நயினாதீவு குறிகட்டுவான் இடையில் சேவையில் ஈடுபட்ட பாதை படகு நேற்றையதினம் இரவு வேளை கடலில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான இப் பாதை படகு நயினாதீவு -குறிகட்டுவான் இடையில் சேவையில் ஈடுபட்ட நிலையில் நீண்ட காலமாக பழுதடைந்து சேவையில் ஈடுபட முடியாமல் நயினாதீவு துறைமுகத்தில் தரித்துவிடப்பட்டிருந்த நிலையில் இன்று வீசிய கடும் காற்றின் வேகத்தில் கடலில் மூழ்கியுள்ளது.
இதேவேளை, அண்மையில் இப் பாதை படகு திருத்தப்பட்டு சீரான சேவையினை வழங்க ஒழுங்குகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் உறுதியளித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
நீரில் மூழ்கிய நயினாதீவு- குறிகட்டுவான் பாதை படகு. நயினாதீவு குறிகட்டுவான் இடையில் சேவையில் ஈடுபட்ட பாதை படகு நேற்றையதினம் இரவு வேளை கடலில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான இப் பாதை படகு நயினாதீவு -குறிகட்டுவான் இடையில் சேவையில் ஈடுபட்ட நிலையில் நீண்ட காலமாக பழுதடைந்து சேவையில் ஈடுபட முடியாமல் நயினாதீவு துறைமுகத்தில் தரித்துவிடப்பட்டிருந்த நிலையில் இன்று வீசிய கடும் காற்றின் வேகத்தில் கடலில் மூழ்கியுள்ளது.இதேவேளை, அண்மையில் இப் பாதை படகு திருத்தப்பட்டு சீரான சேவையினை வழங்க ஒழுங்குகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் உறுதியளித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.