இலங்கையில் தங்கத்தின் விலையில் இன்று (11) வீழ்ச்சி பதிவாகியுள்ளது. அதன்படி 24 கரட் தங்கத்தின் விலை ஒரு பவுணுக்கு 8,000 ரூபாயால் குறைந்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
சந்தை நிலவரத்தின் அடிப்படையில் 24 கரட் தங்கம் ஒரு பவுண் 370,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.
அதேவேளை, 22 கரட் தங்கம் ஒரு பவுண் 340,400 ரூபாயாக விற்பனையாகி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
24 கரட் தங்கம் ஒரு கிராம் 46,250 ரூபாயாகவும், 22 கரட் தங்கம் ஒரு கிராம் 42,550 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுவதாக நகையக வியாபாரிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
தங்கம் வாங்கத் திட்டமிட்டு இருந்தவர்களுக்கு இன்றைய விலை வீழ்ச்சி ஓரளவு நிவாரணமாக அமைந்துள்ளதாகவும் நகை வியாபாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்நிலையில் இலங்கை மத்திய வங்கியினால் இன்று (11) வெளியிடப்பட்டுள்ள நாணய மாற்று விகிதத் தரவுகளின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை அதிகரித்துள்ளது.
அதன்படி, இன்று அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 337.82 ரூபாவாக பதிவாகியுள்ளது. நேற்று (03) அமெரிக்க டொலரின் விற்பனை விலை 335.39 ரூபாவாக ஆக காணப்பட்டது.
வெளிநாட்டு நாணய சந்தையின் நகர்வுகள் மற்றும் பொருளாதார காரணிகளுக்கு அமைவாக நாணய மாற்று விகிதங்களில் தினசரி மாற்றங்கள் ஏற்படக்கூடும் என பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
ஒரே நாளில் அதிர்ச்சி மாற்றம் - நகை பிரியர்களுக்கு சூப்பர் செய்தி இலங்கையில் தங்கத்தின் விலையில் இன்று (11) வீழ்ச்சி பதிவாகியுள்ளது. அதன்படி 24 கரட் தங்கத்தின் விலை ஒரு பவுணுக்கு 8,000 ரூபாயால் குறைந்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.சந்தை நிலவரத்தின் அடிப்படையில் 24 கரட் தங்கம் ஒரு பவுண் 370,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.அதேவேளை, 22 கரட் தங்கம் ஒரு பவுண் 340,400 ரூபாயாக விற்பனையாகி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.24 கரட் தங்கம் ஒரு கிராம் 46,250 ரூபாயாகவும், 22 கரட் தங்கம் ஒரு கிராம் 42,550 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுவதாக நகையக வியாபாரிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.தங்கம் வாங்கத் திட்டமிட்டு இருந்தவர்களுக்கு இன்றைய விலை வீழ்ச்சி ஓரளவு நிவாரணமாக அமைந்துள்ளதாகவும் நகை வியாபாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.இந்நிலையில் இலங்கை மத்திய வங்கியினால் இன்று (11) வெளியிடப்பட்டுள்ள நாணய மாற்று விகிதத் தரவுகளின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை அதிகரித்துள்ளது.அதன்படி, இன்று அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 337.82 ரூபாவாக பதிவாகியுள்ளது. நேற்று (03) அமெரிக்க டொலரின் விற்பனை விலை 335.39 ரூபாவாக ஆக காணப்பட்டது.வெளிநாட்டு நாணய சந்தையின் நகர்வுகள் மற்றும் பொருளாதார காரணிகளுக்கு அமைவாக நாணய மாற்று விகிதங்களில் தினசரி மாற்றங்கள் ஏற்படக்கூடும் என பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.