• Oct 09 2026

மகாநாயக்க தேரர்களுடன் ஜனாதிபதி இன்று அவசர சந்திப்பு! ஞானசார தேரர் விவகாரத்தில் அடுத்தகட்டம்

Chithra / Oct 8th 2026, 11:19 am
image

 

கலகொடஅத்தே ஞானசார தேரர் பொது உடையில் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டமை தொடர்பில், முப்பீட மகாநாயக்க தேரர்களின் பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான சிறப்புச் சந்திப்பொன்று இன்று (08) நடைபெறவுள்ளது.


இன்று பிற்பகல் இந் சந்திப்பு ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 


ஞானசார தேரர் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட விதம் குறித்து மூன்று பீடங்களின் மகாநாயக்க தேரர்களும் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்திற்கு நேற்று கடிதம் ஒன்றை அனுப்பியிருந்த நிலையிலேயே இந்தச் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


அக்கடிதத்தில், ஒரு துறவியின் துறவற ஆடையை அகற்றும் அதிகாரம் சங்க சபைக்கு மட்டுமே உரித்தானது என்பதால் இவ்வாறு செய்வது பொருத்தமற்றது எனக் குறிப்பிட்டுள்ள தேரர்கள், 

குற்றஞ்சாட்டப்பட்டுள்ள துறவியை அவரது காவி ஆடையுடன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறும் கேட்டுக்கொண்டுள்ளனர்.


மகாநாயக்க தேரர்களுடன் ஜனாதிபதி இன்று அவசர சந்திப்பு ஞானசார தேரர் விவகாரத்தில் அடுத்தகட்டம்  கலகொடஅத்தே ஞானசார தேரர் பொது உடையில் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டமை தொடர்பில், முப்பீட மகாநாயக்க தேரர்களின் பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான சிறப்புச் சந்திப்பொன்று இன்று (08) நடைபெறவுள்ளது.இன்று பிற்பகல் இந் சந்திப்பு ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஞானசார தேரர் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட விதம் குறித்து மூன்று பீடங்களின் மகாநாயக்க தேரர்களும் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்திற்கு நேற்று கடிதம் ஒன்றை அனுப்பியிருந்த நிலையிலேயே இந்தச் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.அக்கடிதத்தில், ஒரு துறவியின் துறவற ஆடையை அகற்றும் அதிகாரம் சங்க சபைக்கு மட்டுமே உரித்தானது என்பதால் இவ்வாறு செய்வது பொருத்தமற்றது எனக் குறிப்பிட்டுள்ள தேரர்கள், குற்றஞ்சாட்டப்பட்டுள்ள துறவியை அவரது காவி ஆடையுடன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement