உள்ளூர் சந்தையில் முன்கூட்டியே பொட்டலமிடப்பட்ட தேங்காய் எண்ணெயை மட்டுமே விற்பனை செய்ய முடியும் என்று தேங்காய் மேம்பாட்டு ஆணையத்தின் தலைவர் சாந்த ரணதுங்க தெரிவித்தார்.
இது தொடர்பில் ஊடகங்களுக்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
உள்ளூர் சந்தையில் முன்கூட்டியே பொட்டலமிடப்பட்ட தேங்காய் எண்ணெயை மட்டுமே விற்பனை செய்ய அனுமதிக்கும் புதிய அமைச்சரவைப் பத்திரம் தயாரிக்கப்பட்டு வருகின்றது.
சந்தையில் தேங்காய் எண்ணெய் விற்பனையை தரப்படுத்தவும் ஒழுங்குபடுத்தவும் இந்த நடவடிக்கை எடுக்கப்படுகின்றது.
“பைகள், பழைய கொள்கலன்கள் மற்றும் பாட்டில்களில் விற்கப்படும் தேங்காய் எண்ணெய் எதிர்காலத்தில் சட்டவிரோதமானது. விதிமுறைகளை மீறுபவர்களுக்கு எதிராக நுகர்வோர் விவகார அதிகாரசபையால் சோதனைகள் நடத்தப்படும். மேலும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
உற்பத்தியாளர்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் புதிய விதிமுறைகளுக்கு ஏற்ப மாற 06 முதல் 08 மாதங்கள் அல்லது ஒரு வருடம் வரை சலுகை காலம் வழங்கப்படும்.- என்றார்.
எதிர்காலத்தில் பொட்டலமிடப்பட்ட தேங்காய் எண்ணெய் மட்டுமே விற்பனை உள்ளூர் சந்தையில் முன்கூட்டியே பொட்டலமிடப்பட்ட தேங்காய் எண்ணெயை மட்டுமே விற்பனை செய்ய முடியும் என்று தேங்காய் மேம்பாட்டு ஆணையத்தின் தலைவர் சாந்த ரணதுங்க தெரிவித்தார்.இது தொடர்பில் ஊடகங்களுக்கு அவர் மேலும் தெரிவிக்கையில், உள்ளூர் சந்தையில் முன்கூட்டியே பொட்டலமிடப்பட்ட தேங்காய் எண்ணெயை மட்டுமே விற்பனை செய்ய அனுமதிக்கும் புதிய அமைச்சரவைப் பத்திரம் தயாரிக்கப்பட்டு வருகின்றது. சந்தையில் தேங்காய் எண்ணெய் விற்பனையை தரப்படுத்தவும் ஒழுங்குபடுத்தவும் இந்த நடவடிக்கை எடுக்கப்படுகின்றது. “பைகள், பழைய கொள்கலன்கள் மற்றும் பாட்டில்களில் விற்கப்படும் தேங்காய் எண்ணெய் எதிர்காலத்தில் சட்டவிரோதமானது. விதிமுறைகளை மீறுபவர்களுக்கு எதிராக நுகர்வோர் விவகார அதிகாரசபையால் சோதனைகள் நடத்தப்படும். மேலும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.உற்பத்தியாளர்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் புதிய விதிமுறைகளுக்கு ஏற்ப மாற 06 முதல் 08 மாதங்கள் அல்லது ஒரு வருடம் வரை சலுகை காலம் வழங்கப்படும்.- என்றார்.