• May 24 2025

ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் முடிவெடுக்கும் விசேட கூட்டம்; தயாராகும் மொட்டுக்கட்சி!

Chithra / Mar 20th 2024, 7:31 am
image

 

ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் முடிவெடுக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் விசேட கூட்டம் இவ்வாரம் நடைபெறவுள்ளதாக அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலுக்கான மொட்டுக் கட்சி வேட்பாளர் தொடர்பில் ஊடகங்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

எமது கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச, ஸ்தாபகர் பசில் ராஜபக்ச மற்றும் கட்சியின் சிரேஷ்ட தலைவர்கள் இந்த வாரத்துக்குள் கூடி இது பற்றி ஆராய்வார்கள்.

இந்தக் கூட்டத்தின் பிரகாரம் எமது வேட்பாளர் விரைவில் அறிவிக்கப்படுவார். சவாலை ஏற்கக்கூடிய வெற்றி வேட்பாளர் ஒருவரை நிறுத்துவோம்.

இதேவேளை, தேசிய மக்கள் சக்தியுடன் கூட்டணி அமைப்பதற்குத் தாம் தயாரில்லை என தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் முடிவெடுக்கும் விசேட கூட்டம்; தயாராகும் மொட்டுக்கட்சி  ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் முடிவெடுக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் விசேட கூட்டம் இவ்வாரம் நடைபெறவுள்ளதாக அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.ஜனாதிபதித் தேர்தலுக்கான மொட்டுக் கட்சி வேட்பாளர் தொடர்பில் ஊடகங்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.எமது கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச, ஸ்தாபகர் பசில் ராஜபக்ச மற்றும் கட்சியின் சிரேஷ்ட தலைவர்கள் இந்த வாரத்துக்குள் கூடி இது பற்றி ஆராய்வார்கள்.இந்தக் கூட்டத்தின் பிரகாரம் எமது வேட்பாளர் விரைவில் அறிவிக்கப்படுவார். சவாலை ஏற்கக்கூடிய வெற்றி வேட்பாளர் ஒருவரை நிறுத்துவோம்.இதேவேளை, தேசிய மக்கள் சக்தியுடன் கூட்டணி அமைப்பதற்குத் தாம் தயாரில்லை என தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement

Buy Now