• Aug 02 2025

மயிலிட்டி துறைமுகத்திற்கு சிறீதரன் எம்.பி கண்காணிப்பு விஜயம்!

shanuja / Aug 1st 2025, 8:26 pm
image

தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன், மயிலிட்டி துறைமுகத்திற்கு கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.


மயிலிட்டி துறைமுகத்தில் ஏற்பட்டுள்ள இடப்பற்றாக்குறை, இந்திய மீனவர்களின் 140 க்கும் மேற்பட்ட படகுகள் குறித்த துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் ஏற்பட்டுள்ள இட நெருக்கடி எதிர்காலத்தில் எடுக்க வேண்டிய நடவடிக்கை தொடர்பில் இதன் போது ஆராய்ந்தார்.


குறிப்பாக உள்ளூர் மீனவர்கள் தங்களுடைய படகுகளை கரையில் கட்டி வைக்க முடியாத அளவிற்கு இடப்பற்றாக்குறை காணப்படுவதாக மீனவர்களுக்கு சுட்டிக்காட்டினர். 


விஜயத்திற்குப் பின்னர் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் கருத்து தெரிவிக்கையில், 


மயிலிட்டி துறைமுகம் என்பது இலங்கையின் துறைமுகங்களில் மிகப்பெரிய துறைமுகம். யுத்தத்துக்கு முன்னர் இந்த துறைமுகத்தில் இருந்து பிடிக்கப்படும் மீன்கள் தேசிய பொருளாதார மீன் உற்பத்தியில் மூன்றில் இரண்டு ஒரு பங்கினை வகிக்கின்றது. 


ஆனால் அந்த நிலைமை தற்பொழுது மாறி மீனவர்கள், பாதிப்படையும் செயலே காணப்படுகின்றது. 1990 ஆம் ஆண்டுக்கு முன்னர் இந்த துறைமுகம் தேசிய பொருளாதார உற்பத்தியில் அளப்பெரிய பங்கினை ஆற்றியது. 


ஆனால் தற்பொழுது இந்த துறைமுகம் இந்திய மீனவர்களின் படகுகளை கட்டி வைப்பதற்கு பயன்படுத்தப்படும் ஒரு இடமாகவே காணப்படுகின்றது. 


 இதற்கு ஒரு மாற்றுத் தீர்வினை நாங்கள் பெற்றுக் கொள்ள வேண்டும் இது தொடர்பில் நான் பாராளுமன்றத்தில் ஒத்திவைப்பு பிரேரனை ஒன்றை முன்வைத்து பேச உள்ளேன். என்றார்.

மயிலிட்டி துறைமுகத்திற்கு சிறீதரன் எம்.பி கண்காணிப்பு விஜயம் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன், மயிலிட்டி துறைமுகத்திற்கு கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.மயிலிட்டி துறைமுகத்தில் ஏற்பட்டுள்ள இடப்பற்றாக்குறை, இந்திய மீனவர்களின் 140 க்கும் மேற்பட்ட படகுகள் குறித்த துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் ஏற்பட்டுள்ள இட நெருக்கடி எதிர்காலத்தில் எடுக்க வேண்டிய நடவடிக்கை தொடர்பில் இதன் போது ஆராய்ந்தார்.குறிப்பாக உள்ளூர் மீனவர்கள் தங்களுடைய படகுகளை கரையில் கட்டி வைக்க முடியாத அளவிற்கு இடப்பற்றாக்குறை காணப்படுவதாக மீனவர்களுக்கு சுட்டிக்காட்டினர். விஜயத்திற்குப் பின்னர் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் கருத்து தெரிவிக்கையில், மயிலிட்டி துறைமுகம் என்பது இலங்கையின் துறைமுகங்களில் மிகப்பெரிய துறைமுகம். யுத்தத்துக்கு முன்னர் இந்த துறைமுகத்தில் இருந்து பிடிக்கப்படும் மீன்கள் தேசிய பொருளாதார மீன் உற்பத்தியில் மூன்றில் இரண்டு ஒரு பங்கினை வகிக்கின்றது. ஆனால் அந்த நிலைமை தற்பொழுது மாறி மீனவர்கள், பாதிப்படையும் செயலே காணப்படுகின்றது. 1990 ஆம் ஆண்டுக்கு முன்னர் இந்த துறைமுகம் தேசிய பொருளாதார உற்பத்தியில் அளப்பெரிய பங்கினை ஆற்றியது. ஆனால் தற்பொழுது இந்த துறைமுகம் இந்திய மீனவர்களின் படகுகளை கட்டி வைப்பதற்கு பயன்படுத்தப்படும் ஒரு இடமாகவே காணப்படுகின்றது.  இதற்கு ஒரு மாற்றுத் தீர்வினை நாங்கள் பெற்றுக் கொள்ள வேண்டும் இது தொடர்பில் நான் பாராளுமன்றத்தில் ஒத்திவைப்பு பிரேரனை ஒன்றை முன்வைத்து பேச உள்ளேன். என்றார்.

Advertisement

Advertisement

Advertisement