• May 04 2025

வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்ற 20 குற்றவாளிகளை மீண்டும் அழைத்து வர அதிரடி நடவடிக்கை

Chithra / May 4th 2025, 3:53 pm
image


நாட்டில் குற்றங்களை செய்து விட்டு வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்ற பலரை மீண்டும் அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை பொலிஸ் அறிவித்துள்ளது.

டுபாய், இந்தியா மற்றும் கனடா போன்ற நாடுகளில் தற்போது வசிக்கும் இதுபோன்ற 20க்கும் மேற்பட்ட குற்றவாளிகளை மீண்டும் அழைத்து வருவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட  பொலிஸ் அத்தியட்சகருமான புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை (04) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த தகவலை வெளியிட்டார்.

வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்ற 20 குற்றவாளிகளை மீண்டும் அழைத்து வர அதிரடி நடவடிக்கை நாட்டில் குற்றங்களை செய்து விட்டு வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்ற பலரை மீண்டும் அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை பொலிஸ் அறிவித்துள்ளது.டுபாய், இந்தியா மற்றும் கனடா போன்ற நாடுகளில் தற்போது வசிக்கும் இதுபோன்ற 20க்கும் மேற்பட்ட குற்றவாளிகளை மீண்டும் அழைத்து வருவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட  பொலிஸ் அத்தியட்சகருமான புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.கொழும்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை (04) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த தகவலை வெளியிட்டார்.

Advertisement

Advertisement

Advertisement