பாடுமீன் லயன்ஸ் ஹரிமா கழகத்தின் 19வது தலைவராக பிரபல தொழிலதிபரும் சமூக செயற்பாட்டாளருமாகிய லயன் எஸ்.மனோகரன் பதவியேற்பு நிகழ்வு இன்று மட்டக்களப்பில் வெகு சிறப்பாக இடம் பெற்றது.
பாடுமீன் லயன்ஸ் கழகத்தின் முன்னால் தலைவர் லயன் ரீ.சுபாஸ்கரன் தலைமையில் இடம்பெற்ற 19 வது தலைவர் அறிமுக நிகழ்விற்கு மாவட்ட ஆளுனர் லயன் கே.லோகேந்திரன் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்திருந்தார்.
இந்நிகழ்விற்கு விசேட அதிதிகளாக முதலாம் ஆளுனர் லயன்ஸ் சாஹீர் அகமட் (JP), உப ஆளுனர் அரிமா ரீ.ஆதித்தியன் (JP), லியோ கழகத்தின் பிரதிநிதிகள் ஏனைய கழகங்களின் பிரதிநிதிகள், பாடசாலை லியோ கழகத்தின் உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்திருந்தனர்.
இதன் போது புதிய தலைவர் உள்ளிட்ட புதிய நிர்வாக உறுப்பினர்கள் வரவேற்கப்பட்டு, சத்தியப் பிரமானம் நிகழ்த்தப்பட்டு, பிரதம அதிதிகளின் உரை, புதிய தலைவரின் கன்னி உரை என்பன இடம்பெற்று, அதனைத் தொடர்ந்து கடந்த காலங்களில் திறம்பட செயற்பட்ட உறுப்பினர்கள் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன், ஊடகவியலாளர்களுக்கான கௌரம் வழங்கப்பட்டு, வாழ்த்துரைகளுடன் நிகழ்வுகள் யாவும் இனிதே நிறைவுற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பாடுமீன் லயன்ஸ் ஹரிமா கழகத்தின் 19 வது தலைவராக லயன் எஸ்.மனோகரன் பதவியேற்பு பாடுமீன் லயன்ஸ் ஹரிமா கழகத்தின் 19வது தலைவராக பிரபல தொழிலதிபரும் சமூக செயற்பாட்டாளருமாகிய லயன் எஸ்.மனோகரன் பதவியேற்பு நிகழ்வு இன்று மட்டக்களப்பில் வெகு சிறப்பாக இடம் பெற்றது.பாடுமீன் லயன்ஸ் கழகத்தின் முன்னால் தலைவர் லயன் ரீ.சுபாஸ்கரன் தலைமையில் இடம்பெற்ற 19 வது தலைவர் அறிமுக நிகழ்விற்கு மாவட்ட ஆளுனர் லயன் கே.லோகேந்திரன் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்திருந்தார். இந்நிகழ்விற்கு விசேட அதிதிகளாக முதலாம் ஆளுனர் லயன்ஸ் சாஹீர் அகமட் (JP), உப ஆளுனர் அரிமா ரீ.ஆதித்தியன் (JP), லியோ கழகத்தின் பிரதிநிதிகள் ஏனைய கழகங்களின் பிரதிநிதிகள், பாடசாலை லியோ கழகத்தின் உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்திருந்தனர்.இதன் போது புதிய தலைவர் உள்ளிட்ட புதிய நிர்வாக உறுப்பினர்கள் வரவேற்கப்பட்டு, சத்தியப் பிரமானம் நிகழ்த்தப்பட்டு, பிரதம அதிதிகளின் உரை, புதிய தலைவரின் கன்னி உரை என்பன இடம்பெற்று, அதனைத் தொடர்ந்து கடந்த காலங்களில் திறம்பட செயற்பட்ட உறுப்பினர்கள் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன், ஊடகவியலாளர்களுக்கான கௌரம் வழங்கப்பட்டு, வாழ்த்துரைகளுடன் நிகழ்வுகள் யாவும் இனிதே நிறைவுற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.