• Jul 10 2025

மண்முனை தென்மேற்கு பிரதேச சபை ஆட்சி சுயேச்சைக் குழு - பிள்ளையான் அணி வசம்!

Chithra / Jun 13th 2025, 8:38 pm
image


மண்முனை தென்மேற்கு பிரதேச சபையில் பந்து சின்ன சுயேச்சைக் குழுவும் கிழக்குத் தமிழர் கூட்டமைப்பும் இணைந்து ஆட்சியைக் கைப்பற்றியுள்ளன.

மண்முனை தென்மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் தெரிவுக் கூட்டம் இன்று கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மி தலைமையில் நடைபெற்றது .

அங்கு தவிசாளர் தெரிவில் இருவர் போட்டியிட்டார்கள். சுயேச்சை பந்து அணியில் இளையதம்பி திரேசகுமாரன், இலங்கைத் தமிழரசுக் கட்சி சார்பில் கோபாலபிள்ளை சுரேந்திரன் ஆகியோர் போட்டியிட்டார்கள் .

அதன்போது 9 வாக்குகளைப் பெற்ற சுயேச்சை அணி சார்பில் போட்டியிட்ட திரேசகுமாரன் தவிசாளராகத் தெரிவானார். மற்றவருக்கு ஆறு வாக்குகள் கிடைக்கப் பெற்றன.

உப தவிசாளராகக் கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு படகு கட்சியின் உறுப்பினர் கனகநாயகம் கபில்ராஜ் ஏகமனதாகத் தெரிவானார்.

மொத்தத்தில் அங்கு சுயேச்சை அணியும் கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு படகு அணியும் சேர்ந்து ஆட்சி அமைத்தமை குறிப்பிடத்தக்கது.

தேசிய மக்கள் சக்தி நடுநிலையாக இருந்தது.

கடந்த தடவை ஆட்சியில் இருந்த இலங்கைத் தமிழரசுக் கட்சி இம்முறை தோல்வியைத் தழுவியது.


மண்முனை தென்மேற்கு பிரதேச சபை ஆட்சி சுயேச்சைக் குழு - பிள்ளையான் அணி வசம் மண்முனை தென்மேற்கு பிரதேச சபையில் பந்து சின்ன சுயேச்சைக் குழுவும் கிழக்குத் தமிழர் கூட்டமைப்பும் இணைந்து ஆட்சியைக் கைப்பற்றியுள்ளன.மண்முனை தென்மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் தெரிவுக் கூட்டம் இன்று கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மி தலைமையில் நடைபெற்றது .அங்கு தவிசாளர் தெரிவில் இருவர் போட்டியிட்டார்கள். சுயேச்சை பந்து அணியில் இளையதம்பி திரேசகுமாரன், இலங்கைத் தமிழரசுக் கட்சி சார்பில் கோபாலபிள்ளை சுரேந்திரன் ஆகியோர் போட்டியிட்டார்கள் .அதன்போது 9 வாக்குகளைப் பெற்ற சுயேச்சை அணி சார்பில் போட்டியிட்ட திரேசகுமாரன் தவிசாளராகத் தெரிவானார். மற்றவருக்கு ஆறு வாக்குகள் கிடைக்கப் பெற்றன.உப தவிசாளராகக் கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு படகு கட்சியின் உறுப்பினர் கனகநாயகம் கபில்ராஜ் ஏகமனதாகத் தெரிவானார்.மொத்தத்தில் அங்கு சுயேச்சை அணியும் கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு படகு அணியும் சேர்ந்து ஆட்சி அமைத்தமை குறிப்பிடத்தக்கது.தேசிய மக்கள் சக்தி நடுநிலையாக இருந்தது.கடந்த தடவை ஆட்சியில் இருந்த இலங்கைத் தமிழரசுக் கட்சி இம்முறை தோல்வியைத் தழுவியது.

Advertisement

Advertisement

Advertisement

Buy Now