• Jan 19 2026

வவுனியா பதிப்பகத்தினருடன் கைகோர்க்கும் இலங்கை பதிப்பக சங்கம்

Chithra / Jan 18th 2026, 4:32 pm
image


இலங்கை பதிப்பக சங்கம் வவுனியா பதிப்பகத்தார் கூட்டுறவு சங்கத்துடன் இணைந்து புதிய உத்திகளுடன் கூடிய கட்டமைப்பு ஒன்றினை உருவாக்கும் நோக்குடனான நிகழ்வு வவுனியாவில் இடம்பெற்றது.

வவுனியா கூட்டுறவு சம்மேளன மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வில் இலங்கை பதிப்பக சங்கத்தின் செயற்பாடுகள், பிராந்திய ரீதியில் உள்ள பதிப்பகத்தாருக்கான புதிய தொழில்நுட்ப உத்திகள், உலக சந்தையில் பதிப்பகத்திற்குள்ள கேள்வி அதனை விரிவுபடுத்துவதற்கான வழிவகைகள் தொடர்பில் தெளிவு படுத்தப்பட்டதுடன் வவுனியா மாவட்ட பதிப்பகத்தார் எதிரகொள்ளும் சவால்கள் அதற்கு காணக்கூடியதாக தீர்வுகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

இந் நிகழ்வில் இலங்கை பதிப்பக சங்கத்தின் தலைவர் ஜனா ரத்னகுமார, உபதலைவர் நிசாந்த பெரேரா, வீரகேசரியின் நிறைவேற்றுப்பணிப்பாரும் சங்கத்தின் உபதலைவருமான எம். செந்தில்நாதன் சங்கத்தின் உறுப்பினர் தினேஷ் மேர்வின் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


வவுனியா பதிப்பகத்தினருடன் கைகோர்க்கும் இலங்கை பதிப்பக சங்கம் இலங்கை பதிப்பக சங்கம் வவுனியா பதிப்பகத்தார் கூட்டுறவு சங்கத்துடன் இணைந்து புதிய உத்திகளுடன் கூடிய கட்டமைப்பு ஒன்றினை உருவாக்கும் நோக்குடனான நிகழ்வு வவுனியாவில் இடம்பெற்றது.வவுனியா கூட்டுறவு சம்மேளன மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வில் இலங்கை பதிப்பக சங்கத்தின் செயற்பாடுகள், பிராந்திய ரீதியில் உள்ள பதிப்பகத்தாருக்கான புதிய தொழில்நுட்ப உத்திகள், உலக சந்தையில் பதிப்பகத்திற்குள்ள கேள்வி அதனை விரிவுபடுத்துவதற்கான வழிவகைகள் தொடர்பில் தெளிவு படுத்தப்பட்டதுடன் வவுனியா மாவட்ட பதிப்பகத்தார் எதிரகொள்ளும் சவால்கள் அதற்கு காணக்கூடியதாக தீர்வுகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.இந் நிகழ்வில் இலங்கை பதிப்பக சங்கத்தின் தலைவர் ஜனா ரத்னகுமார, உபதலைவர் நிசாந்த பெரேரா, வீரகேசரியின் நிறைவேற்றுப்பணிப்பாரும் சங்கத்தின் உபதலைவருமான எம். செந்தில்நாதன் சங்கத்தின் உறுப்பினர் தினேஷ் மேர்வின் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement