• Jul 18 2025

யாழில் பாடகர் ஸ்ரீநிவாஸ் உள்ளிட்ட சரிகமப குழுவினருக்கு அமோக வரவேற்பு

Chithra / Jul 18th 2025, 2:56 pm
image


யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள இசை நிகழ்ச்சியொன்றிற்காக பிரபல பாடகர் ஸ்ரீநிவாஸ் உள்ளிட்ட குழுவினர் இன்று  நாட்டிற்கு வருகை தந்துள்ளனர். 

யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையம் ஊடாக இன்று மதியம் யாழ்ப்பாணத்தை வந்தடைந்தனர்.

யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர்களின் போக்குவரத்து வசதிகளுக்காக பேருந்து ஒன்றை கொள்வனவு செய்வதற்கான நிதியை திரட்டும் முகமாக குறித்த இசைநிகழ்ச்சி யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ளது.

இந்த இசை நிகழ்ச்சி யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தில் நாளைய தினம் சனிக்கிழமை மாலை ஆறு மணிக்கு இடம்பெறவுள்ளது. 

இதன்போது பாடகர் ஸ்ரீனிவாஸ், ஜீவன் சரண்யா ஸ்ரீனிவாஸ், கில்மிசா, அக்சயா ஆகியோரை மருத்துவ பீட மாணவர்கள் மலர்ச்செண்டு கொடுத்து வரவேற்றனர்.

மேலும், பாடகர் ஸ்ரீநிவாஸ் இலங்கைக்கு விஜயம் செய்வது இது இரண்டாவது முறை என்பதும் குறிப்பிடத்தக்கது. 


யாழில் பாடகர் ஸ்ரீநிவாஸ் உள்ளிட்ட சரிகமப குழுவினருக்கு அமோக வரவேற்பு யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள இசை நிகழ்ச்சியொன்றிற்காக பிரபல பாடகர் ஸ்ரீநிவாஸ் உள்ளிட்ட குழுவினர் இன்று  நாட்டிற்கு வருகை தந்துள்ளனர். யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையம் ஊடாக இன்று மதியம் யாழ்ப்பாணத்தை வந்தடைந்தனர்.யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர்களின் போக்குவரத்து வசதிகளுக்காக பேருந்து ஒன்றை கொள்வனவு செய்வதற்கான நிதியை திரட்டும் முகமாக குறித்த இசைநிகழ்ச்சி யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ளது.இந்த இசை நிகழ்ச்சி யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தில் நாளைய தினம் சனிக்கிழமை மாலை ஆறு மணிக்கு இடம்பெறவுள்ளது. இதன்போது பாடகர் ஸ்ரீனிவாஸ், ஜீவன் சரண்யா ஸ்ரீனிவாஸ், கில்மிசா, அக்சயா ஆகியோரை மருத்துவ பீட மாணவர்கள் மலர்ச்செண்டு கொடுத்து வரவேற்றனர்.மேலும், பாடகர் ஸ்ரீநிவாஸ் இலங்கைக்கு விஜயம் செய்வது இது இரண்டாவது முறை என்பதும் குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement

Advertisement