இஸ்ரேல் - ஈரான் போர் 26-வது நாளை எட்டியுள்ள நிலையில், இஸ்ரேலின் மிக முக்கிய எரிசக்தி மையமான ஹதேரா (Hadera) மின் உற்பத்தி நிலையம் மீது ஈரான் நடத்தியுள்ள ஏவுகணைத் தாக்குதல் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.
சர்வதேச ஊடகங்கள் மற்றும் இஸ்ரேலின் Channel 12 வெளியிட்டுள்ள தகவலின்படி,
இன்று (மார்ச் 25) ஈரானில் இருந்து சுமார் 25 ஏவுகணைகள் இஸ்ரேலை நோக்கி ஏவப்பட்டுள்ளன.
ஹதேரா நகரில் உள்ள மின் உற்பத்தி நிலையத்தை ஒரு ஏவுகணை நேரடியாகத் தாக்கியுள்ளது.
இதனால் அந்த ஆலையில் பெரும் தீ விபத்து ஏற்பட்டு, வானை முட்டும் அளவிற்குப் புகை மூட்டம் எழுந்து வருகிறது.
இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து வடக்கு மற்றும் மத்திய இஸ்ரேலின் முக்கிய நகரங்களான டெல் அவிவ் (Tel Aviv), ஹதேரா (Hadera) மற்றும் சிசேரியா (Caesarea) ஆகிய பகுதிகளில் அபாய எச்சரிக்கை ஒலிகள் (Red Alert) எழுப்பப்பட்டுள்ளன.
மின் உற்பத்தி நிலையம் தாக்கப்பட்டதால், இஸ்ரேலின் மின் விநியோகக் கட்டமைப்பில் பாரிய பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.
இஸ்ரேல் மின் உற்பத்தி நிலையத்தை தாக்கிய ஈரானிய ஏவுகணை -முக்கிய நகரங்களுக்கு விடுக்கப்பட்டஅபாய எச்சரிக்கை இஸ்ரேல் - ஈரான் போர் 26-வது நாளை எட்டியுள்ள நிலையில், இஸ்ரேலின் மிக முக்கிய எரிசக்தி மையமான ஹதேரா (Hadera) மின் உற்பத்தி நிலையம் மீது ஈரான் நடத்தியுள்ள ஏவுகணைத் தாக்குதல் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.சர்வதேச ஊடகங்கள் மற்றும் இஸ்ரேலின் Channel 12 வெளியிட்டுள்ள தகவலின்படி, இன்று (மார்ச் 25) ஈரானில் இருந்து சுமார் 25 ஏவுகணைகள் இஸ்ரேலை நோக்கி ஏவப்பட்டுள்ளன.ஹதேரா நகரில் உள்ள மின் உற்பத்தி நிலையத்தை ஒரு ஏவுகணை நேரடியாகத் தாக்கியுள்ளது. இதனால் அந்த ஆலையில் பெரும் தீ விபத்து ஏற்பட்டு, வானை முட்டும் அளவிற்குப் புகை மூட்டம் எழுந்து வருகிறது.இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து வடக்கு மற்றும் மத்திய இஸ்ரேலின் முக்கிய நகரங்களான டெல் அவிவ் (Tel Aviv), ஹதேரா (Hadera) மற்றும் சிசேரியா (Caesarea) ஆகிய பகுதிகளில் அபாய எச்சரிக்கை ஒலிகள் (Red Alert) எழுப்பப்பட்டுள்ளன.மின் உற்பத்தி நிலையம் தாக்கப்பட்டதால், இஸ்ரேலின் மின் விநியோகக் கட்டமைப்பில் பாரிய பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.