• Sep 11 2025

ஐ.நா. மனித உரிமைகள் உயர் ஸ்தானிகரை சந்தித்த அமைச்சர் விஜித ஹேரத்!

Chithra / Sep 11th 2025, 8:41 am
image

அமைச்சர் விஜித ஹேரத் ஜெனீவாவில் மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் வோல்கர் டேர்க்கை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். 

மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது அமர்வில் பங்கேற்க ஜெனீவா சென்றுள்ள அமைச்சர் விஜித ஹேரத்துக்கும், ஐ.நா. மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் வோல்கர் டேர்க்கிற்கும் இடையே நேற்று இந்த சந்திப்பு நடைபெற்றது.

இந்தச் சந்திப்பின் போது, உயர் ஸ்தானிகர் வோல்கர் டேர்க் இலங்கையின் மனித உரிமைகள் நிலைமை குறித்து சமர்ப்பித்த அறிக்கை தொடர்பாக விரிவாக விவாதிக்கப்பட்டது.

அமைச்சர் விஜித ஹேரத், அந்த அறிக்கை தொடர்பான இலங்கையின் நிலைப்பாட்டை விரிவாக எடுத்துரைத்தார்.

கடந்த ஜூன் மாதம் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட உயர் ஸ்தானிகர், புதிய அரசாங்கத்தின் கீழ் மனித உரிமைகளைப் பாதுகாப்பதில் ஒரு புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளதாக நம்பிக்கை தெரிவித்தார்.

கடந்த கால மனித உரிமை மீறல்கள் குறித்து சுயாதீன விசாரணைகளை நடத்தி, பொறுப்புக்கூறல் பொறிமுறையை முறையாக நிறுவுவதற்கான இந்த வாய்ப்பை தவறவிடக்கூடாது என்று வோல்கர் டேர்க் வலியுறுத்தினார்.

ஐ.நா. மனித உரிமைகள் உயர் ஸ்தானிகரை சந்தித்த அமைச்சர் விஜித ஹேரத் அமைச்சர் விஜித ஹேரத் ஜெனீவாவில் மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் வோல்கர் டேர்க்கை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது அமர்வில் பங்கேற்க ஜெனீவா சென்றுள்ள அமைச்சர் விஜித ஹேரத்துக்கும், ஐ.நா. மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் வோல்கர் டேர்க்கிற்கும் இடையே நேற்று இந்த சந்திப்பு நடைபெற்றது.இந்தச் சந்திப்பின் போது, உயர் ஸ்தானிகர் வோல்கர் டேர்க் இலங்கையின் மனித உரிமைகள் நிலைமை குறித்து சமர்ப்பித்த அறிக்கை தொடர்பாக விரிவாக விவாதிக்கப்பட்டது.அமைச்சர் விஜித ஹேரத், அந்த அறிக்கை தொடர்பான இலங்கையின் நிலைப்பாட்டை விரிவாக எடுத்துரைத்தார்.கடந்த ஜூன் மாதம் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட உயர் ஸ்தானிகர், புதிய அரசாங்கத்தின் கீழ் மனித உரிமைகளைப் பாதுகாப்பதில் ஒரு புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளதாக நம்பிக்கை தெரிவித்தார்.கடந்த கால மனித உரிமை மீறல்கள் குறித்து சுயாதீன விசாரணைகளை நடத்தி, பொறுப்புக்கூறல் பொறிமுறையை முறையாக நிறுவுவதற்கான இந்த வாய்ப்பை தவறவிடக்கூடாது என்று வோல்கர் டேர்க் வலியுறுத்தினார்.

Advertisement

Advertisement

Advertisement