முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்தியாவுக்கான மூன்று நாள் விஜயமொன்றை மேற்கொண்டு புறப்பட்டுச் சென்றுள்ளார்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியைத் தழுவிய பின்னர் ரணில் விக்ரமசிங்க இதுவரை மூன்று தடவைகள் இந்தியாவுக்கான விஜயங்களை மேற்கொண்டுள்ளார். குறித்த விஜயம் இந்தியாவுக்கான நான்காவது விஜயமாகும்.
இந்தியாவின் முக்கிய பத்திரிகையின் ஏற்பாட்டில், கர்நாடக மாநிலத்தில் நடைபெறும் நிகழ்வொன்றில் பிரதான சொற்பொழிவை ஆற்றுவதற்கான அழைப்பின் பேரிலேயே அவர் இந்தியாவுக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.
நிகழ்வின் பிரதான அதிதியாக கர்நாடக மாநில முதலமைச்சர் சித்தாராமையா கலந்து கொள்ளவுள்ளார்.
இரண்டு நாட்கள் தொடர்ச்சியாக நடைபெறும் இந்த நிகழ்வில் அரசியல், வர்த்தகம், கலைகள் மற்றும், விளையாட்டு போன்ற பல்வேறு துறைகளின் விற்பன்னர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.
முக்கிய நிகழ்வுக்காக இந்தியாவிற்கு மூன்று நாள் விஜயம் மேற்கொண்ட ரணில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்தியாவுக்கான மூன்று நாள் விஜயமொன்றை மேற்கொண்டு புறப்பட்டுச் சென்றுள்ளார்.கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியைத் தழுவிய பின்னர் ரணில் விக்ரமசிங்க இதுவரை மூன்று தடவைகள் இந்தியாவுக்கான விஜயங்களை மேற்கொண்டுள்ளார். குறித்த விஜயம் இந்தியாவுக்கான நான்காவது விஜயமாகும்.இந்தியாவின் முக்கிய பத்திரிகையின் ஏற்பாட்டில், கர்நாடக மாநிலத்தில் நடைபெறும் நிகழ்வொன்றில் பிரதான சொற்பொழிவை ஆற்றுவதற்கான அழைப்பின் பேரிலேயே அவர் இந்தியாவுக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.நிகழ்வின் பிரதான அதிதியாக கர்நாடக மாநில முதலமைச்சர் சித்தாராமையா கலந்து கொள்ளவுள்ளார்.இரண்டு நாட்கள் தொடர்ச்சியாக நடைபெறும் இந்த நிகழ்வில் அரசியல், வர்த்தகம், கலைகள் மற்றும், விளையாட்டு போன்ற பல்வேறு துறைகளின் விற்பன்னர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.