மாணவி ஒருவரை இளைஞர்கள் மூவர் இணைந்து தூக்கிச் சென்று தீ வைத்த கொடூர சம்பவம் ஒன்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தக் கொடூர சம்பவம் ஒடிஷா மாநிலத்தின் பூரி மாவட்டம் நிமபாடா தெஹ்ஸிலில் உள்ள பயாபர் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,
குறித்த பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை 8:30 மணிக்கு 15 வயதான மாணவி ஒருவர், தனது தோழியிடம் புத்தகங்களை வழங்க சென்று கொண்டிருந்தார்.
மாணவி சென்று கொண்டிருந்த போது அந்தப்பகுதியில் ஆள்நடமாட்டம் இல்லாமல் இருந்துள்ளது. அந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தியே 3 இளைஞர்கள் இணைந்து சிறுமியை கடத்திச் சென்று அவர் மேல் தீ வைத்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இளைஞர்கள் தீ வைத்த போது மாணவியின் அலறல் சத்தத்தை கேட்டு மக்கள் அப்பகுதிக்கு விரைந்து சென்று தீயை அணைத்து, அருகிலிருந்த பிபிலி CHC மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
இந்த கொடூர தாக்குதலில் மாணவியின் கைகள், கால்கள் மற்றும் உடலின் பல பகுதிகள் தீக்காயங்களால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரம் தெரிவித்துள்ளது.
தற்போது மாணவி புவனேஸ்வர் எய்ம்ஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றார்.
இந்தக் கொரூர சம்பவம் பலங்கா காவல் நிலையத்திலிருந்து வெறும் 1.5 கி.மீ தூரத்தில் நிகழ்ந்துள்ளது.
இது குறித்து மாணவியின் குடும்பத்தினர் தெரிவிக்கையில், மாணவிக்கு எவருடனும் எந்தவிதமான தனிப்பட்ட தகராறுகளும் இல்லை. இது காதல் பழிவாங்கும் குற்றம் அல்ல என தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் ஒடிஷா துணை முதல்வர் பரவதி பரிதா கடும் கண்டனம் வெளியிட்டதோடு குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமியின் சிகிச்சை செலவினங்களை மாநில அரசு முழுமையாக ஏற்கும் எனவும் அறிவித்துள்ளார்.
இது போன்ற கொடூரமான தாக்குதல்கள் தொடர்ந்து வரும் நிலையில், பெண்கள், மாணவர்கள், சிறுமிகளின் பாதுகாப்பு குறித்த பல ரீதியான கேள்விகள் எழுந்து வருகின்றன.
புத்தகம் வழங்க சென்ற மாணவி; கடத்தி தீ வைத்த இளைஞர்கள் - ஒடிசா மாநிலத்தில் கொடூரம் மாணவி ஒருவரை இளைஞர்கள் மூவர் இணைந்து தூக்கிச் சென்று தீ வைத்த கொடூர சம்பவம் ஒன்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கொடூர சம்பவம் ஒடிஷா மாநிலத்தின் பூரி மாவட்டம் நிமபாடா தெஹ்ஸிலில் உள்ள பயாபர் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், குறித்த பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை 8:30 மணிக்கு 15 வயதான மாணவி ஒருவர், தனது தோழியிடம் புத்தகங்களை வழங்க சென்று கொண்டிருந்தார். மாணவி சென்று கொண்டிருந்த போது அந்தப்பகுதியில் ஆள்நடமாட்டம் இல்லாமல் இருந்துள்ளது. அந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தியே 3 இளைஞர்கள் இணைந்து சிறுமியை கடத்திச் சென்று அவர் மேல் தீ வைத்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது. இளைஞர்கள் தீ வைத்த போது மாணவியின் அலறல் சத்தத்தை கேட்டு மக்கள் அப்பகுதிக்கு விரைந்து சென்று தீயை அணைத்து, அருகிலிருந்த பிபிலி CHC மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.இந்த கொடூர தாக்குதலில் மாணவியின் கைகள், கால்கள் மற்றும் உடலின் பல பகுதிகள் தீக்காயங்களால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரம் தெரிவித்துள்ளது. தற்போது மாணவி புவனேஸ்வர் எய்ம்ஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றார். இந்தக் கொரூர சம்பவம் பலங்கா காவல் நிலையத்திலிருந்து வெறும் 1.5 கி.மீ தூரத்தில் நிகழ்ந்துள்ளது. இது குறித்து மாணவியின் குடும்பத்தினர் தெரிவிக்கையில், மாணவிக்கு எவருடனும் எந்தவிதமான தனிப்பட்ட தகராறுகளும் இல்லை. இது காதல் பழிவாங்கும் குற்றம் அல்ல என தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் ஒடிஷா துணை முதல்வர் பரவதி பரிதா கடும் கண்டனம் வெளியிட்டதோடு குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமியின் சிகிச்சை செலவினங்களை மாநில அரசு முழுமையாக ஏற்கும் எனவும் அறிவித்துள்ளார்.இது போன்ற கொடூரமான தாக்குதல்கள் தொடர்ந்து வரும் நிலையில், பெண்கள், மாணவர்கள், சிறுமிகளின் பாதுகாப்பு குறித்த பல ரீதியான கேள்விகள் எழுந்து வருகின்றன.