வவுனியா மாவட்ட விசேட காணி மத்தியஸ்த சபை உறுப்பினர்களுக்கான நியமனம் வழங்கி வைக்கப்பட்டது.
வவுனியா மாவட்ட செயலக மண்டபத்தில் இன்று (06) இந்நிகழ்வு இடம்பெற்றது.
காணி பிணக்குளை கையாளும் வகையில் விசேட காணி மத்தியஸ்த சபைகள் உருவாக்கப்பட்டு வவுனியா மாவட்டத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் அது செயற்பட்டு வருகின்றது.
2019 முதல் காணி மத்தியஸ்தர்களாக செயல்பட்டவர்களின் பதவிக் காலம் நிறைவடைந்த நிலையில் புதிதாக ஆட்சேர்ப்பு செய்யப்பட்டு அவர்களுக்கான பயிற்சிகள் மற்றும் பரீட்சைகள் என்பன கடந்த வருட இறுதியில் நடைபெற்றிருந்தது.
அதனடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட விசேட காணி மத்தியஸ்த சபை தவிசாளர், உதவி தவிசாளர் மற்றும் மத்தியஸ்தர்கள் என 23 பேருக்கு நியமனக் கடிதங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
இதில் வவுனியா மாவட்ட அரச அதிபர் பீ.ஏ.சரத்சந்திர, மேலதிக அரச அதிபர் நா.கமலதாசன், வவுனியா மற்றும் மன்னார் மாவட்ட மத்தியஸ்த சபை பயிற்றுவிப்பாளர் செ.விமலராஜா, மத்தியஸ்த சபை அபிவிருத்தி உத்தியோகத்தர் காண்டீபன் உள்ளிட்ட பலரும் இதன்போது கலந்து கொண்டு நியமனக் கடிதங்களை வழங்கி வைத்தனர்.
வவுனியா விசேட காணி மத்தியஸ்த சபை உறுப்பினர்களுக்கான நியமனம் வழங்கி வைப்பு வவுனியா மாவட்ட விசேட காணி மத்தியஸ்த சபை உறுப்பினர்களுக்கான நியமனம் வழங்கி வைக்கப்பட்டது.வவுனியா மாவட்ட செயலக மண்டபத்தில் இன்று (06) இந்நிகழ்வு இடம்பெற்றது.காணி பிணக்குளை கையாளும் வகையில் விசேட காணி மத்தியஸ்த சபைகள் உருவாக்கப்பட்டு வவுனியா மாவட்டத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் அது செயற்பட்டு வருகின்றது. 2019 முதல் காணி மத்தியஸ்தர்களாக செயல்பட்டவர்களின் பதவிக் காலம் நிறைவடைந்த நிலையில் புதிதாக ஆட்சேர்ப்பு செய்யப்பட்டு அவர்களுக்கான பயிற்சிகள் மற்றும் பரீட்சைகள் என்பன கடந்த வருட இறுதியில் நடைபெற்றிருந்தது.அதனடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட விசேட காணி மத்தியஸ்த சபை தவிசாளர், உதவி தவிசாளர் மற்றும் மத்தியஸ்தர்கள் என 23 பேருக்கு நியமனக் கடிதங்கள் வழங்கி வைக்கப்பட்டன.இதில் வவுனியா மாவட்ட அரச அதிபர் பீ.ஏ.சரத்சந்திர, மேலதிக அரச அதிபர் நா.கமலதாசன், வவுனியா மற்றும் மன்னார் மாவட்ட மத்தியஸ்த சபை பயிற்றுவிப்பாளர் செ.விமலராஜா, மத்தியஸ்த சபை அபிவிருத்தி உத்தியோகத்தர் காண்டீபன் உள்ளிட்ட பலரும் இதன்போது கலந்து கொண்டு நியமனக் கடிதங்களை வழங்கி வைத்தனர்.