• Feb 06 2026

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை; மேலதிக வகுப்புகள் தடை!

Chithra / Feb 6th 2026, 2:38 pm
image


2025 கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை காரணமாக பெப்ரவரி 11 ஆம் திகதி நள்ளிரவு முதல் பரீட்சை நிறைவு பெறும் வரை குறித்த பரீட்சைகள் சம்பந்தமான வகுப்புகள் தடை செய்யப்படும் என்று இலங்கை பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.


நாடு முழுவதும் 3,545 பரீட்சை நிலையங்களில் பெப்ரவரி 17 முதல் 26 ஆம் திகதி வரை குறித்த பரீட்சையை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.


இதற்கு அமைவாக மேலதிக வகுப்புகள், கருத்தரங்குகள், பயிற்சிப் பட்டறைகள் உள்ளிட்ட அனைத்து தொடர்புடைய நடவடிக்கைகளும் பெப்ரவரி 11 ஆம் திகதி நள்ளிரவு முதல் பரீட்சை முடியும் வரை தடைசெய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


க.பொ.த சாதாரண தரப் பரீட்சை; மேலதிக வகுப்புகள் தடை 2025 கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை காரணமாக பெப்ரவரி 11 ஆம் திகதி நள்ளிரவு முதல் பரீட்சை நிறைவு பெறும் வரை குறித்த பரீட்சைகள் சம்பந்தமான வகுப்புகள் தடை செய்யப்படும் என்று இலங்கை பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.நாடு முழுவதும் 3,545 பரீட்சை நிலையங்களில் பெப்ரவரி 17 முதல் 26 ஆம் திகதி வரை குறித்த பரீட்சையை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.இதற்கு அமைவாக மேலதிக வகுப்புகள், கருத்தரங்குகள், பயிற்சிப் பட்டறைகள் உள்ளிட்ட அனைத்து தொடர்புடைய நடவடிக்கைகளும் பெப்ரவரி 11 ஆம் திகதி நள்ளிரவு முதல் பரீட்சை முடியும் வரை தடைசெய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement