• Jul 16 2025

கிளீன் ஸ்ரீலங்கா திட்டத்தின்கீழ் மூதூர் கடற்கரையில் சிரமதானம்!

shanuja / Jul 15th 2025, 9:10 am
image

கிளீன் ஸ்ரீலங்கா நிகழ்ச்சித் திட்டத்தின்கீழ் மூதூர் பிரதேசத்திலுள்ள கடற்கரைச்சேனை, ஹபீப்நகர் ஆகிய இரண்டு கடற்கரைப் பகுதிகளில்  இன்று  (15) காலை சிரமதானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. 


கிழக்கு மாகாண முதலமைச்சின் செயலாளரின் அறிவுறுத்தலுக்கமைவாக மூதூர் பிரதேச சபையின் தவிசாளர் செல்வரத்தினம் பிரகலாதன் தலைமையில் கடற்கரைப் பகுதிகள் சிரமதானம் செய்யப்பட்டு தூய்மைப்படுத்தப்பட்டன.


மூதூர் பிரதேச சபையின் உத்தியோகத்தர்கள்,ஊழியர்கள்,பொதுமக்கள் இணைந்து சிரமதானப் பணியை முன்னெடுத்திருந்தனர்.


இதன்போது கடற்கரையில் காணப்பட்ட சூழலுக்கு பங்கம் விளைவிக்கும் குப்பை கூளங்கள்,பிளாஸ்டிக் பொருட்கள் உரிய முறைப்படி அகற்றப்பட்டது.


சிரமதானத்தில் மூதூர் பிரதேச சபையின் தவிசாளர், பிரதேச சபை உறுப்பினர்கள், பிரதேச சபையின் செயலாளர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

கிளீன் ஸ்ரீலங்கா திட்டத்தின்கீழ் மூதூர் கடற்கரையில் சிரமதானம் கிளீன் ஸ்ரீலங்கா நிகழ்ச்சித் திட்டத்தின்கீழ் மூதூர் பிரதேசத்திலுள்ள கடற்கரைச்சேனை, ஹபீப்நகர் ஆகிய இரண்டு கடற்கரைப் பகுதிகளில்  இன்று  (15) காலை சிரமதானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. கிழக்கு மாகாண முதலமைச்சின் செயலாளரின் அறிவுறுத்தலுக்கமைவாக மூதூர் பிரதேச சபையின் தவிசாளர் செல்வரத்தினம் பிரகலாதன் தலைமையில் கடற்கரைப் பகுதிகள் சிரமதானம் செய்யப்பட்டு தூய்மைப்படுத்தப்பட்டன.மூதூர் பிரதேச சபையின் உத்தியோகத்தர்கள்,ஊழியர்கள்,பொதுமக்கள் இணைந்து சிரமதானப் பணியை முன்னெடுத்திருந்தனர்.இதன்போது கடற்கரையில் காணப்பட்ட சூழலுக்கு பங்கம் விளைவிக்கும் குப்பை கூளங்கள்,பிளாஸ்டிக் பொருட்கள் உரிய முறைப்படி அகற்றப்பட்டது.சிரமதானத்தில் மூதூர் பிரதேச சபையின் தவிசாளர், பிரதேச சபை உறுப்பினர்கள், பிரதேச சபையின் செயலாளர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement