அரச அதிகாரிகள் தகவல்களை வழங்கும் போது பொறுப்புணர்வுடன் வழங்க வேண்டுமென பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் அபிவிருத்தி திட்ட கூட்டங்களுக்கு வரும் அதிகாரிகள் தகவல்கள் சரியானவையா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டுமென தெரிவித்துள்ளார்.
எவ்வித முன் ஆயத்தங்களும் இன்றி வெறுமனே தகவல்களை வழங்கக் கூடாது. உரிய ஆயத்தமின்றி அதிகாரிகள் கூட்டங்களுக்கு வரக் கூடாது என பிரதமர் அறிவித்துள்ளார்.
அண்மையில் பிரதமரினால் செய்மதி ஒன்று தொடர்பில் நாடாளுமன்றில் வழங்கிய தகவல்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் புதல்வர் ரோஹித ராஜபக்சவின் மேற்பார்வையில் விண்ணுக்கு ஏவப்பட்டதாக கூறப்படும் சுப்ரீம் செட் என்னும் செய்மதி தொடர்பில் ஹரினி அமரசூரிய தகவல்களை வழங்கியிருந்தார்.
இந்த தகவல்கள் ஆளும் தரப்பிலும் எதிர்க்கட்சிகள் மத்தியிலும் பெரும் வாதப் பிரதிவாதங்களை ஏற்படுத்தியிருந்தது.
உரிய ஆயத்தமின்றி அதிகாரிகள் கூட்டங்களுக்கு வரக் கூடாது பிரதமர் எச்சரிக்கை அரச அதிகாரிகள் தகவல்களை வழங்கும் போது பொறுப்புணர்வுடன் வழங்க வேண்டுமென பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.அரசாங்கத்தின் அபிவிருத்தி திட்ட கூட்டங்களுக்கு வரும் அதிகாரிகள் தகவல்கள் சரியானவையா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டுமென தெரிவித்துள்ளார்.எவ்வித முன் ஆயத்தங்களும் இன்றி வெறுமனே தகவல்களை வழங்கக் கூடாது. உரிய ஆயத்தமின்றி அதிகாரிகள் கூட்டங்களுக்கு வரக் கூடாது என பிரதமர் அறிவித்துள்ளார்.அண்மையில் பிரதமரினால் செய்மதி ஒன்று தொடர்பில் நாடாளுமன்றில் வழங்கிய தகவல்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் புதல்வர் ரோஹித ராஜபக்சவின் மேற்பார்வையில் விண்ணுக்கு ஏவப்பட்டதாக கூறப்படும் சுப்ரீம் செட் என்னும் செய்மதி தொடர்பில் ஹரினி அமரசூரிய தகவல்களை வழங்கியிருந்தார்.இந்த தகவல்கள் ஆளும் தரப்பிலும் எதிர்க்கட்சிகள் மத்தியிலும் பெரும் வாதப் பிரதிவாதங்களை ஏற்படுத்தியிருந்தது.