• May 19 2026

ரக்பியில் இரட்டை மகுடம் வென்ற இலங்கை 'டஸ்கர்ஸ்' வீரர்கள் - தாயகத்தில் பலத்த வரவேற்பு

Chithra / May 19th 2026, 12:14 pm
image

மத்திய மற்றும் தெற்காசிய ரக்பி வரலாற்றில் புதிய சாதனையைப் பதித்து, முதலாவது மத்திய ஆசியா – தெற்காசியா (CASA) செவன்ஸ் ரக்பி தொடரின் ஆடவர் மற்றும் மகளிர் பிரிவுகளில் இரட்டை சாம்பியன் பட்டங்களை வென்ற இலங்கை தேசிய ரக்பி அணிகள் இன்று (19) காலை கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தன.


உஸ்பெகிஸ்தானின் தஷ்கண்ட் நகரில் மே 16 மற்றும் 17 ஆம் திகதிகளில் நடைபெற்ற இந்த சர்வதேச தொடரில், “டஸ்கர்ஸ்” என அழைக்கப்படும் இலங்கை ஆடவர் மற்றும் மகளிர் அணிகள் முழுத் தொடரிலும் தோல்வியறியா ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆதிக்கம் செலுத்தின.


ஆடவர் பிரிவின் இறுதிப் போட்டியில் பலம் வாய்ந்த இந்திய அணியை எதிர்கொண்ட இலங்கை அணி, ஆரம்பம் முதலே ஆட்டத்தை கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு 31-10 என்ற புள்ளிக்கணக்கில் அபார வெற்றி பெற்று CASA செவன்ஸ் தொடரின் முதலாவது ஆடவர் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இந்திய அணி இரண்டாம் இடத்தைப் பெற்றது.


மகளிர் பிரிவில் இலங்கை வீராங்கனைகள் கசகஸ்தான் அணிக்கு எதிராக அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி, எதிரணிக்கு ஒரு புள்ளியும் பெற வாய்ப்பளிக்காமல் 27-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று மகளிர் சாம்பியன் கிண்ணத்தை தமதாக்கினர்.


இலங்கை ஆடவர் அணி ஸ்ரீநாத் சூரியபண்டார தலைமையிலும், ஜனிது தில்ஷான் உபதலைமையிலும் களமிறங்கியது. சதுர சொய்சா, ஆகாஷ் மதுஷங்க, கவிந்து பெரேரா மற்றும் கவிந்து த கொஸ்தா உள்ளிட்ட வீரர்கள் அணியின் வெற்றியில் முக்கிய பங்காற்றினர்.


மகளிர் அணியை சராணி லியனகே வழிநடத்தியதுடன், சஞ்சீவனி விஜேதிலக உபதலைவராக செயல்பட்டார். ஹேகஷானி கிருஷ்ணகுமாரி, திலினி காஞ்சனா மற்றும் கவீஷா இஷானி பெரேரா உள்ளிட்ட வீராங்கனைகள் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.


தேசத்திற்கு பெருமை சேர்த்த இந்த வெற்றி வீரர்களை வரவேற்பதற்காக கட்டுநாயக்க விமான நிலைய விசேட விருந்தினர் முனையத்தில் உத்தியோகபூர்வ வரவேற்பு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.


இந்நிகழ்வில் இலங்கை ரக்பி சங்கத் தலைவர் பவித்ர பெர்னாண்டோ, இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சரின் சார்பில் தனிப்பட்ட செயலாளர் தர்ஷன வரகொட, பாதுகாப்புப் படை அதிகாரிகள், வீரர்களின் குடும்பத்தினர் மற்றும் ரக்பி ரசிகர்கள் கலந்துகொண்டனர்.


ரக்பி சாம்பியன்களுக்கு மாலை அணிவித்து, வெற்றி்க் கோப்பைகளுடன் அவர்களை உற்சாகமாக வரவேற்றதுடன், இந்த கடினமான சூழ்நிலையில் நாட்டிற்கு சர்வதேச கீர்த்தியைக் கொண்டு சேர்த்ததற்காக ஒட்டுமொத்த இலங்கை மக்களின் சார்பாக வீரர்களுக்கு தங்களது வாழ்த்துகளையும் மரியாதையையும் தெரிவித்துக் கொண்டனர்.


