• Aug 23 2025

வெட்டு காயங்களுடன் சடலமாக கிடந்த மூதாட்டி; முல்லைத்தீவில் பரபரப்பு

Chithra / Aug 23rd 2025, 12:28 pm
image

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பாலைப்பாணி கிராமத்தில் தனிமையில் வசித்து வந்த வயோதிப பெண் ஒருவர் வீட்டில் வெட்டு காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், 

மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவின் பாலைப்பாணி கிராமத்தில் தனிமையில் வசித்து வந்த ராமசாமி ராமயி எனும் 70 வயதான மூதாட்டியே இவ்வாறுஉயிரிழந்துள்ளார். 

மூதாட்டி வீட்டில் சடலமாக கிடப்பதாக கிராமத்தவர்களால் நேற்று (22) மாலை மாங்குளம் பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டது. 

இந்நிலையில் சம்பவ இடத்துக்கு சென்ற மாங்குளம் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதோடு, இன்று (23) காலை கிளிநொச்சி தடயவியல் பொலிசார் சம்பவ இடத்திற்கு வருகை தந்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

சடலத்தை நீதிபதி பார்வையிட்டதன் பின்னர் மேலதிக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. 

மூதாட்டியிடமிருந்து நகை உள்ளிட்ட பொருட்களை களவாடுவதற்காக வெட்டி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகம் வௌியிடப்பட்டுள்ள நிலையில், மாங்குளம் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வெட்டு காயங்களுடன் சடலமாக கிடந்த மூதாட்டி; முல்லைத்தீவில் பரபரப்பு முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பாலைப்பாணி கிராமத்தில் தனிமையில் வசித்து வந்த வயோதிப பெண் ஒருவர் வீட்டில் வெட்டு காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவின் பாலைப்பாணி கிராமத்தில் தனிமையில் வசித்து வந்த ராமசாமி ராமயி எனும் 70 வயதான மூதாட்டியே இவ்வாறுஉயிரிழந்துள்ளார். மூதாட்டி வீட்டில் சடலமாக கிடப்பதாக கிராமத்தவர்களால் நேற்று (22) மாலை மாங்குளம் பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டது. இந்நிலையில் சம்பவ இடத்துக்கு சென்ற மாங்குளம் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதோடு, இன்று (23) காலை கிளிநொச்சி தடயவியல் பொலிசார் சம்பவ இடத்திற்கு வருகை தந்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். சடலத்தை நீதிபதி பார்வையிட்டதன் பின்னர் மேலதிக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. மூதாட்டியிடமிருந்து நகை உள்ளிட்ட பொருட்களை களவாடுவதற்காக வெட்டி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகம் வௌியிடப்பட்டுள்ள நிலையில், மாங்குளம் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement