சாமிமலை நகரப் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் நீண்டகாலமாக எதிர்நோக்கி வரும் மிக முக்கியமான பிரச்சினையான குடிநீர் தட்டுப்பாடு.
தற்போது சாமிமலை நகருக்கு நீர் விநியோகம் செய்யும் பழைய நீர் விநியோகக் கட்டமைப்பு (Old Water Supply System) மிகவும் பழமையானதாகவும், பழுதடைந்த நிலையிலும் காணப்படுகிறது.
இதனால் குழாய்களில் அடிக்கடி ஏற்படும் நீர் கசிவுகளால் மற்றும் நீர் குழாய் பழுதடைந்து இருப்பதால் கடந்த சில நாட்களாக நகரில் நீர் விநியோகம் முற்றாகத் தடைப்பட்டுள்ளது.
இப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வாக ஆரம்பிக்கப்பட்ட புதிய குடிநீர் வேலைத்திட்டமும் ஆரம்பக்கட்ட வேலைகளுடன் நீண்டகாலமாக ஸ்தம்பிதமடைந்துள்ளது. அத்திட்டம் ஏன் கிடப்பில் போடப்பட்டுள்ளது என்பது மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
சீரற்ற குடி நீர் விநியோகம் பழைய குழாய்கள் பழுதடைந்துள்ளதால் வாரக்கணக்கில் குடி நீர் இன்றி சாமிமலை நகரில் உள்ள மக்கள் அவதிப்படுகின்றனர்.
இதனால் பொருளாதாரப் பாதிப்பு வர்த்தக நிலையங்கள் மற்றும் உணவகங்கள் நீர் இன்றி இயங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
மக்களின் அவலம் முதியவர்கள் மற்றும் சிறுவர்கள் குடிநீருக்காக நீண்ட தூரம் அலைந்து திரியும் அவல நிலை தொடர்கிறது.
எனவே, தற்போதுள்ள பழைய நீர் விநியோகக் கட்டமைப்பை உடனடியாகச் சீர் செய்து சீரான நீர் விநியோகத்தை உறுதிப்படுத்துமாறும், அதேவேளை பாதியில் இடை நிறுத்தப்பட்டுள்ள புதிய குடிநீர் திட்டப் பணிகளை விரைவாக மீண்டும் ஆரம்பித்து நிரந்தரத் தீர்வை பெற்றுத்தருமாறும் மஸ்கெலியா பிரதேச சபையின் தவிசாளரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மஸ்கெலியா குடிநீர் திட்டத்தை விரைவுபடுத்த மக்கள் கோரிக்கை சாமிமலை நகரப் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் நீண்டகாலமாக எதிர்நோக்கி வரும் மிக முக்கியமான பிரச்சினையான குடிநீர் தட்டுப்பாடு. தற்போது சாமிமலை நகருக்கு நீர் விநியோகம் செய்யும் பழைய நீர் விநியோகக் கட்டமைப்பு (Old Water Supply System) மிகவும் பழமையானதாகவும், பழுதடைந்த நிலையிலும் காணப்படுகிறது. இதனால் குழாய்களில் அடிக்கடி ஏற்படும் நீர் கசிவுகளால் மற்றும் நீர் குழாய் பழுதடைந்து இருப்பதால் கடந்த சில நாட்களாக நகரில் நீர் விநியோகம் முற்றாகத் தடைப்பட்டுள்ளது. இப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வாக ஆரம்பிக்கப்பட்ட புதிய குடிநீர் வேலைத்திட்டமும் ஆரம்பக்கட்ட வேலைகளுடன் நீண்டகாலமாக ஸ்தம்பிதமடைந்துள்ளது. அத்திட்டம் ஏன் கிடப்பில் போடப்பட்டுள்ளது என்பது மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.சீரற்ற குடி நீர் விநியோகம் பழைய குழாய்கள் பழுதடைந்துள்ளதால் வாரக்கணக்கில் குடி நீர் இன்றி சாமிமலை நகரில் உள்ள மக்கள் அவதிப்படுகின்றனர்.இதனால் பொருளாதாரப் பாதிப்பு வர்த்தக நிலையங்கள் மற்றும் உணவகங்கள் நீர் இன்றி இயங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.மக்களின் அவலம் முதியவர்கள் மற்றும் சிறுவர்கள் குடிநீருக்காக நீண்ட தூரம் அலைந்து திரியும் அவல நிலை தொடர்கிறது.எனவே, தற்போதுள்ள பழைய நீர் விநியோகக் கட்டமைப்பை உடனடியாகச் சீர் செய்து சீரான நீர் விநியோகத்தை உறுதிப்படுத்துமாறும், அதேவேளை பாதியில் இடை நிறுத்தப்பட்டுள்ள புதிய குடிநீர் திட்டப் பணிகளை விரைவாக மீண்டும் ஆரம்பித்து நிரந்தரத் தீர்வை பெற்றுத்தருமாறும் மஸ்கெலியா பிரதேச சபையின் தவிசாளரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.