வெள்ளிக்கிழமைகளில் பாடசாலை வேளைக்குப் பின்னரும் ஞாயிற்றுக் கிழமைகளில் மதியத்துக்கு முன்னரும் தனியார் பிரத்தியேக வகுப்புகளை முழுமையாக நிறுத்தி, மாணவர்கள் சமய விழுமியங்களைப் புரிந்து வழிபடவும் வாழவும் உரிய சந்தர்ப்பங்களை ஏற்படுத்தித் தருமாறு யாழ் மாவட்ட சர்வ மத பேரவையின் செயலாளர் அருட்பணி இ. ராஜ்குமார், வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகனுக்கு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.
அக் கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது
விரக்தி, தற்கொலை, போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாதல், வன்முறை வாள் வெட்டு என்பன அதிகரித்துவரும் சமகால சூழ்நிலையில் ஆரோக்கியமான ஒரு சமூகத்தை உருவாக்க சமய விழுமியங்கள் மற்றும் ஒழுக்கம் மிக்க வாழ்க்கைமுறையை உறுதி செய்ய உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியம்.
அத்துடன் மாணவர்கள் விளையாட்டுகளில் ஈடுபடுவதை ஊக்குவிப்பதும் அவசியம். விளையாட்டுக்கழகங்கள் சமூக உறவை மேம்படுத்த உரிய விளையாட்டுகளில் ஈடுபட ஊக்குவிக்கப்பட வேண்டும்.
கிராமங்களில் சமூக உருவாக்கங்களை ஏற்படுத்தி வந்த சனசமூகநிலையங்கள் தொடர்ந்து இயங்க உரிய வழிவகைகளை மேற்கொள்ளவேண்டும். இவை எமது சமூகத்தில் நல்ல மனிதர்கள் உருவாவதை உறுதி செய்யும்.
தனியார் பிரத்தியேக வகுப்புகளை, குறைந்தது தரம் 10க்கு உட்பட்டவர்களுக்காவது, வெள்ளி மற்றும் ஞாயிறுகளில் நிறுத்தி, நல்ல ஒரு ஆக்கபூர்வமான சமூகத்தை உருவாக்க உரிய வசதிப்படுத்தல்களை மேற்கொள்ளும்படி தயவுடன் கேட்டுக்கொள்கிறோம்.
இந்த விடயத்தில், எமது ஒத்துழைப்பையும் உடனிருப்பையும் உறுதி செய்கிறோம். என தெரிவித்துள்ளனர்.
தனியார் பிரத்தியேக வகுப்புக்கள் தொடர்பில் வடக்கு ஆளுநரிடம் சர்வ மத பேரவை விடுத்துள்ள கோரிக்கை வெள்ளிக்கிழமைகளில் பாடசாலை வேளைக்குப் பின்னரும் ஞாயிற்றுக் கிழமைகளில் மதியத்துக்கு முன்னரும் தனியார் பிரத்தியேக வகுப்புகளை முழுமையாக நிறுத்தி, மாணவர்கள் சமய விழுமியங்களைப் புரிந்து வழிபடவும் வாழவும் உரிய சந்தர்ப்பங்களை ஏற்படுத்தித் தருமாறு யாழ் மாவட்ட சர்வ மத பேரவையின் செயலாளர் அருட்பணி இ. ராஜ்குமார், வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகனுக்கு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார். அக் கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது விரக்தி, தற்கொலை, போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாதல், வன்முறை வாள் வெட்டு என்பன அதிகரித்துவரும் சமகால சூழ்நிலையில் ஆரோக்கியமான ஒரு சமூகத்தை உருவாக்க சமய விழுமியங்கள் மற்றும் ஒழுக்கம் மிக்க வாழ்க்கைமுறையை உறுதி செய்ய உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியம்.அத்துடன் மாணவர்கள் விளையாட்டுகளில் ஈடுபடுவதை ஊக்குவிப்பதும் அவசியம். விளையாட்டுக்கழகங்கள் சமூக உறவை மேம்படுத்த உரிய விளையாட்டுகளில் ஈடுபட ஊக்குவிக்கப்பட வேண்டும். கிராமங்களில் சமூக உருவாக்கங்களை ஏற்படுத்தி வந்த சனசமூகநிலையங்கள் தொடர்ந்து இயங்க உரிய வழிவகைகளை மேற்கொள்ளவேண்டும். இவை எமது சமூகத்தில் நல்ல மனிதர்கள் உருவாவதை உறுதி செய்யும்.தனியார் பிரத்தியேக வகுப்புகளை, குறைந்தது தரம் 10க்கு உட்பட்டவர்களுக்காவது, வெள்ளி மற்றும் ஞாயிறுகளில் நிறுத்தி, நல்ல ஒரு ஆக்கபூர்வமான சமூகத்தை உருவாக்க உரிய வசதிப்படுத்தல்களை மேற்கொள்ளும்படி தயவுடன் கேட்டுக்கொள்கிறோம்.இந்த விடயத்தில், எமது ஒத்துழைப்பையும் உடனிருப்பையும் உறுதி செய்கிறோம். என தெரிவித்துள்ளனர்.