தாழ் வளிமண்டல தளம்பல் நிலைமை, அடுத்த 36 மணித்தியாலங்களுக்குள் குறைந்த அழுத்தப் பிரதேசமாக வளர்ச்சியடையக்கூடும் எனவும், இதன் காரணமாக நாட்டில் நிலவும் மழை நிலைமை வரும் நாட்களில் மேலும் தொடரும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த தொகுதியின் செல்வாக்கினால் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்பதுடன், அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
அத்துடன் மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா, தெற்கு, வடமேல், வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் சில இடங்களில் சுமார் 100 மி.மீ. அளவிலான பலத்த மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சில மாவட்டங்களில் உள்ள 8 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு முதலாம் கட்ட மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதன்படி, பதுளை, குருநாகல், மாத்தளை, மொனராகலை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் உள்ள 8 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு இந்த மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நீர்ப்பாசனத் திணைக்களத்தின் அறிவிப்பின்படி, நாட்டில் நிலவும் அதிக மழைவீழ்ச்சி காரணமாக லுணுகம்வெஹெர மற்றும் ராஜாங்கனை உள்ளிட்ட 9 பிரதான நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.
அத்துடன், 5 நடுத்தர அளவிலான நீர்த்தேக்கங்களின் வான் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளதாக நீர் முகாமைத்துவப் பிரிவின் பணிப்பாளர் எச்.எம்.பி.எஸ்.டி. ஹேரத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை கிரிந்தி ஓயாவின் தனமல்வில பகுதியிலுள்ள நீர் மானியின் நீர்மட்டம் அதிகரித்துள்ளது.
அதன்படி, நீர்த்தேக்கங்களை அண்டியுள்ள தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் ஆற்றங்கரையோர மக்கள் மிகவும் அவதானத்துடன் இருக்குமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
வெல்லவாய மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் நேற்று இரவு பெய்த கடும் மழை காரணமாக, வெல்லவாய - கொழும்பு பிரதான வீதியின் சில பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. குறிப்பாக கங்காராம விகாரை மற்றும் எதிலிவெவ ஆகிய பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளதால், அந்த வீதியூடான போக்குவரத்து நடவடிக்கைகளுக்குப் பாரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
கனமழையால் வெள்ளத்தில் மூழ்கிய வீதிகள்; மண்சரிவு அபாய எச்சரிக்கை தாழ் வளிமண்டல தளம்பல் நிலைமை, அடுத்த 36 மணித்தியாலங்களுக்குள் குறைந்த அழுத்தப் பிரதேசமாக வளர்ச்சியடையக்கூடும் எனவும், இதன் காரணமாக நாட்டில் நிலவும் மழை நிலைமை வரும் நாட்களில் மேலும் தொடரும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.இந்த தொகுதியின் செல்வாக்கினால் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்பதுடன், அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.அத்துடன் மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா, தெற்கு, வடமேல், வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் சில இடங்களில் சுமார் 100 மி.மீ. அளவிலான பலத்த மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் சில மாவட்டங்களில் உள்ள 8 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு முதலாம் கட்ட மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.அதன்படி, பதுளை, குருநாகல், மாத்தளை, மொனராகலை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் உள்ள 8 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு இந்த மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.நீர்ப்பாசனத் திணைக்களத்தின் அறிவிப்பின்படி, நாட்டில் நிலவும் அதிக மழைவீழ்ச்சி காரணமாக லுணுகம்வெஹெர மற்றும் ராஜாங்கனை உள்ளிட்ட 9 பிரதான நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. அத்துடன், 5 நடுத்தர அளவிலான நீர்த்தேக்கங்களின் வான் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளதாக நீர் முகாமைத்துவப் பிரிவின் பணிப்பாளர் எச்.எம்.பி.எஸ்.டி. ஹேரத் தெரிவித்துள்ளார்.இதேவேளை கிரிந்தி ஓயாவின் தனமல்வில பகுதியிலுள்ள நீர் மானியின் நீர்மட்டம் அதிகரித்துள்ளது. அதன்படி, நீர்த்தேக்கங்களை அண்டியுள்ள தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் ஆற்றங்கரையோர மக்கள் மிகவும் அவதானத்துடன் இருக்குமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.வெல்லவாய மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் நேற்று இரவு பெய்த கடும் மழை காரணமாக, வெல்லவாய - கொழும்பு பிரதான வீதியின் சில பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. குறிப்பாக கங்காராம விகாரை மற்றும் எதிலிவெவ ஆகிய பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளதால், அந்த வீதியூடான போக்குவரத்து நடவடிக்கைகளுக்குப் பாரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது.