• Apr 18 2026

அகில இலங்கை ரீதியில் உயிரியல் பிரிவில் கொழும்பு றோயல் கல்லூரி மாணவன் முதலிடம்!

shanu / Apr 1st 2026, 11:30 am
image

க.பொ.த உயர்தரப் பரீட்சையில் உயிரியல் பிரிவில் கொழும்பு றோயல் கல்லூரி மாணவன் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார். 


2025ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் நேற்று நள்ளிரவில் வெளியாகியது. இதனடிப்படையில் அகில இலங்கை ரீதியில் முதலிடம் பெற்ற மாணவர்களின் விபரங்கள் தற்போது வெளியாகி வருகின்றன. 


இந்த நிலையில் உயிரியல் பிரிவில் கொழும்பு றோயல் கல்லூரி மாணவன் டிலான் சஞ்சன முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார். இரண்டாமிடத்தை ஹொரணை தக்ஷிலா மத்திய மகா வித்தியாலய மாணவன்  கிரிஷான் சசிந்து நம்தர, மூன்றாமிடத்தை திருகோணமலை ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரி மாணவி தர்ஷனா கோனேஷ் உம் பிடித்துள்ளனர்.


இதேவேளை கணிதப்பிரிவில்  கிளிநொச்சி மகா வித்தியாலய  மாணவன் தெய்வேந்திரம் திருக்குமரன் அகில இலங்கை ரீதியில் முதலிடம் பெற்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார். 


இம்முறை 66 வீதமான மாணவர்கள் பல்கலைக்கழகப் பிரவேசத்திற்குத் தகுதி பெற்றுள்ளதாகப் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ. கே. எஸ். இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார்.


இம்முறை உயர்தரப் பரீட்சைக்கு 281,810 விண்ணப்பதாரர்கள் தோற்றியதுடன், அவர்களில் 176,527 பேர் பல்கலைக்கழகப் பிரவேசத்திற்காக விண்ணப்பிக்கத் தகுதி பெற்றுள்ளனர். மேலும்  111 விண்ணப்பதாரர்களின் பெறுபேறுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகப் பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

 

அகில இலங்கை ரீதியில் உயிரியல் பிரிவில் கொழும்பு றோயல் கல்லூரி மாணவன் முதலிடம் க.பொ.த உயர்தரப் பரீட்சையில் உயிரியல் பிரிவில் கொழும்பு றோயல் கல்லூரி மாணவன் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார். 2025ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் நேற்று நள்ளிரவில் வெளியாகியது. இதனடிப்படையில் அகில இலங்கை ரீதியில் முதலிடம் பெற்ற மாணவர்களின் விபரங்கள் தற்போது வெளியாகி வருகின்றன. இந்த நிலையில் உயிரியல் பிரிவில் கொழும்பு றோயல் கல்லூரி மாணவன் டிலான் சஞ்சன முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார். இரண்டாமிடத்தை ஹொரணை தக்ஷிலா மத்திய மகா வித்தியாலய மாணவன்  கிரிஷான் சசிந்து நம்தர, மூன்றாமிடத்தை திருகோணமலை ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரி மாணவி தர்ஷனா கோனேஷ் உம் பிடித்துள்ளனர்.இதேவேளை கணிதப்பிரிவில்  கிளிநொச்சி மகா வித்தியாலய  மாணவன் தெய்வேந்திரம் திருக்குமரன் அகில இலங்கை ரீதியில் முதலிடம் பெற்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார். இம்முறை 66 வீதமான மாணவர்கள் பல்கலைக்கழகப் பிரவேசத்திற்குத் தகுதி பெற்றுள்ளதாகப் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ. கே. எஸ். இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார்.இம்முறை உயர்தரப் பரீட்சைக்கு 281,810 விண்ணப்பதாரர்கள் தோற்றியதுடன், அவர்களில் 176,527 பேர் பல்கலைக்கழகப் பிரவேசத்திற்காக விண்ணப்பிக்கத் தகுதி பெற்றுள்ளனர். மேலும்  111 விண்ணப்பதாரர்களின் பெறுபேறுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகப் பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement