காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான சர்வதேச தினமாக ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் 30ஆம் திகதி பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
உலகளவில் காணாமல் ஆக்கப்பட்டோர் மற்றும் அவர்கள் பற்றிய தகவல்களுக்காகக் காத்துக்கொண்டிருக்கும்
அவர்களது உறவினர்களின் துயரம் தொடர்பில் கவனத்தை ஈர்க்கும் வகையில் இந்தத் தினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையினால், 2011ஆம் ஆண்டு ஆகஸ்ட் 30ஆம் திகதி சர்வதேச காணாமல் போனோர் தினம் பிரகடனப்படுத்தப்பட்டது.
இலங்கையில் 1983 - 2009 வரை நடைபெற்ற உள்நாட்டு யுத்தத்தின் போது சுமார் 140,000க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர்.
இதனை ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழுவின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எவரும் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டதாகவோ அல்லது இறந்ததாகவோ இதுவரை உறுதி செய்யப்படவில்லை.
இவ்வாறான நிலையில் காணாமல் ஆக்கப்பட்ட தங்களது உறவினர்களை மீட்பதற்காக அவர்களின் உறவினர்கள் பல ஆண்டுகளாக போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான சர்வதேச தினம் இன்று அனுஷ்டிப்பு காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான சர்வதேச தினமாக ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் 30ஆம் திகதி பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. உலகளவில் காணாமல் ஆக்கப்பட்டோர் மற்றும் அவர்கள் பற்றிய தகவல்களுக்காகக் காத்துக்கொண்டிருக்கும் அவர்களது உறவினர்களின் துயரம் தொடர்பில் கவனத்தை ஈர்க்கும் வகையில் இந்தத் தினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையினால், 2011ஆம் ஆண்டு ஆகஸ்ட் 30ஆம் திகதி சர்வதேச காணாமல் போனோர் தினம் பிரகடனப்படுத்தப்பட்டது. இலங்கையில் 1983 - 2009 வரை நடைபெற்ற உள்நாட்டு யுத்தத்தின் போது சுமார் 140,000க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர்.இதனை ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழுவின் தகவல்கள் தெரிவிக்கின்றன. காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எவரும் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டதாகவோ அல்லது இறந்ததாகவோ இதுவரை உறுதி செய்யப்படவில்லை. இவ்வாறான நிலையில் காணாமல் ஆக்கப்பட்ட தங்களது உறவினர்களை மீட்பதற்காக அவர்களின் உறவினர்கள் பல ஆண்டுகளாக போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.