• Aug 03 2025

குளத்தில் மூழ்கி ஒருவர் உயிரிழப்பு! அநுராதபுரத்தில் விபரீதம்!

shanuja / Aug 1st 2025, 6:02 pm
image

அநுராதபுரத்தில் குளத்தில் மூழ்கி ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர். 


அநுராதபுரம், நொச்சியாகம, பஹளஹல்மில்லேவ குளத்தில் நீராடிக்கொண்டிருந்த ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக நொச்சியாகம பொலிஸார் தெரிவித்தனர்.


இந்த சம்பவம் நேற்று வியாழக்கிழமை (31) இரவு இடம்பெற்றுள்ளது.


உயிரிழந்தவர் நொச்சியாகம, பஹளஹல்மில்லேவ பகுதியை வசிப்பிடமாகக் கொண்ட 40 வயதுடையவர் ஆவார். 


உயிரிழந்தவரின் சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக நொச்சியாகம வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. 


சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நொச்சியாகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

குளத்தில் மூழ்கி ஒருவர் உயிரிழப்பு அநுராதபுரத்தில் விபரீதம் அநுராதபுரத்தில் குளத்தில் மூழ்கி ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர். அநுராதபுரம், நொச்சியாகம, பஹளஹல்மில்லேவ குளத்தில் நீராடிக்கொண்டிருந்த ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக நொச்சியாகம பொலிஸார் தெரிவித்தனர்.இந்த சம்பவம் நேற்று வியாழக்கிழமை (31) இரவு இடம்பெற்றுள்ளது.உயிரிழந்தவர் நொச்சியாகம, பஹளஹல்மில்லேவ பகுதியை வசிப்பிடமாகக் கொண்ட 40 வயதுடையவர் ஆவார். உயிரிழந்தவரின் சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக நொச்சியாகம வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நொச்சியாகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement