சுண்டிக்குளத்தில் தொடரும் நில அளவீடு - நிறுத்தாவிட்டால் போராட்டம் வெடிக்கும்! - வடமாகாண காணிக்கான மக்கள் உரிமை இயக்கத்தின் தலைவர் இ.முரளிதரன் தெரிவிப்பு!
வடமராட்சி கிழக்கு - சுண்டிக்குளம் பகுதியில் கடற்படையினரால் இன்றும் நில அளவீடு மேற்கொள்ளப்படுகின்றது. இது உடனடியாக நிறுத்தப்படாவிட்டால் அதற்கு எதிராக போராட்டம் வெடிக்கும் என்று வடமாகாண காணிக்கான மக்கள் உரிமை இயக்கத்தின் தலைவர் இ.முரளிதரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு சுண்டிக்குளம் பகுதியான J/435 கிராம சேவகர் பிரிவில் அமைந்திருக்கின்ற மக்களின் மீன்பிடி நிலங்கள், மக்களுக்குரிய காணிகள் திருகோணமலையில் இருந்து வந்த கடற்படையின் ஒரு குழுவால் மிக இரகசியமாக அளவீடு செய்யப்பட்டுள்ளது.
கொழும்பிலிருந்து காணொளி ஒன்றை வெளியிட்டு இதனைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்த ஜீலை மாத ஆரம்பத்திலிருந்து சுண்டிக்குளம் பகுதிகள் அவசர அவசரமாக கடற்படையினரால் கலவரப்பாடுகளும் ஏனைய காணிகளும் நிலஅளவீடு செய்யப்பட்டு வருகின்றது. அந்த வகையில் இந்த நடவடிக்கை கடந்த 5ஆம் திகதி முடிவடைந்து விட்டது என நாங்கள் நினைத்தோம். ஆனால் இன்று (7) காலை 8 மணிக்கும் நிலஅளவீடு மேற்கொள்ளப்படுகின்றது.
தயவுசெய்து வடமராட்சி கிழக்கின் வளத்தையும் நிலத்தையும் காப்பாற்றுவதற்காக வடமராட்சி கிழக்கில் பிரதேசசபைக்குத் தெரிவு செய்யப்பட்ட பிரதேசசபை உறுப்பினர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் ஏனைய சமூக செயற்பாட்டாளர்களும் உடனடியாக சுண்டிக்குளம் பகுதிக்கு விரைந்து அந்தக் காணிகளைக் காப்பாற்றுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.
இந்த சமயம் நான் அங்கு இல்லாமல் கொழும்பில் நிற்கின்றேன். இங்கிருந்து வடமராட்சி கிழக்கு மக்கள் சார்பாக இந்தத் தகவலை நான் அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கின்றேன். உடனடியாக சுண்டிக்குளம் பகுதிக்கு விரைந்து அந்தக் காணிகளைக் காப்பாற்றுமாறு கேட்டுக்கொள்கின்றேன். அதனை மீறியும் கடற்படையினர் அந்த நடவடிக்கையை மேற்கொள்வார்களாயின் ஜனநாயக உரிமைக்கான எதிர்ப்புப் போராட்டங்களையும் காணி உரிமைக்கான மக்கள் அமைப்பின் தலைவர் என்ற வகையில் வடமாகாண காணி உரிமைக்கான மக்கள் அமைப்பு அதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.எனவே உடனடியாக சம்பந்தப்பட்டவர்கள் அந்தப் பகுதிகளுக்கு விரைந்து காணி உரிமைகளை மீட்பதற்கான ஆவன செய்யுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.- என்றார்.
சுண்டிக்குளத்தில் தொடரும் நில அளவீடு - நிறுத்தாவிட்டால் போராட்டம் வெடிக்கும் - வடமாகாண காணிக்கான மக்கள் உரிமை இயக்கத்தின் தலைவர் இ.முரளிதரன் தெரிவிப்பு வடமராட்சி கிழக்கு - சுண்டிக்குளம் பகுதியில் கடற்படையினரால் இன்றும் நில அளவீடு மேற்கொள்ளப்படுகின்றது. இது உடனடியாக நிறுத்தப்படாவிட்டால் அதற்கு எதிராக போராட்டம் வெடிக்கும் என்று வடமாகாண காணிக்கான மக்கள் உரிமை இயக்கத்தின் தலைவர் இ.முரளிதரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு சுண்டிக்குளம் பகுதியான J/435 கிராம சேவகர் பிரிவில் அமைந்திருக்கின்ற மக்களின் மீன்பிடி நிலங்கள், மக்களுக்குரிய காணிகள் திருகோணமலையில் இருந்து வந்த கடற்படையின் ஒரு குழுவால் மிக இரகசியமாக அளவீடு செய்யப்பட்டுள்ளது.கொழும்பிலிருந்து காணொளி ஒன்றை வெளியிட்டு இதனைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த ஜீலை மாத ஆரம்பத்திலிருந்து சுண்டிக்குளம் பகுதிகள் அவசர அவசரமாக கடற்படையினரால் கலவரப்பாடுகளும் ஏனைய காணிகளும் நிலஅளவீடு செய்யப்பட்டு வருகின்றது. அந்த வகையில் இந்த நடவடிக்கை கடந்த 5ஆம் திகதி முடிவடைந்து விட்டது என நாங்கள் நினைத்தோம். ஆனால் இன்று (7) காலை 8 மணிக்கும் நிலஅளவீடு மேற்கொள்ளப்படுகின்றது.தயவுசெய்து வடமராட்சி கிழக்கின் வளத்தையும் நிலத்தையும் காப்பாற்றுவதற்காக வடமராட்சி கிழக்கில் பிரதேசசபைக்குத் தெரிவு செய்யப்பட்ட பிரதேசசபை உறுப்பினர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் ஏனைய சமூக செயற்பாட்டாளர்களும் உடனடியாக சுண்டிக்குளம் பகுதிக்கு விரைந்து அந்தக் காணிகளைக் காப்பாற்றுமாறு கேட்டுக்கொள்கின்றேன். இந்த சமயம் நான் அங்கு இல்லாமல் கொழும்பில் நிற்கின்றேன். இங்கிருந்து வடமராட்சி கிழக்கு மக்கள் சார்பாக இந்தத் தகவலை நான் அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கின்றேன். உடனடியாக சுண்டிக்குளம் பகுதிக்கு விரைந்து அந்தக் காணிகளைக் காப்பாற்றுமாறு கேட்டுக்கொள்கின்றேன். அதனை மீறியும் கடற்படையினர் அந்த நடவடிக்கையை மேற்கொள்வார்களாயின் ஜனநாயக உரிமைக்கான எதிர்ப்புப் போராட்டங்களையும் காணி உரிமைக்கான மக்கள் அமைப்பின் தலைவர் என்ற வகையில் வடமாகாண காணி உரிமைக்கான மக்கள் அமைப்பு அதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.எனவே உடனடியாக சம்பந்தப்பட்டவர்கள் அந்தப் பகுதிகளுக்கு விரைந்து காணி உரிமைகளை மீட்பதற்கான ஆவன செய்யுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.- என்றார்.