நாடு முழுவதிலும் தற்போது நிலவுகின்ற மழையுடனான வானிலை அடுத்த சில நாட்களுக்கும் தொடரும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
சப்ரகமுவ, வடமேல், வடக்கு மற்றும் தென் மாகாணங்களில், கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் சில இடங்களில் 100 மி.மீட்டருக்கும் மேலான பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யலாம்.
நாட்டின் பிற பகுதிகளில் பிற்பகல் 1 மணிக்கு பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது.
சில இடங்களில் 75 மி.மீ. அளவுக்கு ஓரளவு பலத்த மழைக்கு எதிர்பார்ப்பு உள்ளது.
இடியுடன் கூடிய மழைக்காக ஏற்படும் பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களால் ஏற்படும் பாதிப்புகளை தவிர்க்க பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.
கடல் பிராந்தியங்களில்,
தென் அந்தமான் கடல் பிராந்தியத்திற்கு மேலாக தாழ் அமுக்கப் பிரதேசம் ஒன்று உருவாகியுள்ளது என சிரேஸ்ட வானிலை அதிகாரியும் ஊடகவியலாளருமான மொஹமட் சாலிஹீன் தெரிவித்துள்ளார்.
இது நாளையளவில் மேலும் தீவிரமடைந்து வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்திற்கு மேலாக ஒரு தாழ் அமுக்கமாக காணப்படுவதுடன் மேற்கு - வடமேற்குத் திசையினுடாக நகர்ந்து செல்லும்.
ஆனபடியினால் மீனவர்களும் கடல்சார் ஊழியர்களும் வளிமண்டலவியல் திணைக்களம் வழங்குகின்ற எதிர்கால எதிர்வு கூறல்களை கவனத்திற் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்களின் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 20 - 30 km வேகத்தில் வடகிழக்குத் திசையில் இருந்து அல்லது மாறுபட்ட திசைகளில் இருந்து காற்று வீசும்.
திருகோணமலை தொடக்கம் காங்கேசன்துறை, மன்னார் ஊடாக புத்தளம் வரையான கரையோரத்திற்கு அப்பால் உள்ள கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 40 km இலும் கூடிய வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து வீசக் கூடும்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும்.
நாட்டை சூழ உள்ள ஏனைய கடல் பிராந்தியங்கள் இடைக்கிடையே ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும்.
ஆனால் இடியுடன் கூடிய மழை பெய்கின்ற சந்தர்ப்பங்களில் பலத்த காற்று வீசுவதுடன் அவ்வேளைகளில் கடல் பிராந்தியங்கள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும்.
அடுத்த சில நாட்களுக்கும் மழையுடனான வானிலை தொடரும் நாடு முழுவதிலும் தற்போது நிலவுகின்ற மழையுடனான வானிலை அடுத்த சில நாட்களுக்கும் தொடரும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.சப்ரகமுவ, வடமேல், வடக்கு மற்றும் தென் மாகாணங்களில், கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் சில இடங்களில் 100 மி.மீட்டருக்கும் மேலான பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யலாம்.நாட்டின் பிற பகுதிகளில் பிற்பகல் 1 மணிக்கு பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது.சில இடங்களில் 75 மி.மீ. அளவுக்கு ஓரளவு பலத்த மழைக்கு எதிர்பார்ப்பு உள்ளது.இடியுடன் கூடிய மழைக்காக ஏற்படும் பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களால் ஏற்படும் பாதிப்புகளை தவிர்க்க பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.கடல் பிராந்தியங்களில், தென் அந்தமான் கடல் பிராந்தியத்திற்கு மேலாக தாழ் அமுக்கப் பிரதேசம் ஒன்று உருவாகியுள்ளது என சிரேஸ்ட வானிலை அதிகாரியும் ஊடகவியலாளருமான மொஹமட் சாலிஹீன் தெரிவித்துள்ளார்.இது நாளையளவில் மேலும் தீவிரமடைந்து வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்திற்கு மேலாக ஒரு தாழ் அமுக்கமாக காணப்படுவதுடன் மேற்கு - வடமேற்குத் திசையினுடாக நகர்ந்து செல்லும். ஆனபடியினால் மீனவர்களும் கடல்சார் ஊழியர்களும் வளிமண்டலவியல் திணைக்களம் வழங்குகின்ற எதிர்கால எதிர்வு கூறல்களை கவனத்திற் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்களின் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 20 - 30 km வேகத்தில் வடகிழக்குத் திசையில் இருந்து அல்லது மாறுபட்ட திசைகளில் இருந்து காற்று வீசும்.திருகோணமலை தொடக்கம் காங்கேசன்துறை, மன்னார் ஊடாக புத்தளம் வரையான கரையோரத்திற்கு அப்பால் உள்ள கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 40 km இலும் கூடிய வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து வீசக் கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும்.நாட்டை சூழ உள்ள ஏனைய கடல் பிராந்தியங்கள் இடைக்கிடையே ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும்.ஆனால் இடியுடன் கூடிய மழை பெய்கின்ற சந்தர்ப்பங்களில் பலத்த காற்று வீசுவதுடன் அவ்வேளைகளில் கடல் பிராந்தியங்கள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும்.