• Jan 19 2026

1,500க்கும் மேற்பட்ட உப்பு கொள்கலன்கள் இலங்கை துறைமுகங்களில் தேக்கம்

Chithra / Jan 18th 2026, 10:44 am
image

 

சுமார் 1,500க்கும் மேற்பட்ட உப்பு கொள்கலன்கள் இலங்கை துறைமுகங்களில் தேங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 

 

இறக்குமதி செய்ய அனுமதிக்கப்பட்ட காலம் கடந்த பின்னரே, இந்த கொள்கலன்கள் இலங்கைக்கு வந்துள்ளதாக இலங்கை சுங்கம் மற்றும் வர்த்தக அமைச்சு என்பன குறிப்பிட்டுள்ளன. 

 

கடந்த 2025 மே மாதம் 15 ஆம் திகதி முதல் ஜூன் மாதம் 10 ஆம் திகதி வரை மாத்திரமே உப்பு இறக்குமதிக்கு அனுமதி வழங்கி வர்த்தமானி வெளியிடப்பட்டது. 

 

இதனை இறக்குமதியாளர்கள் மீறியதால், அந்த சரக்குகளை விடுவிக்க முடியாது என்றும், அவை கட்டாயமாக மீண்டும் ஏற்றுமதி செய்யப்பட வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

 

இறக்குமதியாளர்கள் சரக்குகளைப் பெற்றுக்கொள்ளாததால் அவை கைவிடப்பட்ட சரக்குகளாகக் கருதப்படுகின்றன. 

 

அத்துடன் மீண்டும் ஏற்றுமதி செய்வதற்கான அதிக செலவு காரணமாக இறக்குமதியாளர்கள் அதற்கு முன்வரவில்லை என இலங்கை சுங்கம் தெரிவித்துள்ளது. 

 

அதனால், சுங்க வரி அல்லது துறைமுகக் கட்டணங்களையும் வசூலிக்க முடியாது உள்ளதாகவும் இலங்கை சுங்கம் குறிப்பிட்டுள்ளது.

1,500க்கும் மேற்பட்ட உப்பு கொள்கலன்கள் இலங்கை துறைமுகங்களில் தேக்கம்  சுமார் 1,500க்கும் மேற்பட்ட உப்பு கொள்கலன்கள் இலங்கை துறைமுகங்களில் தேங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.  இறக்குமதி செய்ய அனுமதிக்கப்பட்ட காலம் கடந்த பின்னரே, இந்த கொள்கலன்கள் இலங்கைக்கு வந்துள்ளதாக இலங்கை சுங்கம் மற்றும் வர்த்தக அமைச்சு என்பன குறிப்பிட்டுள்ளன.  கடந்த 2025 மே மாதம் 15 ஆம் திகதி முதல் ஜூன் மாதம் 10 ஆம் திகதி வரை மாத்திரமே உப்பு இறக்குமதிக்கு அனுமதி வழங்கி வர்த்தமானி வெளியிடப்பட்டது.  இதனை இறக்குமதியாளர்கள் மீறியதால், அந்த சரக்குகளை விடுவிக்க முடியாது என்றும், அவை கட்டாயமாக மீண்டும் ஏற்றுமதி செய்யப்பட வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.  இறக்குமதியாளர்கள் சரக்குகளைப் பெற்றுக்கொள்ளாததால் அவை கைவிடப்பட்ட சரக்குகளாகக் கருதப்படுகின்றன.  அத்துடன் மீண்டும் ஏற்றுமதி செய்வதற்கான அதிக செலவு காரணமாக இறக்குமதியாளர்கள் அதற்கு முன்வரவில்லை என இலங்கை சுங்கம் தெரிவித்துள்ளது.  அதனால், சுங்க வரி அல்லது துறைமுகக் கட்டணங்களையும் வசூலிக்க முடியாது உள்ளதாகவும் இலங்கை சுங்கம் குறிப்பிட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement