புனித இடமாக உலகெங்கும் வாழும் இந்து மக்களால் போற்றப்படும் நல்லூர் ஆலய சூழலில் அசைவ உணவகம் அமைக்கப்பட்டிருப்பது மிகுந்த கண்டனத்திற்குரியது என சர்வதேச இந்து மத பீட செயலாளர் கலாநிதி சிவஸ்ரீ ராமசந்திர குருக்கள் பாபு சர்மா தெரிவித்துள்ளார்.
யாழ். நல்லூர் ஆலய சூழலில் புதிதாக திறக்கப்பட்ட அசைவ உணவகத்தை குறித்த பகுதியிலிருந்து அகற்றுமாறு பல்வேறு அமைப்புக்கள், மத தலைவர்கள், பொதுமக்கள் என பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், நல்லூர் ஆலய சூழலில் அசைவ உணவகம் அமைக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து சர்வதேச இந்து மத பீட செயலாளர் கலாநிதி சிவஸ்ரீ ராமசந்திர குருக்கள் பாபு சர்மா வெளியிட்ட அறிக்கையில்,
சைவத்தையும் தமிழையும் கட்டி காத்த நாவலர் பெருமான் பிறந்த இடம் அதே போல் உலகவாழ் இந்துக்களால் புனிதமாக போற்றப்படும் நல்லூர் கந்தசுவாமி வீற்றிருக்கும் இடம் அந்த வகையில் ஒருபோதும் இல்லாதவறு மாநகர சபை ஆணையாளர் அனுமதி இன்றி இந்த அசைவ உணவகம் திறந்திருக்க முடியாது.
எனவே யாழ் மாநகர சபை இதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
அதே போன்று வட மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகம் சைவத்தின் மீது மிகுந்த பற்று கொண்டவர்.
எனவே, உடனடியாக இதற்கான தீர்வை மேற்கொள்ள வேண்டும் என பாபுசர்மா தனது கண்டன அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
நல்லூர் ஆலய சூழலில் அசைவ உணவகம்:ஆளுநரின் நடவடிக்கை தேவை-சர்வதேச இந்து மத பீடம் வேண்டுகோள். புனித இடமாக உலகெங்கும் வாழும் இந்து மக்களால் போற்றப்படும் நல்லூர் ஆலய சூழலில் அசைவ உணவகம் அமைக்கப்பட்டிருப்பது மிகுந்த கண்டனத்திற்குரியது என சர்வதேச இந்து மத பீட செயலாளர் கலாநிதி சிவஸ்ரீ ராமசந்திர குருக்கள் பாபு சர்மா தெரிவித்துள்ளார். யாழ். நல்லூர் ஆலய சூழலில் புதிதாக திறக்கப்பட்ட அசைவ உணவகத்தை குறித்த பகுதியிலிருந்து அகற்றுமாறு பல்வேறு அமைப்புக்கள், மத தலைவர்கள், பொதுமக்கள் என பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.இந்நிலையில், நல்லூர் ஆலய சூழலில் அசைவ உணவகம் அமைக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து சர்வதேச இந்து மத பீட செயலாளர் கலாநிதி சிவஸ்ரீ ராமசந்திர குருக்கள் பாபு சர்மா வெளியிட்ட அறிக்கையில்,சைவத்தையும் தமிழையும் கட்டி காத்த நாவலர் பெருமான் பிறந்த இடம் அதே போல் உலகவாழ் இந்துக்களால் புனிதமாக போற்றப்படும் நல்லூர் கந்தசுவாமி வீற்றிருக்கும் இடம் அந்த வகையில் ஒருபோதும் இல்லாதவறு மாநகர சபை ஆணையாளர் அனுமதி இன்றி இந்த அசைவ உணவகம் திறந்திருக்க முடியாது. எனவே யாழ் மாநகர சபை இதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அதே போன்று வட மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகம் சைவத்தின் மீது மிகுந்த பற்று கொண்டவர். எனவே, உடனடியாக இதற்கான தீர்வை மேற்கொள்ள வேண்டும் என பாபுசர்மா தனது கண்டன அறிக்கையில் தெரிவித்துள்ளார்.