• May 07 2025

துப்பாக்கியால் தன்னைதானே சுட்டு உயிர்மாய்த்த பொலிஸ் சார்ஜன்ட்; இன்று அதிகாலையில் பயங்கரம்

Chithra / May 6th 2025, 11:31 am
image

 

அம்பாறை, பதியதலாவ பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர், தனது சேவை துப்பாக்கியால் தன்னை தானே சுட்டு உயிர்மாய்த்துக் கொண்டுள்ளார்.

இந்த சம்பவம் இன்று (06) அதிகாலை 05.20 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

பதியதலாவ பொலிஸ் நிலையத்தின் காவலர் குடியிருப்பில் இவர் தற்கொலை செய்து கொண்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்தது.

உயிரிழந்தவர் பிபில பகுதியைச் சேர்ந்த 59 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையாவார்.

அவர் அடுத்த ஆண்டு ஓய்வு பெற திட்டமிடப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

மேலும், சார்ஜெண்டின் மனைவி, கடந்த ஆண்டு புற்றுநோயால் இறந்ததாகவும் கூறப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் பதியத்தலாவை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


துப்பாக்கியால் தன்னைதானே சுட்டு உயிர்மாய்த்த பொலிஸ் சார்ஜன்ட்; இன்று அதிகாலையில் பயங்கரம்  அம்பாறை, பதியதலாவ பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர், தனது சேவை துப்பாக்கியால் தன்னை தானே சுட்டு உயிர்மாய்த்துக் கொண்டுள்ளார்.இந்த சம்பவம் இன்று (06) அதிகாலை 05.20 மணியளவில் இடம்பெற்றுள்ளது.பதியதலாவ பொலிஸ் நிலையத்தின் காவலர் குடியிருப்பில் இவர் தற்கொலை செய்து கொண்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்தது.உயிரிழந்தவர் பிபில பகுதியைச் சேர்ந்த 59 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையாவார்.அவர் அடுத்த ஆண்டு ஓய்வு பெற திட்டமிடப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.மேலும், சார்ஜெண்டின் மனைவி, கடந்த ஆண்டு புற்றுநோயால் இறந்ததாகவும் கூறப்படுகிறது.சம்பவம் தொடர்பில் பதியத்தலாவை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement