• Jul 18 2025

பூசணிக்காய் தோட்டத்தில் மின்சாரம் தாக்கி ஒருவர் பலி - ஒருவர் கைது

Chithra / Jul 18th 2025, 9:08 am
image


அம்பாறை, உஹன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கலஹிடியாகொட கிராமத்தில் உள்ள பூசணிக்காய் தோட்டத்தில் சட்டவிரோதமாக பொருத்தப்பட்டிருந்த மின்சார கம்பியில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். 

இந்த சம்பவம் கடந்த புதன்கிழமை இரவு நிகழ்ந்ததாக  விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 

உயிரிழந்தவர் கலஹிடியாகொட கிராமத்தைச் சேர்ந்த கெலும் நமல் என அடையாளம் காணப்பட்டுள்ளார். 

சம்பவத்தை அடுத்து, உஹன பொலிஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து, பூசணிக்காய் தோட்டத்தில் சட்டவிரோதமாக மின்சாரம் இணைத்த ஒருவரை கைது செய்தனர்.

இச்சம்பவம் தொடர்பில் உஹன பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பூசணிக்காய் தோட்டத்தில் மின்சாரம் தாக்கி ஒருவர் பலி - ஒருவர் கைது அம்பாறை, உஹன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கலஹிடியாகொட கிராமத்தில் உள்ள பூசணிக்காய் தோட்டத்தில் சட்டவிரோதமாக பொருத்தப்பட்டிருந்த மின்சார கம்பியில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் கடந்த புதன்கிழமை இரவு நிகழ்ந்ததாக  விசாரணைகளில் தெரியவந்துள்ளது. உயிரிழந்தவர் கலஹிடியாகொட கிராமத்தைச் சேர்ந்த கெலும் நமல் என அடையாளம் காணப்பட்டுள்ளார். சம்பவத்தை அடுத்து, உஹன பொலிஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து, பூசணிக்காய் தோட்டத்தில் சட்டவிரோதமாக மின்சாரம் இணைத்த ஒருவரை கைது செய்தனர்.இச்சம்பவம் தொடர்பில் உஹன பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement