வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்கிரமசேகர படுகொலை தொடர்பான சந்தேக நபரான துப்பாக்கிதாரி குறித்த அதிர்ச்சி தரும் தகவல்கள் பொலிஸ் வட்டாரங்கள் ஊடாக வெளியாகியுள்ளன.
வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்கிரமசேகர கடந்த புதன்கிழமை, பிரதேச சபையின் பொது மக்கள் தினத்தில் தனது அலுவலகத்தில் இருந்தபோதே சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்நிலையில் வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்கிரமசேகர சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம், சுமார் 15 லட்சம் ரூபா ஒப்பந்தத்தின் பேரில் நடத்தப்பட்டது என விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கிதாரி கைது செய்யப்பட்டபோது, இந்தக் கொலை 'டுபாய் லொக்காவின்' ஒப்பந்தத்தின் பேரில் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
துப்பாக்கிதாரி இந்தச் சம்பவத்திற்குப் பிறகு கெக்கிராவவிற்குச் சென்று, அங்கு வடை வியாபாரி ஒருவரிடம் இரண்டு சந்தர்ப்பங்களில் 50,000 ரூபா பணம் கொடுத்துப் போதைப்பொருட்களைப் பெற்றுக்கொள்ள முயன்றுள்ளதாக ஒப்புக்கொண்டுள்ளார்.
முதலில், துப்பாக்கிதாரி போதைப்பொருள் வாங்குவதற்காக வடை வியாபாரிக்கு 25,000 ரூபா கொடுத்துள்ளார். பின்னர், இரண்டாவது தடவையாக மேலும் 25,000 ரூபா கொடுத்துப் போதைப்பொருளைக் கொண்டு வரச் சொல்லி அனுப்பியுள்ளார்.
இந்த இரண்டாவது தவணைக் காசுடன் வடை வியாபாரி தலைமறைவாகிவிட்டார் என்று தெரிய வந்துள்ளது.
பணம் போனது தெரியாமல், துப்பாக்கிதாரி வடை வியாபாரி திரும்பி வருவதற்காக நீண்ட நேரம் காத்திருந்துள்ளார்.
துப்பாக்கிதாரியும் மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்றவரும் போதைப்பொருள் பாவனைக்கு மிக மோசமாக அடிமையானவர்கள் என தெரியவந்துள்ளது.
கொலைக்குப் பிறகு, துப்பாக்கிதாரி, அவரது மனைவி மற்றும் மோட்டார் சைக்கிள் சாரதி என மூவரும் ஒரே மோட்டார் சைக்கிளில் தனமல்வில, வெல்லவாய, மஹியங்கனை, ரிதிமாலியத்த மற்றும் பக்கமூன போன்ற பகுதிகளைக் கடந்து சென்றுள்ளனர்.
இந்தக் கொலையை டுபாயில் இருந்து இயக்கியவர், அடுத்து அனுராதபுரம் செல்லுமாறு துப்பாக்கிதாரிக்கு அறிவுறுத்தியுள்ளார்.
கதிர்காமம் வழியாக புத்தளை நோக்கிச் சென்றபோது, அவர்கள் வன யானையின் தாக்குதலுக்கு உள்ளாகும் அபாயத்தில் இருந்துள்ளனர்.
டுபாய் உத்தரவின் பேரில், மோட்டார் சைக்கிள் சாரதி வழியில் தனது வாகனத்தைக் கைவிட்டுச் சென்றுள்ளார்.
ஓய்வெடுத்துக் கொண்டே பயணித்த இவர்கள், கடந்த 25ஆம் திகதி அதிகாலை கெக்கிராவவிற்குச் சென்றுள்ளனர்.
கெக்கிராவவிற்குச் சென்றபோது, துப்பாக்கிச் சூடு நடத்தியவருக்கும் மோட்டார் சைக்கிள் ஓட்டுநருக்கும் போதைப்பொருள் பாவிக்க வேண்டிய தேவை தீவிரமடைந்துள்ளது.
துப்பாக்கிதாரி முன்பு கெக்கிராவவில் வேலை பார்த்தபோது இந்த வடை வியாபாரியுடன் நட்பு கொண்டவர். அவரிடம் தொலைபேசி இலக்கம் இருந்ததால், அவரை மதுபானக் கடைக்கு அருகில் சந்தித்துள்ளனர்.
வடை வியாபாரி, துப்பாக்கிதாரிக்கும் அவரது மனைவிக்கும் மோட்டார் சைக்கிள் ஓட்டுநருக்கும் ஓய்வெடுக்க ஒரு இடத்தையும் வழங்கியுள்ளார்.
வடை வியாபாரி தலைமறைவாகியதால், குற்றப் புலனாய்வுத் துறையினர் தொலைபேசி வலைப்பின்னல் பகுப்பாய்வு மூலம் இவர்களின் நடமாட்டத்தைக் கண்காணித்து வந்தனர்.
அவர்கள் கெக்கிராவவில் நீண்ட நேரம் தங்கியிருப்பது அவதானிக்கப்பட்டதால், அவர்களைக் கைது செய்யும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது.
கடந்த 25ஆம் திகதி இரவு இராணுவம், காவல்துறை விசேட அதிரடிப்படை மற்றும் கெக்கிராவை காவல்துறை இணைந்து அப்பகுதியை முற்றுகையிட்டபோது, துப்பாக்கிதாரி, காவல்துறை அதிகாரிகளைத் தாக்கிவிட்டுத் தப்பிச் சென்றுள்ளார்.
தப்பிச் சென்றவர், கடந்த 26ஆம் திகதி அதிகாலை கெக்கிராவவிலிருந்து பேருந்தில் கொழும்பிலுள்ள புறக்கோட்டைக்கு வந்துள்ளார்.
பொரளையில் போதைப்பொருள் பயன்படுத்திய பின், டுபாய் உத்தரவின் பேரிலேயே தனது முடி மற்றும் தாடியைக் கத்தரித்துள்ளார்.
ஏனெனில், காவல்துறை ஊடகங்கள் மூலம் அவரது படங்களை வெளியிட்டிருப்பதை டுபாய் குழுவினர் அவருக்குத் தெரிவித்திருந்தனர்.
இதன்மூலம், தனது உருவத்தை மாற்றியமைத்து காவல்துறை படங்களிலிருந்து வேறுபடுத்திக் காட்ட முயன்றுள்ளார்.
எனினும், குற்றப் புலனாய்வுத் துறையினர் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அவரது தோற்ற மாற்றங்களை முன்கூட்டியே தயாரித்து அந்தப் படங்களை உளவுத்துறை மற்றும் விசேட அதிரடிப்படையினருக்கு அனுப்பியிருந்தனர்.
இதனால், மகரகமவில் வைத்து அரச புலனாய்வு சேவை அதிகாரியினால் அவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இந்நிலையில் வெலிகம பிரதேச சபை தலைவர் லசந்த விக்கிரமசேகரவை சுட்டுக்கொலை செய்த சம்பவம் தொடர்பில், துப்பாக்கிதாரி உட்பட இதுவரை 9 சந்தேக நபர்கள் பொலிஸ் காவலில் உள்ளனர்.
வெலிகம பிரதேச சபை தலைவர் லசந்த விக்கிரமசேகர தனது அலுவலகத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில், துப்பாக்கிதாரி, மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்றவர் உட்பட 9 சந்தேக நபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இவர்களில் துப்பாக்கிதாரி, மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்றவர், துப்பாக்கிதாரியின் மனைவி, கெக்கிராவையில் மறைந்திருக்க உதவியவர், பொரளை சஹஸ்புர பகுதியில் துப்பாக்கிதாரிக்கு உதவிய இரண்டு நபர்கள் உட்பட 6 பேர் தற்போது பொலிஸ் நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இது தவிர, கொலைக்கு முன்னரும் பின்னரும் துப்பாக்கிதாரிக்கு போக்குவரத்து வசதிகளை வழங்கிய காலி அகுலுகஹவைச் சேர்ந்த முச்சக்கரவண்டி சாரதி ஒருவரும், கொலைக்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளை செலுத்துவதற்கு ஏற்ற வகையில் திருத்தி கொடுத்த வலானையில் உள்ள ஒரு வாகன திருத்தும் இடத்தின் உரிமையாளரும், அந்த மோட்டார் சைக்கிளை கொலையாளியிடம் ஒப்படைத்த இளைஞனும் வெலிகம மற்றும் மாத்தறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சந்தேக நபர்களில், நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவின் காவலில் உள்ள துப்பாக்கிதாரி உட்பட சிலர் நேற்று மாலை கொழும்பு நீதிமன்ற சட்ட வைத்திய அதிகாரியிடம் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
அதன் பின்னர், நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவின் காவலில் உள்ள துப்பாக்கிதாரி, மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்றவர் உட்பட 6 சந்தேக நபர்களை 72 மணி நேரம் தடுத்து வைத்து விசாரிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன், துப்பாக்கிதாரிக்கு போக்குவரத்து வசதிகள் மற்றும் உதவி ஒத்தாசைகளை வழங்கியமைக்காக மாத்தறை மற்றும் காலியில் கைது செய்யப்பட்ட 3 சந்தேக நபர்களும் நேற்று மாத்தறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
அப்போது, அந்த 3 சந்தேக நபர்களிடமும் மேலதிக விசாரணைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளதால் அதற்கு அனுமதி வழங்குமாறு வெலிகம பொலிஸ் தலைமையகம் நீதிமன்றத்திடம் கோரியது.
அந்த கோரிக்கையை பரிசீலித்த மாத்தறை பிரதான நீதவான் சதுர திஸாநாயக்க, அந்த மூன்று சந்தேக நபர்களையும் 48 மணி நேரம் தடுத்து வைத்து விசாரிக்க பொலிஸாருக்கு அனுமதி வழங்கியுள்ளார்.
லசந்த விக்கிரமசேகர படுகொலை; துப்பாக்கிதாரியின் அதிர்ச்சி பின்னணி வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்கிரமசேகர படுகொலை தொடர்பான சந்தேக நபரான துப்பாக்கிதாரி குறித்த அதிர்ச்சி தரும் தகவல்கள் பொலிஸ் வட்டாரங்கள் ஊடாக வெளியாகியுள்ளன. வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்கிரமசேகர கடந்த புதன்கிழமை, பிரதேச சபையின் பொது மக்கள் தினத்தில் தனது அலுவலகத்தில் இருந்தபோதே சுட்டுக் கொல்லப்பட்டார். இந்நிலையில் வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்கிரமசேகர சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம், சுமார் 15 லட்சம் ரூபா ஒப்பந்தத்தின் பேரில் நடத்தப்பட்டது என விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். துப்பாக்கிதாரி கைது செய்யப்பட்டபோது, இந்தக் கொலை 'டுபாய் லொக்காவின்' ஒப்பந்தத்தின் பேரில் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவித்துள்ளார். துப்பாக்கிதாரி இந்தச் சம்பவத்திற்குப் பிறகு கெக்கிராவவிற்குச் சென்று, அங்கு வடை வியாபாரி ஒருவரிடம் இரண்டு சந்தர்ப்பங்களில் 50,000 ரூபா பணம் கொடுத்துப் போதைப்பொருட்களைப் பெற்றுக்கொள்ள முயன்றுள்ளதாக ஒப்புக்கொண்டுள்ளார். முதலில், துப்பாக்கிதாரி போதைப்பொருள் வாங்குவதற்காக வடை வியாபாரிக்கு 25,000 ரூபா கொடுத்துள்ளார். பின்னர், இரண்டாவது தடவையாக மேலும் 25,000 ரூபா கொடுத்துப் போதைப்பொருளைக் கொண்டு வரச் சொல்லி அனுப்பியுள்ளார். இந்த இரண்டாவது தவணைக் காசுடன் வடை வியாபாரி தலைமறைவாகிவிட்டார் என்று தெரிய வந்துள்ளது. பணம் போனது தெரியாமல், துப்பாக்கிதாரி வடை வியாபாரி திரும்பி வருவதற்காக நீண்ட நேரம் காத்திருந்துள்ளார். துப்பாக்கிதாரியும் மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்றவரும் போதைப்பொருள் பாவனைக்கு மிக மோசமாக அடிமையானவர்கள் என தெரியவந்துள்ளது. கொலைக்குப் பிறகு, துப்பாக்கிதாரி, அவரது மனைவி மற்றும் மோட்டார் சைக்கிள் சாரதி என மூவரும் ஒரே மோட்டார் சைக்கிளில் தனமல்வில, வெல்லவாய, மஹியங்கனை, ரிதிமாலியத்த மற்றும் பக்கமூன போன்ற பகுதிகளைக் கடந்து சென்றுள்ளனர். இந்தக் கொலையை டுபாயில் இருந்து இயக்கியவர், அடுத்து அனுராதபுரம் செல்லுமாறு துப்பாக்கிதாரிக்கு அறிவுறுத்தியுள்ளார். கதிர்காமம் வழியாக புத்தளை நோக்கிச் சென்றபோது, அவர்கள் வன யானையின் தாக்குதலுக்கு உள்ளாகும் அபாயத்தில் இருந்துள்ளனர். டுபாய் உத்தரவின் பேரில், மோட்டார் சைக்கிள் சாரதி வழியில் தனது வாகனத்தைக் கைவிட்டுச் சென்றுள்ளார். ஓய்வெடுத்துக் கொண்டே பயணித்த இவர்கள், கடந்த 25ஆம் திகதி அதிகாலை கெக்கிராவவிற்குச் சென்றுள்ளனர். கெக்கிராவவிற்குச் சென்றபோது, துப்பாக்கிச் சூடு நடத்தியவருக்கும் மோட்டார் சைக்கிள் ஓட்டுநருக்கும் போதைப்பொருள் பாவிக்க வேண்டிய தேவை தீவிரமடைந்துள்ளது. துப்பாக்கிதாரி முன்பு கெக்கிராவவில் வேலை பார்த்தபோது இந்த வடை வியாபாரியுடன் நட்பு கொண்டவர். அவரிடம் தொலைபேசி இலக்கம் இருந்ததால், அவரை மதுபானக் கடைக்கு அருகில் சந்தித்துள்ளனர். வடை வியாபாரி, துப்பாக்கிதாரிக்கும் அவரது மனைவிக்கும் மோட்டார் சைக்கிள் ஓட்டுநருக்கும் ஓய்வெடுக்க ஒரு இடத்தையும் வழங்கியுள்ளார். வடை வியாபாரி தலைமறைவாகியதால், குற்றப் புலனாய்வுத் துறையினர் தொலைபேசி வலைப்பின்னல் பகுப்பாய்வு மூலம் இவர்களின் நடமாட்டத்தைக் கண்காணித்து வந்தனர். அவர்கள் கெக்கிராவவில் நீண்ட நேரம் தங்கியிருப்பது அவதானிக்கப்பட்டதால், அவர்களைக் கைது செய்யும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது. கடந்த 25ஆம் திகதி இரவு இராணுவம், காவல்துறை விசேட அதிரடிப்படை மற்றும் கெக்கிராவை காவல்துறை இணைந்து அப்பகுதியை முற்றுகையிட்டபோது, துப்பாக்கிதாரி, காவல்துறை அதிகாரிகளைத் தாக்கிவிட்டுத் தப்பிச் சென்றுள்ளார். தப்பிச் சென்றவர், கடந்த 26ஆம் திகதி அதிகாலை கெக்கிராவவிலிருந்து பேருந்தில் கொழும்பிலுள்ள புறக்கோட்டைக்கு வந்துள்ளார். டுபாயில் இருந்த கட்டுப்பாட்டாளரின் அறிவுறுத்தலின்படி, போதைப்பொருள் வாங்கவும் பாவிக்கவும் பொரளை வனாத்தமுல்ல சஹஸ்புர வீட்டுத் தொகுதிக்கு சென்றுள்ளார். பொரளையில் போதைப்பொருள் பயன்படுத்திய பின், டுபாய் உத்தரவின் பேரிலேயே தனது முடி