இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வவுனியா வடக்கு பிரதேசக்கிளை அலுவலகத்தில் நாட்டுப்பற்றாளர் தியாகதீபம் அன்னை பூபதி நினைவுதினம் இன்று (25) அனுஸ்டிக்கப்பட்டது.
வவுனியா வடக்கு பிரதேசசபை உறுப்பினர் தர்மலிங்கம் தனுசன் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நினைவுதின நிகழ்வில் கட்சியின் வவுனியா மாவட்டக்கிளை தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமாகிய மருத்துவர் ப.சத்தியலிங்கம், வவுனியா வடக்கு பிரதேசசபை உறுப்பினர்களான சுசீலன், சரோஜாதேவி மற்றும் கட்சியின் உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நினைவேந்தல் தீபம் ஏற்றப்பட்டதுடன் மலர் தூவி அஞ்சலியும் இதன் போது செலுத்தப்பட்டது
வவுனியா வடக்கில் தியாக தீபம் அன்னை பூபதி நினைவுதினம் அனுஸ்டிப்பு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வவுனியா வடக்கு பிரதேசக்கிளை அலுவலகத்தில் நாட்டுப்பற்றாளர் தியாகதீபம் அன்னை பூபதி நினைவுதினம் இன்று (25) அனுஸ்டிக்கப்பட்டது.வவுனியா வடக்கு பிரதேசசபை உறுப்பினர் தர்மலிங்கம் தனுசன் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நினைவுதின நிகழ்வில் கட்சியின் வவுனியா மாவட்டக்கிளை தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமாகிய மருத்துவர் ப.சத்தியலிங்கம், வவுனியா வடக்கு பிரதேசசபை உறுப்பினர்களான சுசீலன், சரோஜாதேவி மற்றும் கட்சியின் உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.நினைவேந்தல் தீபம் ஏற்றப்பட்டதுடன் மலர் தூவி அஞ்சலியும் இதன் போது செலுத்தப்பட்டது