• May 15 2025

உயர்தரப் பரீட்சையின் செயன்முறைப் பரீட்சை குறித்து விசேட அறிக்கை

Chithra / Mar 5th 2025, 7:50 am
image

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் செயன்முறைப் பரீட்சை குறித்து பரீட்சைத் திணைக்களம் விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இதன்படி, உயிரியல் தொழில்நுட்பவியல் பாடத்துடன் தொடர்புடைய செயன்முறைப் பரீட்சை எதிர்வரும் மார்ச் மாதம் 08ஆம் திகதி முதல் மார்ச் மாதம் 10ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாக அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் உள்ள 75 செயன்முறைப் பரீட்சை மத்திய நிலையங்களில் குறித்த செயன்முறைப் பரீட்சை இடம்பெறவுள்ளதாக அதில் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை பரீட்சை விண்ணப்பதாரிகளுக்காக உதவி வகுப்புகளை நடத்துவது, ஒழுங்கமைப்பது மற்றும் வகுப்புகளை நடத்துவதை முற்றிலும் தடைசெய்யவேண்டிய காலங்கள் குறித்து அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, எதிர்வரும் 07ஆம் திகதி நள்ளிரவு 12 மணி முதல் எதிர்வரும் 10ஆம் திகதி வரை செயன்முறைப் பரீட்சை முழுமையாக முடிவடையும் வரை உதவி வகுப்புகளை நடத்துவது தடை செய்யப்பட்டுள்ளது. 

உயர்தரப் பரீட்சையின் செயன்முறைப் பரீட்சை குறித்து விசேட அறிக்கை கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் செயன்முறைப் பரீட்சை குறித்து பரீட்சைத் திணைக்களம் விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.இதன்படி, உயிரியல் தொழில்நுட்பவியல் பாடத்துடன் தொடர்புடைய செயன்முறைப் பரீட்சை எதிர்வரும் மார்ச் மாதம் 08ஆம் திகதி முதல் மார்ச் மாதம் 10ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாக அறிவித்துள்ளது.நாடு முழுவதும் உள்ள 75 செயன்முறைப் பரீட்சை மத்திய நிலையங்களில் குறித்த செயன்முறைப் பரீட்சை இடம்பெறவுள்ளதாக அதில் குறிப்பிட்டுள்ளது.இதேவேளை பரீட்சை விண்ணப்பதாரிகளுக்காக உதவி வகுப்புகளை நடத்துவது, ஒழுங்கமைப்பது மற்றும் வகுப்புகளை நடத்துவதை முற்றிலும் தடைசெய்யவேண்டிய காலங்கள் குறித்து அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி, எதிர்வரும் 07ஆம் திகதி நள்ளிரவு 12 மணி முதல் எதிர்வரும் 10ஆம் திகதி வரை செயன்முறைப் பரீட்சை முழுமையாக முடிவடையும் வரை உதவி வகுப்புகளை நடத்துவது தடை செய்யப்பட்டுள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement

Buy Now