• May 13 2025

நாடு முழுவதும் 8,742க்கும் மேற்பட்ட தன்சல்கள் பதிவு

Chithra / May 12th 2025, 9:26 am
image

 

வெசாக் தினத்துடன் இணைந்து, நாடு முழுவதும் 8,742க்கும் மேற்பட்ட தன்சல்கள் இதுவரை பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இவற்றில் பெரும்பாலானவை மேல் மாகாணத்தின் கொழும்பு மாநகர சபைக்கு உட்பட்ட பகுதிகளில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அச்சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்தார்.

தன்சல்களை வழங்கும்போது, பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்குமாறு உபுல் ரோஹண, தன்சல் ஏற்பாட்டாளர்களிடம் கோரிக்கை விடுத்தார்.

இந்நிலையில் விசாக பூரணை தினத்தை முன்னிட்டு இன்றைய தினம் 388 கைதிகளுக்கு விசேட பொது மன்னிப்பு வழங்கப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளரும் பேச்சாளருமான காமினி பீ திசாநாயக்க தெரிவித்துள்ளார்.  

இதேவேளை, விசாக பூரணை தினத்தை முன்னிட்டு இன்று மற்றும் நாளைய தினங்களில் கைதிகளை திறந்தவெளியில் பார்வையிட விசேட வாய்ப்பு வழங்கப்படவுள்ளது.

நாடு முழுவதும் 8,742க்கும் மேற்பட்ட தன்சல்கள் பதிவு  வெசாக் தினத்துடன் இணைந்து, நாடு முழுவதும் 8,742க்கும் மேற்பட்ட தன்சல்கள் இதுவரை பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.இவற்றில் பெரும்பாலானவை மேல் மாகாணத்தின் கொழும்பு மாநகர சபைக்கு உட்பட்ட பகுதிகளில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அச்சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்தார்.தன்சல்களை வழங்கும்போது, பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்குமாறு உபுல் ரோஹண, தன்சல் ஏற்பாட்டாளர்களிடம் கோரிக்கை விடுத்தார்.இந்நிலையில் விசாக பூரணை தினத்தை முன்னிட்டு இன்றைய தினம் 388 கைதிகளுக்கு விசேட பொது மன்னிப்பு வழங்கப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளரும் பேச்சாளருமான காமினி பீ திசாநாயக்க தெரிவித்துள்ளார்.  இதேவேளை, விசாக பூரணை தினத்தை முன்னிட்டு இன்று மற்றும் நாளைய தினங்களில் கைதிகளை திறந்தவெளியில் பார்வையிட விசேட வாய்ப்பு வழங்கப்படவுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement