கிய நாடுகள் சபையின் அபிவிருத்தித் திட்டம் ஆதரவு வினைத்திறனான அரச சேவையை உருவாக்குவதற்காக அரசாங்கத்தால் செயல்படுத்தப்படும் திட்டத்திற்கு ஆதரவளிப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் அபிவிருத்தித் திட்டத்தின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி அசுசா குபோடா (Azusa Kubota) தெரிவித்தார்.ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று காலை ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திகா சனத் குமாநாயக்கவை சந்தித்தபோது  அசுசா குபோடா இவ்வாறு தெரிவித்தார்.அனைத்து அரச நிறுவனங்களிலும் பயனுள்ள அரச சேவைகளை வழங்குவதற்காக உள் விவகார அலகுகளை நிறுவுவதற்கான அரசாங்கத்தின் முன்னெடுப்புக்கள் மேலும் மேம்படுத்துவது மற்றும் பணியாளர் பயிற்சிக்காக ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தித் திட்டத்திலிருந்து கூடுதல் ஆதரவைப் பெறுவது குறித்து இதன்போது ஆராயப்பட்டது.அரச அதிகாரிகளின் நெறிமுறை நடத்தையை மேம்படுத்துவதன் மூலம் அரசு நிறுவனங்களுக்குள் ஒருமைப்பாட்டின் கலாச்சாரத்தை வளர்ப்பதற்கான திட்டங்களை அறிமுகப்படுத்துவது குறித்து ஆராயப்பட்டது. அந்த திட்டங்களுக்கு ஆதரவை வழங்கத் தயாராக இருப்பதாக அசுசா குபோடா உறுதியளித்தார்.

Advertisement

Advertisement

Advertisement