இலங்கையில் அதிகாரபூர்வமாக நேற்று ஸ்டார்லிங்க் இணையச்சேவை அறிமுகப்படுத்தப்பட்டது. இந்நிலையில் இணையச்சேவைக்கான கட்டண அமைப்புக்கள் வெளியாகியுள்ளன.
குடியிருப்பு மற்றும் வணிக பயனர்கள் என்ற இரண்டு விருப்பங்களின் அடிப்படையில் இந்த கட்டணங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதில் குடியிருப்பு திட்டத்தில் மாதாந்தம் 12,000 ரூபாய் மற்றும் 15,000 ரூபாய் கட்டணங்களில் சேவைகள் வழங்கப்படவுள்ளன.
இதற்கான ஸ்டார்லிங்க் ஸ்டாண்டர்ட் கிட் என்ற வன்பொருளுக்கு 118,000 ரூபாய் அறவிடப்படவுள்ளது.
வணிகத் திட்டத்துக்கு 24,000 ரூபாய், 64,000 ரூபாய், மற்றும் 127,000 என்ற மாதாந்த கட்டணங்களும், வன்பொருளுக்கு 9 இலட்சம் ரூபாயும் அறவிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சேவை செயற்கைக்கோள் ஊடான சேவை என்பதால், தொலைதூர கிராமங்களும் நன்மையைப் பெற்றுக்கொள்ள முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனக்குச் சொந்தமான செயற்கைக்கோள் இணைய சேவையான ஸ்டார்லிங்க் இப்போது இலங்கையில் கிடைப்பதாக எலோன் மஸ்க் எக்ஸ் கணக்கில் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இலங்கையர்கள் அனைவருக்கும் 'Starlink' செயற்கைக்கோள் இணைய சேவையை வழங்கியதற்காக அதன் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி எலோன் மஸ்க்கிற்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நன்றி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி, விரைவில் எலோன் மஸ்க்கை சந்திக்க ஆவலுடன் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் ஸ்டார்லிங்க் இணைய சேவை அறிமுகம்; கட்டண அமைப்புக்கள் வெளியானது இலங்கையில் அதிகாரபூர்வமாக நேற்று ஸ்டார்லிங்க் இணையச்சேவை அறிமுகப்படுத்தப்பட்டது. இந்நிலையில் இணையச்சேவைக்கான கட்டண அமைப்புக்கள் வெளியாகியுள்ளன. குடியிருப்பு மற்றும் வணிக பயனர்கள் என்ற இரண்டு விருப்பங்களின் அடிப்படையில் இந்த கட்டணங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் குடியிருப்பு திட்டத்தில் மாதாந்தம் 12,000 ரூபாய் மற்றும் 15,000 ரூபாய் கட்டணங்களில் சேவைகள் வழங்கப்படவுள்ளன. இதற்கான ஸ்டார்லிங்க் ஸ்டாண்டர்ட் கிட் என்ற வன்பொருளுக்கு 118,000 ரூபாய் அறவிடப்படவுள்ளது. வணிகத் திட்டத்துக்கு 24,000 ரூபாய், 64,000 ரூபாய், மற்றும் 127,000 என்ற மாதாந்த கட்டணங்களும், வன்பொருளுக்கு 9 இலட்சம் ரூபாயும் அறவிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சேவை செயற்கைக்கோள் ஊடான சேவை என்பதால், தொலைதூர கிராமங்களும் நன்மையைப் பெற்றுக்கொள்ள முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.தனக்குச் சொந்தமான செயற்கைக்கோள் இணைய சேவையான ஸ்டார்லிங்க் இப்போது இலங்கையில் கிடைப்பதாக எலோன் மஸ்க் எக்ஸ் கணக்கில் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இலங்கையர்கள் அனைவருக்கும் 'Starlink' செயற்கைக்கோள் இணைய சேவையை வழங்கியதற்காக அதன் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி எலோன் மஸ்க்கிற்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி, விரைவில் எலோன் மஸ்க்கை சந்திக்க ஆவலுடன் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.