மற்றும் தாடியைக் கத்தரித்துள்ளார். ஏனெனில், காவல்துறை ஊடகங்கள் மூலம் அவரது படங்களை வெளியிட்டிருப்பதை டுபாய் குழுவினர் அவருக்குத் தெரிவித்திருந்தனர். இதன்மூலம், தனது உருவத்தை மாற்றியமைத்து காவல்துறை படங்களிலிருந்து வேறுபடுத்திக் காட்ட முயன்றுள்ளார். எனினும், குற்றப் புலனாய்வுத் துறையினர் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அவரது தோற்ற மாற்றங்களை முன்கூட்டியே தயாரித்து அந்தப் படங்களை உளவுத்துறை மற்றும் விசேட அதிரடிப்படையினருக்கு அனுப்பியிருந்தனர். இதனால், மகரகமவில் வைத்து அரச புலனாய்வு சேவை அதிகாரியினால் அவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். இந்நிலையில் வெலிகம பிரதேச சபை தலைவர் லசந்த விக்கிரமசேகரவை சுட்டுக்கொலை செய்த சம்பவம் தொடர்பில், துப்பாக்கிதாரி உட்பட இதுவரை 9 சந்தேக நபர்கள் பொலிஸ் காவலில் உள்ளனர். வெலிகம பிரதேச சபை தலைவர் லசந்த விக்கிரமசேகர தனது அலுவலகத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில், துப்பாக்கிதாரி, மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்றவர் உட்பட 9 சந்தேக நபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தனர். இவர்களில் துப்பாக்கிதாரி, மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்றவர், துப்பாக்கிதாரியின் மனைவி, கெக்கிராவையில் மறைந்திருக்க உதவியவர், பொரளை சஹஸ்புர பகுதியில் துப்பாக்கிதாரிக்கு உதவிய இரண்டு நபர்கள் உட்பட 6 பேர் தற்போது பொலிஸ் நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இது தவிர, கொலைக்கு முன்னரும் பின்னரும் துப்பாக்கிதாரிக்கு போக்குவரத்து வசதிகளை வழங்கிய காலி அகுலுகஹவைச் சேர்ந்த முச்சக்கரவண்டி சாரதி ஒருவரும், கொலைக்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளை செலுத்துவதற்கு ஏற்ற வகையில் திருத்தி கொடுத்த வலானையில் உள்ள ஒரு வாகன திருத்தும் இடத்தின் உரிமையாளரும், அந்த மோட்டார் சைக்கிளை கொலையாளியிடம் ஒப்படைத்த இளைஞனும் வெலிகம மற்றும் மாத்தறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சந்தேக நபர்களில், நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவின் காவலில் உள்ள துப்பாக்கிதாரி உட்பட சிலர் நேற்று மாலை கொழும்பு நீதிமன்ற சட்ட வைத்திய அதிகாரியிடம் முன்னிலைப்படுத்தப்பட்டனர். அதன் பின்னர், நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவின் காவலில் உள்ள துப்பாக்கிதாரி, மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்றவர் உட்பட 6 சந்தேக நபர்களை 72 மணி நேரம் தடுத்து வைத்து விசாரிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அத்துடன், துப்பாக்கிதாரிக்கு போக்குவரத்து வசதிகள் மற்றும் உதவி ஒத்தாசைகளை வழங்கியமைக்காக மாத்தறை மற்றும் காலியில் கைது செய்யப்பட்ட 3 சந்தேக நபர்களும் நேற்று மாத்தறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். அப்போது, அந்த 3 சந்தேக நபர்களிடமும் மேலதிக விசாரணைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளதால் அதற்கு அனுமதி வழங்குமாறு வெலிகம பொலிஸ் தலைமையகம் நீதிமன்றத்திடம் கோரியது. அந்த கோரிக்கையை பரிசீலித்த மாத்தறை பிரதான நீதவான் சதுர திஸாநாயக்க, அந்த மூன்று சந்தேக நபர்களையும் 48 மணி நேரம் தடுத்து வைத்து விசாரிக்க பொலிஸாருக்கு அனுமதி வழங்கியுள்ளார்.