• May 12 2025

இலங்கை மின்சார சபையின் தலைவர் திடீர் இராஜினாமா?

Chithra / May 11th 2025, 9:48 am
image

 

மின்சாரக் கட்டணம் மற்றும் இதர விடயங்களில் வெளியாட்களின் தலையீடு காரணமாக, தனது பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளதாக இலங்கை மின்சார சபையின் தலைவர் திலக் சியம்பலாபிட்டிய, மின்சக்தி எரிசக்தி அமைச்சருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

மின்சாரக் கட்டணத்தை 25 முதல் 35 சதவீதம் வரை அதிகரிப்பது குறித்து இலங்கை மின்சார சபை பரிசீலித்து வருவதாக வட்டாரங்கள் தெரிவித்தன.

இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணையமும் இலங்கை மின்சார சபையும் ஒப்புக் கொண்ட சூத்திரத்தின்படி மின்சாரக் கட்டணத்தைத் திருத்துவதற்கான திட்டம் தயாரிக்கப்பட்டு வருவதாகவும், அது தயாரிக்கப்பட்ட பிறகு பொதுப் பயன்பாட்டு ஆணையத்தால் இந்த திட்டம் சமர்ப்பிக்கப்படும் என்றும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

மின்சார கட்டணத்தை திருத்துவதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வரும் நிலையில், இலங்கை மின்சார சபையின் தலைவர் திலக் சியம்பலாபிட்டிய தனது ராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்துள்ளதாக அறியமுடிகின்றது. 

இலங்கை மின்சார சபையின் தலைவர் திடீர் இராஜினாமா  மின்சாரக் கட்டணம் மற்றும் இதர விடயங்களில் வெளியாட்களின் தலையீடு காரணமாக, தனது பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளதாக இலங்கை மின்சார சபையின் தலைவர் திலக் சியம்பலாபிட்டிய, மின்சக்தி எரிசக்தி அமைச்சருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.மின்சாரக் கட்டணத்தை 25 முதல் 35 சதவீதம் வரை அதிகரிப்பது குறித்து இலங்கை மின்சார சபை பரிசீலித்து வருவதாக வட்டாரங்கள் தெரிவித்தன.இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணையமும் இலங்கை மின்சார சபையும் ஒப்புக் கொண்ட சூத்திரத்தின்படி மின்சாரக் கட்டணத்தைத் திருத்துவதற்கான திட்டம் தயாரிக்கப்பட்டு வருவதாகவும், அது தயாரிக்கப்பட்ட பிறகு பொதுப் பயன்பாட்டு ஆணையத்தால் இந்த திட்டம் சமர்ப்பிக்கப்படும் என்றும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.மின்சார கட்டணத்தை திருத்துவதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வரும் நிலையில், இலங்கை மின்சார சபையின் தலைவர் திலக் சியம்பலாபிட்டிய தனது ராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்துள்ளதாக அறியமுடிகின்றது. 

Advertisement

Advertisement

Advertisement