ரக்பியில் இரட்டை மகுடம் வென்ற இலங்கை 'டஸ்கர்ஸ்' வீரர்கள் - தாயகத்தில் பலத்த வரவேற்பு மத்திய மற்றும் தெற்காசிய ரக்பி வரலாற்றில் புதிய சாதனையைப் பதித்து, முதலாவது மத்திய ஆசியா – தெற்காசியா (CASA) செவன்ஸ் ரக்பி தொடரின் ஆடவர் மற்றும் மகளிர் பிரிவுகளில் இரட்டை சாம்பியன் பட்டங்களை வென்ற இலங்கை தேசிய ரக்பி அணிகள் இன்று (19) காலை கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தன.உஸ்பெகிஸ்தானின் தஷ்கண்ட் நகரில் மே 16 மற்றும் 17 ஆம் திகதிகளில் நடைபெற்ற இந்த சர்வதேச தொடரில், “டஸ்கர்ஸ்” என அழைக்கப்படும் இலங்கை ஆடவர் மற்றும் மகளிர் அணிகள் முழுத் தொடரிலும் தோல்வியறியா ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆதிக்கம் செலுத்தின.ஆடவர் பிரிவின் இறுதிப் போட்டியில் பலம் வாய்ந்த இந்திய அணியை எதிர்கொண்ட இலங்கை அணி, ஆரம்பம் முதலே ஆட்டத்தை கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு 31-10 என்ற புள்ளிக்கணக்கில் அபார வெற்றி பெற்று CASA செவன்ஸ் தொடரின் முதலாவது ஆடவர் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இந்திய அணி இரண்டாம் இடத்தைப் பெற்றது.மகளிர் பிரிவில் இலங்கை வீராங்கனைகள் கசகஸ்தான் அணிக்கு எதிராக அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி, எதிரணிக்கு ஒரு புள்ளியும் பெற வாய்ப்பளிக்காமல் 27-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று மகளிர் சாம்பியன் கிண்ணத்தை தமதாக்கினர்.இலங்கை ஆடவர் அணி ஸ்ரீநாத் சூரியபண்டார தலைமையிலும், ஜனிது தில்ஷான் உபதலைமையிலும் களமிறங்கியது. சதுர சொய்சா, ஆகாஷ் மதுஷங்க, கவிந்து பெரேரா மற்றும் கவிந்து த கொஸ்தா உள்ளிட்ட வீரர்கள் அணியின் வெற்றியில் முக்கிய பங்காற்றினர்.மகளிர் அணியை சராணி லியனகே வழிநடத்தியதுடன், சஞ்சீவனி விஜேதிலக உபதலைவராக செயல்பட்டார். ஹேகஷானி கிருஷ்ணகுமாரி, திலினி காஞ்சனா மற்றும் கவீஷா இஷானி பெரேரா உள்ளிட்ட வீராங்கனைகள் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.தேசத்திற்கு பெருமை சேர்த்த இந்த வெற்றி வீரர்களை வரவேற்பதற்காக கட்டுநாயக்க விமான நிலைய விசேட விருந்தினர் முனையத்தில் உத்தியோகபூர்வ வரவேற்பு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.இந்நிகழ்வில் இலங்கை ரக்பி சங்கத் தலைவர் பவித்ர பெர்னாண்டோ, இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சரின் சார்பில் தனிப்பட்ட செயலாளர் தர்ஷன வரகொட, பாதுகாப்புப் படை அதிகாரிகள், வீரர்களின் குடும்பத்தினர் மற்றும் ரக்பி ரசிகர்கள் கலந்துகொண்டனர்.ரக்பி சாம்பியன்களுக்கு மாலை அணிவித்து, வெற்றி்க் கோப்பைகளுடன் அவர்களை உற்சாகமாக வரவேற்றதுடன், இந்த கடினமான சூழ்நிலையில் நாட்டிற்கு சர்வதேச கீர்த்தியைக் கொண்டு சேர்த்ததற்காக ஒட்டுமொத்த இலங்கை மக்களின் சார்பாக வீரர்களுக்கு தங்களது வாழ்த்துகளையும் மரியாதையையும் தெரிவித்துக் கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement